பேச்சு:கொலஸ்டிரால்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கொலஸ்டிரால் உயிரியல் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித் திட்டம் உயிரியல் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.

Cholesterol என்பதனையும் கொழுப்பு (Fat) என்றே தவறாக அழைக்கின்றோம். Cholesterol என்பதன் தமிழ் பதம் என்ன? --குறும்பன் 00:14, 1 நவம்பர் 2009 (UTC)[பதிலளி]

இரத்தக் கொழுப்பு என்று [1] சொல்கிறது.--Kanags \பேச்சு 02:31, 1 நவம்பர் 2009 (UTC)[பதிலளி]
கொலசுட்ரால் என்பதும் ஒருவகையான கொழுப்புப்பொருள்தான். கொலசுட்ரால் என்பது குருதியில் காணப்படும் இசுடெரால் (sterol)-வகை பித்தக்கொழுப்பு. கொலசுட்ராலை கொலசுட்ரால் என்றே குறிப்பது நல்லது, ஆனால் கூடவே குருதிப் பித்தக்கொழுப்பு என்றும் அழைத்து வரலாம். ஆங்கில விக்கியில் "The name cholesterol originates from the Greek chole- (bile) and stereos (solid), and the chemical suffix -ol for an alcohol, as François Poulletier de la Salle first identified cholesterol in solid form in gallstones, in 1769. However, it was only in 1815 that chemist Eugène Chevreul named the compound "cholesterine' என்கிறது. பை'ல் (bile) ல்லது பித்தநீர் என்பது கல்லீரலில் சுரக்கும் மஞ்சள்-பச்சை நிற நீர்மம். இது கொழுப்பை செரிக்க உதவுவது. ஆங்கிலத்தில் வே'ட் (fat), லிப்பிடு (lipid), டிரைகிளிசரைடு என்பனவும் கொழுப்புகள்தான். லிப்பிடு என்பதை கொழுப்பியம் எனலாம். கொழுப்பு என்பது பிசுப்ப்புத்தன்மையுடனோ மெழுகுத்தன்மையுடனோ இருக்கும் ஒன்று. --செல்வா 18:39, 4 நவம்பர் 2009 (UTC)[பதிலளி]
fat, lipid, cholesterol ஆகிய மூன்றும் வெவ்வேறு. நாம் பொதுவாக கொழுப்பு என்பது fat ஐத்தான். cholesterol (கோலிஸ்டீரால்) இரத்தத்திலும் பித்தத்திலும் மட்டும் இல்லை. செல் உறைக்குப் பற்றுத் தன்மை கொடுப்பதே cholesterol தான். மேலும் பால் வளரூக்கிகளும் கொலஸ்டிரால் வழிப்பெறுதிகளே! தாவர எண்ணெய்களில் கொலஸ்டிரால் இல்லவே இல்லை! சிறுநீரில் முதலில் கண்டறியப்பட்டதால் ‌யூரியா எனும் பெயர் வந்தது ‌போல் பித்த நீரில் முதலில் கண்டறியப்பட்டதால் கொலஸ்டிரால் எனும் பெயர் பெற்றுள்ளது. செல்வா சொல்வது போல கொலசுட்ராலை கொலசுட்ரால் என்றே குறிப்பது நல்லது என்ற நினைக்கிறேன். --பெ. கார்த்திகேயன் (Karthi.dr)\உரையாடுக 07:34, 4 பெப்ரவரி 2011 (UTC)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:கொலஸ்டிரால்&oldid=1581493" இலிருந்து மீள்விக்கப்பட்டது