பேச்சு:சிவகிரி (தென்காசி)

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இது என் நண்பன் (பயனர்: இம்மானுவேல்) எழுதினார். அவர் இன்றுதான் தமிழ் விக்கிப்பீடியாவிற்கு அடியேனால் அறிமுகப்படுத்தப்பட்டார் என்பதையும் பெருமையோடு தெரிவித்துக் கொள்கிறேன். வந்தவுடனேயே அவரது ஊருக்கானக்கட்டுரையைத் தேடினார். ஆனால் மிஞ்சியது ஏமாற்றமே! ஏனெனில் சிவகிரி எனும் கட்டுரை ஈரோட்டுச் சிவகிரியைப் பற்றியே கூறியதால், அவரே எழுதிவிட்டார். மேலும் ஒரு தகவல் தெரிவிக்க ஆசைப் படுகிறேன். அவர் முன்பின் கணினி அறிவு இல்லாதவர் ஆவார். (மேல்நிலைப் பள்ளியில் உயிரியல் படித்தவர்!) அவரே முயன்று அடியேனின் சிறு சிறு வழிகாட்டுதல்கள் மூலம் இக்குறுங்கட்டுரையை எழுதினார்.

அவர் புதுமையாக உணர்ந்தவை!

  • தமிழ் விக்கியின் நற்றமிழ்ச் சொற்கள்
  • தமிழ் விக்கியின் இடைமுகம்
  • எளிய சொற்கள்

அவர் கடினமாக உணர்ந்தவை!

  • தமிழ்த் தட்டச்சு (அவருக்குத் தட்டச்சு அனுபவம் குறைவு!)
  • புதிதாகச் சேர்க்கப்பட்டிருக்கும் தமிழ்த் தட்டச்சுக் கருவியில் உள்ள பிழைகள்

அன்பு விக்கியன் --சூர்ய பிரகாசு.ச.அ. 12:07, 8 திசம்பர் 2010 (UTC)[பதிலளி]