பேச்சு:கூகுள் எர்த்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

வணிகப் பெயர்களை அதிகாரப்பூர்வமற்ற முறையில் மொழிபெயர்க்க வேண்டாமே! கூகுள் எர்த் என்றே தலைப்பை வைக்கலாம். கட்டுரையில் வேண்டுமானால் அடைப்புக்குறிகளுக்குள் தமிழில் பொருளை தரலாம். --ரவி 12:57, 2 ஜூலை 2006 (UTC)

ஆம். அதுதான் சரியெனப் படுகிறது. -- 04:44, 3 ஜூலை 2006 (UTC)

வணிகப்பெயர்களை மொழிபெயர்க்கக்கூடாது என்ற கருத்தை நானும் ஆமோதிக்கிறேன். இதற்கு முன்னரும் இப்படி ஒரு விவாதம் இடம்பெற்றது. அங்கே ஒரு நடைமுறையினை பரிந்துரைத்து ஆமோதித்துமிருந்தோம். பார்க்க --மு.மயூரன் 07:12, 3 ஜூலை 2006 (UTC)

அனைவரின் ஆலோசனைக்கும் இணங்க பக்கமானது மீள் வழிநடத்தப் பட்டுள்ளது. --Umapathy 07:46, 3 ஜூலை 2006 (UTC)

அடைப்புக்குறிகளுக்குள் ஆங்கில எழுத்துக்கூட்டல்[தொகு]

பக்கத் தலைப்புகளில் அடைப்புக்குறிகளுக்குள் ஆங்கில எழுத்துக்கூட்டலை தருவது அனைவருக்கும் இணக்கமா? எந்தெந்த தருணங்களில் இது மாதிரி செய்யலாம்? இதனால் வரக் கூடிய ஒரே வசதி குறைவு என்னவென்றால், செல் பொத்தானை அழுத்தி தேடும் போது அடைப்புக்குறிப் பெயர்களையும் சரியாக இட்டுத் தேட வேண்டும். பயனர் பரிந்துரைகளை அடுத்து இது குறித்து நடைக் கையேட்டில் இறுதி செய்யலாம்.--ரவி 07:55, 3 ஜூலை 2006 (UTC)

பிறைக் குறிகளுக்குள் ஆங்கில எழுத்தில் ஏதும் எழுதத் தேவை இல்லை எனபது என் கருத்தும் கூட.--C.R.Selvakumar 19:43, 3 ஜூலை 2006 (UTC)செல்வா
நன்றி செல்வா, ரவி ஆங்கிலத்தில் பிறைக் குறிகளுக்குள் (இலங்கைத் தமிழ்: அடைப்புக்குறிக்குள்) இருந்தவற்றை மீள் வழிநடத்தியுளேன். இடது கீழ் கரையோரத்தில் காணப்படும் ஆங்கில் விக்கிபிடியா இணைப்பின் மூலம் தலைப்பைப் பார்வையிடலாம் என்பதால் இது தேவையற்றது என்றே நினைக்கின்றேன். --Umapathy 07:08, 15 ஜூலை 2006 (UTC)

இக்கட்டுரையினை கூகுள் எர்த் என மாற்றுமாறு கேட்டுக்கொள்கிறேன்.ஸ்ரீ (talk) 04:52, 13 மே 2019 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:கூகுள்_எர்த்&oldid=2732236" இருந்து மீள்விக்கப்பட்டது