பேச்சு:சிக்கிலிடே

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பாராட்டுகள் சுந்தர்! பிரான்சிய மொழியும், எசுப்பானியமும் உருசியமும் பதிவிடும் முன்னரே தமிழில் பதிவிட்டது நல்வெற்றி!! இப்படியே உழைத்து வந்தால், 10-20 என்பது 100-200 என்பதாக நாம் முந்திப் பதிவிட்டதாகும். பிறகு 1000-2000 என்று ஆனால் அது ஒரு நல்ல வளர்ச்சியையும் விழிப்புணர்வையும் காட்டும். இவை எல்லாம் நாம் நமக்குள் ஊக்கம் பெறும்பொருட்டே. சில செய்திகளை ஆங்கில விக்கியில் பதியும் முன்னரே கூட நாம் த.வி-யில் பதிவிட்டிருக்கின்றோம் (அறிவியல் செய்திகளைச் சொல்கின்றேன்). மீண்டும் பாராட்டுகள்! :) --செல்வா 05:54, 24 பெப்ரவரி 2012 (UTC)

நன்றி செல்வா. ஆம், இதுபோன்ற கண்டுபிடிப்புகளைச் சூட்டோடு சூடாகத் தரும்போது இன்பம் தருகிறது. இக்கட்டுரையை எழுதிவிட்டுப் பார்த்தபோது ஆங்கிலத்தில் மட்டுமே ஒரு குறுங்கட்டுரை இருந்தது. இவ்வாறு உடனுக்குடன் தருவதைப் படிப்பவர்களும் கவனிக்கத் தொடங்கினால் தினம் ஒருமுறை நம் தளத்துக்கு வரத்தூண்டலாம். செய்தித்தாள்கள் கூட நம் தளத்தை நோட்டம் விட்டுப் புதிதாக ஏதும் செய்தி கிடைக்கிறதா எனப் பார்க்க வாய்ப்புண்டு. -- சுந்தர் \பேச்சு 06:03, 24 பெப்ரவரி 2012 (UTC)
ஆம் சுந்தர் இங்குப் பார்த்தேன். ஆங்கிலத்துக்கு அடுத்து தமிழில்தான் (அதுவும் ஒரே நாளில்). கணிதத்திலும் பல கட்டுரைகள் இப்படி உள்ளன (இத்தனைக்கும் அவை அறிந்த தலைப்பாக இருந்தாலும், கட்டுரை உருவானதைக் கொண்டு முதல் 5-10 மொழிகளுக்குள் ஒன்றாகவும், இந்திய மொழிகளுள் முதலாவதாகவும் இருப்பது, "முன்னணி" அறிவுச் செய்திகளைத் தாங்கி உள்ளது என்பதைக் காட்டுகின்றது.)--செல்வா 06:20, 24 பெப்ரவரி 2012 (UTC)
ஆம், செல்வா. நானும் பலமுறை கண்டிருக்கிறேன். நீங்கள் தொடங்கிய சில கட்டுரைகள் ஆங்கில விக்கியில்கூட இல்லாமல் இருந்ததையும் பார்த்திருக்கிறேன். தொடர்ந்து இவ்வாறு நாம் அனைவரும் அவரவர் ஆர்வத்துறையில் எழுதி வரலாம். அவ்வப்போது முதல்பக்கத்தில் செய்தியாகவும் தரலாம். -- சுந்தர் \பேச்சு 06:45, 24 பெப்ரவரி 2012 (UTC)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:சிக்கிலிடே&oldid=1034944" இலிருந்து மீள்விக்கப்பட்டது