பேச்சு:கோத்திரம்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

Gothra (கோ'த்திரம்) என்பதும் தமிழில் கோத்திரம் என்பதும் ஒன்றா என்பது விளங்கவில்லை. தமிழில் கோ என்றால் தலைவன், அரசன் என்று பொருள். சமசுக்கிருதச் சொல்லில் வரும் முதல் எழுத்து மெலிந்த ககரம் (கோ3), அதற்கு பசு, மாடு என்று பொருள். பசுத்தொழுவம் என்பதில் இருந்து இல்லம் வீடு என்று பொருள் சுட்டு வந்ததாகக் கூறுவர். இவை பொருத்தம்மானதாக எனக்கு எப்பொழுதும் பட்டதில்லை. வருணாசிரம் முறை என்பது ஒருசிலரால் தாங்களாக உருவாக்கிக்கொண்ட வகுப்பு முறை. இதனை மக்கள் மீது திணிக்க முற்பட்டனர் (சுமிருதி நூலார்- மனு, விட்டுணு, யஞ்ஞவாக்ய முதலானவர்). கணக்கற்ற குழப்பங்கள் எழுந்தன. "கலப்பு" வருணங்களின் பெயர்கள், அவர்களின் வழித்தோன்றல்கள் எந்த வருணத்தைச் சார்ந்தவர்கள்..என்று --இவை அனைத்தும் ஒரு சிலரின் கற்பனைப் பாகுபாடு என்பதனை நினைவில் கொள்ள வேண்டும்...இந்தக் கற்பனைத் திட்டத்தில் எல்லோருக்கும் கோத்திரம் இருந்தது என்பதற்கான சான்றுகளைத் தாருங்கள். சூத்திரர்கள் என்று சொல்லப்பட்டவர்களுக்கும் பஞ்சமர்கள் என்று நால்வருண பாகுபாட்டில் சேராதவர்களுக்கும், தீண்டாமையையும் தாண்டி காணக்கூடாத மக்களுக்கும் ("unlookable") (இவர்கள் கணிப்பில்) கோ'த்திரங்கள் இருந்தனவா? இப்படியான கட்டுரைகளைச் சற்று நடுநிலையில் நின்று, வரலாற்று அடிபப்டையில், தக்க சான்றுகோள்களுடன், எழுதுதல் வேண்டும். வருணாச்சிரம கருத்துகளைப் பதிவு செய்யக்கூடாது என்று சொல்லவில்லை, ஆனால் அதனைப் பக்குவமாக, நடுநிலை நின்று கருத்துச் செறிவாக, சான்றுகோள்களுடன் எழுத வேண்டும் என்பது என் கருத்து. தமிழில் கோத்திரம் என்பது தமிழ்ச்சொல்லான கோ என்பதில் இருந்து வேறுபொருள் தரும். ஆனால் இது வேறு என்றுநினைக்கின்றேன். --செல்வா 05:04, 15 ஜூலை 2010 (UTC)

தமிழில் கோத்திரம் என்றால் குலம் என்று பொருள். இத்தலைப்பு கோத்திரம் (இந்து சமயம்) என்றிருக்க வேண்டுமன்றோ?--பாஹிம் (பேச்சு) 06:19, 9 சனவரி 2019 (UTC)[பதிலளி]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:கோத்திரம்&oldid=2627626" இலிருந்து மீள்விக்கப்பட்டது