பேச்சு:சிலந்திபிடிப்பான்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தமிழில் பெயர்க்காரணம் அல்லது ஆதாரம் கட்டுரையின் மேற்கோள் 2-ல் கொடுக்கப்பட்டுள்ளது.--PARITHIMATHI (பேச்சு) 14:06, 12 மே 2021 (UTC)[பதிலளி]

பறவைகளின் தமிழ்ப்பெயர்கள் எனும் விக்கி கட்டுரையில் இதன் தலைப்பு LITTLE SPIDERHUNTER - சின்னச் சிலந்திபிடிப்பான் என கொடுக்கப்பட்டுள்ளது. https://ta.wikipedia.org/s/zu மேலும் SPIDERHUNTER எனும் கட்டுரை ஆங்கிலத்தில் (https://en.wikipedia.org/wiki/Spiderhunter) உள்ளது. இதனை தமிழில் எவ்வாறு மொழிபெயர்ப்பது. மேலும் கட்டுரையில் மேற்கோள் காட்டியதில் SPIDERHUNTER என்பதற்குதான் சிலந்திபிடிப்பான் என்று எடுத்துகொள்ள வேண்டும். LITTLE SPIDERHUNTER என்பதை தேன்கிளிமாடன் என எடுத்துகொள்ளலாம். அல்லது சின்னச் சிலந்திபிடிப்பான் என எடுத்துக்கொள்ள வேண்டும். எனவே தலைப்பினை மாற்றவும். --சத்திரத்தான் (பேச்சு) 15:23, 12 மே 2021 (UTC)[பதிலளி]
Spiderhunter என்ற தலைப்பு அனைத்து வகை சிலந்திபிடிப்பான்களுக்கும் பொதுவான உள்ளீடுகளைக் கொண்டது. தமிழகத்தில் ஒரேயொரு சிலந்திபிடிப்பான் (Little spiderhunter) மட்டுமே காணப்படுவதால், சின்ன என்ற பதம் தேவையில்லை. பல்வேறு வகைகள் உள்ளினங்கள் இருந்தால், அவற்றை வேறுபடுத்த முன்னொட்டுகளைப் பயன்படுத்தலாம். இக்கட்டுரையில் உள்ள குருவியின் தமிழ்ப்பெயர் வலுவான தரவிலிருந்தே [க. ரத்னம் (1998). தமிழில் பறவைப் பெயர்கள். பக். 74 (398)] எடுத்தாளப்பட்டுள்ளது. மேலும், தேன்கிளி மாடான் என்ற பெயர் (Badshah, M.A. Check list of Birds of Tamilnadu) என்ற கையேட்டில் கொடுக்கப்பட்டுள்ளது. இது ஒரு சிறந்த தரவு என்றாலும், பல பெயர்கள் தவறாகக் கொடுக்கப்பட்டுள்ளமையாலும் பல பறவைகளின் பெயர்கள் தரப்படவில்லை என்பதாலும் தமிழகத்தில் உள்ள பறவை ஆர்வலர்களும் பறவை வல்லுனர்களும் முனைவர் க. ரத்னம் எழுதிய தமிழில் பறவைப் பெயர்கள் கையேட்டையே இறுதித் தரவாக வைத்துள்ளனர். தாங்கள் குறிப்பிட்டுள்ள இடத்தில் [1] மாற்றம் செய்ய வேண்டும்.--PARITHIMATHI (பேச்சு) 16:00, 12 மே 2021 (UTC)[பதிலளி]
அன்புடையீர், Spiderhunter அனைத்து வகை சிலந்திபிடிப்பான்களுக்கும் பொதுவான உள்ளீடுகளை கொண்டதை ஏற்றுக்கொண்ட தாங்கள் அதனை எவ்வாறு மொழிபெயர்ப்பது எனக் கூறவில்லை (தமிழ்நாட்டில் அச்சிற்றினங்கள் இல்லாததால் தமிழ்படுத்த தேவையில்லையோ). தமிழகத்தில் வேறு சிலந்திப்பிடிப்பான் இல்லை அதனால் முன்னொட்டு தேவையில்லை என்ற வாதம் ஏற்றுக்கொள்ள இயலாதது. ஏனெனில் தமிழகத்தையும் தாண்டி பல நாடுகளில் வாழும் தமிழர்கள் அங்குள்ள விலங்குகள் குறித்த கட்டுரைகளையும் தமிழ்படுத்தியுள்ளனர். மேலும் அறிவியலில் கண்டுபிடிப்புகள் தொடர்ச்சியானது. இன்று இல்லாமல் இருக்கலாம் பிறிதொரு நாளில் அவை ஆய்வின் மூலம் அறிய வரலாம். மேலும் தாங்கள் சுட்டிக்காட்டிய மேற்கோள் புத்தகம் என்பது ஒரு பட்டியல் தான். இதனை வழிகாட்டி நூலாகாத்தான் எடுத்துகொள்ள வேண்டும். விக்கியில் அனுபவமிக்க தங்களைப் போன்றவரிடம் இதுபோன்ற பதிலை எதிர்பார்க்கவில்லை. நன்றி.

தலைப்பு குறித்து[தொகு]

சில முக்கிய கருத்துகளை மாறுபட்ட கோணங்களில் சிந்திக்கும் வகையில் எடுத்து வைத்துள்ளீர்கள் (தாங்கள் யாரென்று கையொப்பம் இடவில்லை!). நன்றி.

  • ... தமிழகத்தையும் தாண்டி பல நாடுகளில் வாழும் தமிழர்கள் ... அறிவியலில் கண்டுபிடிப்புகள் தொடர்ச்சியானது ... மிகவும் சரி. தமிழ் விக்கிப்பீடியாவை மென்மேலும் செறிவுடன் கூடிய அறிவுப் புதையலாக மேம்படுத்துவதற்கு பலரும் (பல நாடுகளில் உள்ள தமிழர்கள், தமிழ் தெரிந்தோர்) சேர்ந்து உழைக்க வேண்டும். எனினும், விலங்குகள், பறவைகள் ... ஆகியவற்றிற்குப் பெயரிடும் போது மேற்கொள்ள வேண்டிய சில அடிப்படைகள் பற்றி மட்டுமே என் கவலை.
  1. தமிழ் விக்கிப்பீடியாவிலேயே பல பெயர்கள் நேரடி மொழிபெயர்ப்பினால் உருமாறிப்போயுள்ளன.
  2. கள அறிவு இன்றி பெயர்களை இடும் போக்கு.
  3. தனித்தமிழ் நடை.

இத்தகைய போக்குகள் த. வி.-ஐப் பற்றிய தவறான பிம்பத்தைப் பிறரிடம் உருவாக்கலாம். [உ-ம் த. வி is a closed community (not open to ideas)]

  • ... தாங்கள் சுட்டிக்காட்டிய மேற்கோள் புத்தகம் என்பது ஒரு பட்டியல் தான் ... ஏற்க இயலாத கருத்து. முனைவர் க. ரத்னம் தமிழில் பறவைகளைப் பற்றி எழுதியதில் முன்னோடி; கிட்டத்தட்ட 19 நூல்களை ஆய்வு செய்து, களத்தில் சென்று அங்குள்ள வழக்கு பெயர்களையும் சேகரித்துத் தொகுத்த நூல் "தமிழில் பறவைப் பெயர்கள்" மற்றும் "தமிழ்நாட்டுப் பறவைகள்". தற்போது களப்பணி/கள ஆய்வு செய்பவர்களும் இறுதியாக எடுத்துக் கொள்வது அன்னாரின் நூலில் உள்ள பெயரைத் தான். அந்நூலில் விடுபட்ட பெயர்களுக்குத் தான் பிற கையேடுகளைக் காண்பது வழக்கம். சில பெயர்களில் ரத்னம் அவர்களின் நூலிலும் கூட பொதுவான பெயர்கள் இருக்கும். அப்போது பிற கையேடுகளை நாடுவர்.
  • ...விக்கியில் அனுபவமிக்க தங்களைப் போன்றவரிடம்... தனி நபர் மதிப்பீடுகள் வேண்டாமே!

பெயர்கள் குறித்த ஐயம் அல்லது வேறுபட்ட பார்வைகள் தேவையே. அவற்றை அலசி ஆராய்ந்து, தீர்ப்போம். அதே சமயம், உள்ளீடுகளை (கட்டுரைகளை) செழுமையாக்கி அனைவரும், குறிப்பாக மாணவர்கள், பயன்படுத்தும் வண்ணம் சரியான களஞ்சியமாக த.வி.-ஐ உருவாக்குவோம்.PARITHIMATHI (பேச்சு) 17:18, 13 மே 2021 (UTC)[பதிலளி]

அன்புடையீர், கையொப்பம் இட மறந்ததற்கு வருந்துகிறேன். நான் கூற வந்த வற்றில் உள்ள எதார்த்தத்தினை புரிகொண்டதற்கு நன்றி. என்னுடைய தொகுப்பில் பயனர் எவரும் தவறினை சுட்டிக்காட்டினும் நான் ஏற்றுக் கொள்ளத் தயங்கியதில்லை. பொதுவாக வகைப்பாட்டியலில் உள்ள குறைபாடுகள் பல களையப்பட வேண்டியதுள்ளது.

....விலங்குகள், பறவைகள் ... ஆகியவற்றிற்குப் பெயரிடும் போது மேற்கொள்ள வேண்டிய சில அடிப்படைகள்... விதிகள் எதுவும் இருந்தால் தெரிவித்தால், பயனுள்ளதாக இருக்கும். தனி நபர் மதிப்பீடு எதுவும் என்னுடைய பேச்சில் இல்லை. இருந்ததாக தாங்கள் கருதினால், வருந்துகிறேன். --சத்திரத்தான் (பேச்சு) 05:29, 14 மே 2021 (UTC)[பதிலளி]