பேச்சு:சித்திரக்கதை இதழ்கள்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

Comics தானே? --சூர்ய பிரகாசு.ச.அ. 07:43, 15 ஏப்ரல் 2011 (UTC)

Comics என்று சொல்லமுடியாது. comics அல்லாத படக்கதைகளும் உள்ளன. மேலும் காமிக்சுக்கு வரைகதை என்ற கட்டுரை உள்ளது.--சோடாபாட்டில்உரையாடுக 07:48, 15 ஏப்ரல் 2011 (UTC)

தமிழ்நாட்டில் இவ்வாறான இதழ்கள் எதுவும் வெளிவந்ததாக நான் அறியேன். ஆனால் சில சித்திரக்கதை வடிவில் நூல்கள் வெளிவந்து வாசித்துள்ளேன். அவற்றில் அநேகமானவை ஆங்கிலத்தில் வெளிவந்தவைகளின் தமிழாக்கமாகவே இருக்கும். --HK Arun 07:52, 15 ஏப்ரல் 2011 (UTC)

தமிழ்நாட்டில் வந்துள்ளன. பார்வதி சித்திரைக் கதைகள், வாண்டு மாமா வின் கதைகள், இந்தியில் வரும் அமர் சித்திரா கதாவின் தமிழ் பதிப்புகள், பூந்தளிர் இதழ், டுவிங்கிள் டைஜஸ்ட் போன்றவற்றை நான் படித்திருக்கிறேன். தமிழ் காமிக்ஸ் உலகம் போன்ற தளங்களில் விசாரித்தால் பிறவும் தெரிய வரும்--சோடாபாட்டில்உரையாடுக 08:04, 15 ஏப்ரல் 2011 (UTC)
அப்போது Comics (வரைகதை) என்பதும் சித்திரக்கதை என்பதும் வேறு வேறா? எனக்குப் புரியவில்லை. தெளிவுபடுத்தவும். (அதாவது இக்கட்டுரையும் மேலே சோடாபாட்டில் குறிப்பிடும் கட்டுரையும் எதனைக் குறிக்கின்றன?)

--சூர்ய பிரகாசு.ச.அ. 08:17, 15 ஏப்ரல் 2011 (UTC)

ஆம் வேறே. காமிக்சு என்பது சித்திரக்கதைகளில் ஒரு பிரிவு. --சோடாபாட்டில்உரையாடுக 08:21, 15 ஏப்ரல் 2011 (UTC)