சிவகிரி (ஈரோடு)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
சிவகிரி
—  பேரூராட்சி  —
சிவகிரி
இருப்பிடம்: சிவகிரி
, தமிழ்நாடு , இந்தியா
அமைவிடம் 11°07′N 77°48′E / 11.12°N 77.80°E / 11.12; 77.80ஆள்கூற்று: 11°07′N 77°48′E / 11.12°N 77.80°E / 11.12; 77.80
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் ஈரோடு
வட்டம் கொடுமுடி
ஆளுநர் பன்வாரிலால் புரோகித்[1]
முதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]
மாவட்ட ஆட்சியர்
பேரூராட்சி தலைவர் பரமு என்கிற பரமசிவம்
மக்கள் தொகை

அடர்த்தி

17,979 (2011)

768/km2 (1,989/sq mi)

நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு

உயரம்

23.40 சதுர கிலோமீட்டர்கள் (9.03 sq mi)

165 மீட்டர்கள் (541 ft)

இணையதளம் www.townpanchayat.in/sivagiri-erode

சிவகிரி, தமிழ்நாட்டின் ஈரோடு மாவட்டம், கொடுமுடி வட்டத்தில் அமைந்த பேரூராட்சி]] ஆகும். சிவகிரியானது கோட்டைப்புதூர், அண்ணாமலைக் கோட்டை என 18 ஊர்களை உள்டக்கியது.

சிவகிரியில் குழந்தை வேலாயுத சுவாமி கோவில், பொன்காளி அம்மன் கோவில், நாகேஸ்வரசுவாமி, கலியுக வரதராஜ பெருமாள் கோயில் உள்ளது. மேலும் 18 சித்தர்களில் ஒருவரான புலிப்பாணி சித்தருக்கு சுனைகுன்றில் கோவில் அமைந்துள்ளது. இப்பேரூராட்சியில் விசைத்தறிகள் மற்றும் விவசாயம் சார்ந்த இயந்திர தளவாடங்கள் உற்பத்தி செய்யப்படுகிறது.

அமைவிடம்[தொகு]

ஈரோடு - வெள்ளக்கோயில் மாநில நெடுஞ்சாலையில் அமைந்த சிவகிரி பேரூராட்சி, ஈரோட்டிலிருந்து 32 கிமீ தொலைவில் உள்ளது. இதன் தெற்கே வெள்ளக்கோயில் 28 கிமீ தொலைவில் உள்ளது. அருகமைந்த தொடருந்து நிலையம், 12 கிமீ தொலைவில் உள்ள ஊஞ்சலூரில் உள்ளது.

பேரூராட்சியின் அமைப்பு[தொகு]

23.40 சகிமீ பரப்பும், 18 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும், 49 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி மொடக்குறிச்சி (சட்டமன்றத் தொகுதி)க்கும், ஈரோடு மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது. [3]

மக்கள் தொகை பரம்பல்[தொகு]

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 5,407 வீடுகளும், 17,979 மக்கள்தொகையும் கொண்டது.[4]

புவியியல்[தொகு]

இவ்வூரின் அமைவிடம் 11°07′N 77°48′E / 11.12°N 77.80°E / 11.12; 77.80[5] ஆகும். கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 165 மீட்டர் (541 அடி) உயரத்தில் இருக்கின்றது.

மேற்கோள்கள்[தொகு]

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
  3. சிவகிரி பேரூராட்சியின் இணையதளம்
  4. Sivagiri Population Census 2011
  5. Falling Rain Genomics, Inc - Sivagiri
"https://ta.wikipedia.org/w/index.php?title=சிவகிரி_(ஈரோடு)&oldid=2742256" இருந்து மீள்விக்கப்பட்டது