பேச்சு:சுவாதி கொலை வழக்கு

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

காண்க:பேச்சு:தில்சன் கொலை நிகழ்வு--மணியன் (பேச்சு) 14:24, 1 சூலை 2016 (UTC)[பதிலளி]

பலமுறை யோசித்த பிறகே இந்தக் கட்டுரையை எழுதத் தொடங்கினேன். இந்தக் கொலை நிகழ்வானது, தலைநகர் சென்னையில் கடந்த ஒரு வார காலமாக ஏற்படுத்தியுள்ள தாக்கத்தை உணர முடிந்தது. ஊடகங்களில் மட்டுமல்லாது, பொது மக்களிடமும் பேசப்பட்டு ஆங்காங்கே அஞ்சலிக் கூட்டங்கள் நடக்கின்றன. சென்னை உயர் நீதிமன்றம் தலையிட்டு, அரசுகளுக்கு சில கேள்விகளை வைத்துள்ளது. கொலைக்கான காரணம் இன்னமும் அறியப்படவில்லை; கொலையாளி இன்னமும் பிடிக்கப்படவில்லை. காவற்துறைக்கு சவாலான புலன்விசாரணையாக இவ்வழக்கு உள்ளது. நகரத்தின் தொடர்வண்டி நிலைய பாதுகாப்பு குறித்த கவலைகளும், கண்டனங்களும் எழுப்பப்பட்டுள்ளன. இவையெல்லாம் குறிப்பிடத்தக்கவையாகத் தெரிந்ததால், இக்கட்டுரையை எழுதத் தொடங்கினேன். எனினும் குறிப்பிடத்தக்கமை குறித்து விக்கி குமுகாயத்திற்கு கவலையிருப்பின், இக்கட்டுரையை நாம் நீக்கலாம்; எனக்கு எவ்வித வருத்தமும் ஏற்படப் போவதில்லை. வழக்கின் போக்கினை சில நாட்கள் கவனித்து, பின்னர் ஒரு முறை மீளாய்வு செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 18:16, 1 சூலை 2016 (UTC)[பதிலளி]