பேச்சு:சுற்றுப்பாதையின் வட்டவிலகல்
நரசிம்மவர்மன், உங்கள் கட்டுரை மிக நன்றாக உள்ளது. என் நெஞ்சார்ந்த பாராட்டுகள்! இந்த கட்டுரையின் தலைப்பை நடுவிலக்கம், நடுவிலகல்,, மைய விலக்கம், மைய விலகல் என்பவற்றுள் ஏதேனும் ஒன்றாக இருத்தல் வேண்டும் என்பது என் கருத்து. நடுவிலக்கம் அல்லது நடுப்பிறழ்வு என்றும் கூறலாம். --செல்வா 11:57, 7 செப்டெம்பர் 2007 (UTC)
- Orbital eccentricity - சுற்றுப்பாதை மையவிலகல்?? --Kanags 12:16, 7 செப்டெம்பர் 2007 (UTC)
- ஆம் சுற்றுப்பாதை நடுவிலக்கம் எனலாம் (அல்லது சுற்றுப்பாதை மையவிலகல், சுற்றுப்பாதை மையவிலக்கம், சுற்றுப்பாதை நடுவிலகல், சுற்றுப்பாதை நடுப்பிறழ்வு, சுற்றுப்பாதை நடுப்பிறழ்ச்சி என்று ஏதேனும் ஒன்று). --செல்வா 21:55, 7 செப்டெம்பர் 2007 (UTC)
- சீரற்ற திடக்கோளவடிவங்களின் பிறழ்வையளக்க quadrupole moment என்பதுவும் உண்டு (ஆனால், அது மின்னூட்டுப் பெற்ற கோளங்களுக்கே பொறுந்துமென நினைக்கின்றேன், இருபினும்) அவ்விலகளினின்று இதை வேறுபடுத்திக்காட்டவே வட்ட விலகல் எனக்கொண்டாள வேண்டியதாயிற்று!
வட்டத்தை தவிர ஏனைய கூம்பு வெட்டு வடிவங்களுக்கு “மையம்” என்பதில்லை!
தோழர் கனகர் சுட்டியதைப்போல் சுற்றுப்பாதை விலகல் எனவும் குறிப்பிடலாம், எனினும் இந்தப்பண்பு எந்தவொரு கூம்பு வெட்டு வடிவங்களுக்கும் பொறுந்தும் என்பதால் பொதுவாக பெயரிட்டேன். (“சுற்றுப்பாதை” என்பதை முன்கொளாவிடினும் அஃது குறிப்பால் உணரப்படும், மட்டுமின்றி கோள்களின் பக்கங்களின் தரவு அட்டவனையில் இப்பெயர் கச்சிதமாயடங்கும் என்பதையும் கருத்தில் கொண்டே சுற்றுப்பாதை என்பதை சேர்கவில்லை!)
என் விளக்கங்களை அளித்துவிட்டேன், இவற்றை கருத்தில் கொண்டு மறுமுறை ஆலோசிக்குமாறு தாழ்மையோடு வேண்டுகிறேன். தாங்கள் அளித்த அளிக்கவிருக்கின்ற ஆலோசனைகளுக்கு இதயங்கனிந்த நன்றி!
-நரசிம்மவர்மன்10 06:14, 10 செப்டெம்பர் 2007 (UTC)
நரசிம்மவர்மன், உங்கள் கருத்தை ஏற்றுக் கொள்கிறேன். eccentricity என்பதன் அர்த்தம் கூடுதலாக மையவிலகல் என்பதை விட வட்டவிலகல் (இரு ஒரு சொல்லாக இருக்க வேண்டும் என்பது என் அபிப்பிராயம்) என்பதற்குப் பொருத்தமாக இருக்கிறது. எனினும் இக்கட்டுரை வானியல் சம்பந்தப்பட்டிருத்தலால் சுற்றுப்பாதையையும் தலைப்பில் சேர்ப்பது பொருத்தமாகவிருக்கும். ("சுற்றுப்பாதையின் வட்டவிலகல்" என்பது இன்னும் நல்லது). வேண்டுமானால் "வட்டவிலகல்" (eccentricity) என்ற பொதுவான வேறொரு கட்டுரை எழுதலாம்.--Kanags 09:52, 10 செப்டெம்பர் 2007 (UTC)
Start a discussion about சுற்றுப்பாதையின் வட்டவிலகல்
Talk pages are where people discuss how to make content on விக்கிப்பீடியா the best that it can be. You can use this page to start a discussion with others about how to improve சுற்றுப்பாதையின் வட்டவிலகல்.