பேச்சு:சுற்றுப்பாதை வீச்சு
தொடக்கம் - தொடரும்
[தொகு]இக்கட்டுரையில்,
- "பெயர்ப்பதவியல்" (Terminology) என்ற தலைப்பின் கீழ்த் தந்துள்ள பதங்களை தரம் பார்ப்பதும், மேலும் பல மையப் பொருள்களுக்கான பதங்களை சேர்க்கவும் வேண்டும்.
- ஏனைய குறை மிகைவிலக்கங்களை மையவிலக்கம் என்ற இக்கட்டுரைக்கு ஆற்றுப்படுத்தவும்(மீள்வழிப்படுத்த)வேண்டும்.
முந்தயதற்க்கு செல்வாவையும் பிந்தயதற்க்கு கனக்ஸயும் நம்பியிருக்கிறேன் :-) -நரசிம்மவர்மன்10 10:29, 19 செப்டெம்பர் 2007 (UTC)
- நரசிம்மவர்மன், நெஞ்சார்ந்த பாராட்டுகள்! மிக நன்றாக கட்டுரையை எழுதியுள்ளீர்கள். periapsis, apapsis
என்பனவற்றை சிறும வீச்சு, பெரும வீச்சு எனக் குறிப்பது பொருந்தும் என நினைக்கிறேன். சிறுமம் = minimum, பெருமம்=maximam. Apsis என்பதற்குப் பொதுவாக உலா வீச்சு அல்லது சுற்றுப்பாதை வீச்சு என்று சொல்லாம். மையவிலக்கம் என்னும் சொலாட்சி மிகவும் நன்றாக உள்ளது, ஆனால் அது பொறியியலில் வேறு பொருள் தரவல்லது (Cams போன்றவற்றில் மையப் பிறழ்வு செய்வதைக் குறிக்கும், இதனையும் eccentricity என்றுதான் கூறுவர்; பொருள் வட்டமாகவே இருக்கலாம், ஆனால் மையத்தை விட்டு நகர்ந்து ஓரிடத்தில் அச்சு அமைந்தால் அப்பொருள் அசையும் பொழுது வீச்சு மாறும்)--செல்வா 12:17, 19 செப்டெம்பர் 2007 (UTC)
- முன்னர் நான் பகலவ குறைவிலக்கம், பகலவ மிகைவிலக்கம் என்று பரிந்துரைத்தேன் (பூமி கட்டுரையில்). எனவே, நடுவிருந்து குறைவிலக்கம், நடுவிருந்து மிகைவிலக்கம் என்றால் பொருந்தும் என நினைக்கிறேன். நடுவிருந்து விலகல் அல்லது நடுவிருந்து விலக்கம் என்றும் கூறலாம். அதாவது மையவிலக்கம் அல்லது நடுவிலக்கம் என்னும் பொழுது நடுவே (மையமே) நகர்ந்ததாக பொருள் தர வாய்ப்புள்ளது. இத்தகு "குழப்பங்கள்", வழக்கத்தால் சரியாகும் (தெளிவுபடும்) என்பது உண்மை. ஆனால் இயலும் பொழுது, மாற்றி அமைக்கலாமே என்பது என்பதுதான் கருத்து.--செல்வா 13:21, 19 செப்டெம்பர் 2007 (UTC)
விலக்கம் -> வீச்சு/மையம் -> நடுவிலிருந்து
[தொகு]தங்களின் கருத்துக்களை ஏற்று அவற்றை செயலாக்கியும் விட்டேன். "மையவிலக்கம்" எனப்பெயரிட முதலில் தயக்கம் இருந்தபோதிலும் "வட்டவிலகல்" கட்டுரை இருப்பதனால் குழப்பம் நேர வாய்ப்பில்லை எனவென்னினேன், பொறியியலில் இச்சொல் ஆளப்படுவதை உணர்த்தியமைக்கு நன்றி! -நரசிம்மவர்மன்10 05:48, 20 செப்டெம்பர் 2007 (UTC)