பேச்சு:குநோம்
Untitled
[தொகு]இதனை லினக்ஸ் என்பதன் கீழ் பகுக்க வேண்டாம் எனக் கேட்டுக் கொள்கிறேன். கட்டற்ற மென்பொருட்கள் என வகைப் படுத்தி அதன் கீழ் தொகுக்குமாறும் கேட்டுக் கொள்கிறேன். லினக்ஸ் என்பது கெர்னல் மட்டுமே. பி. எஸ். டி போன்ற வெளியீடுகளிலும் குநோம் மேசைத் தளம் உண்டாகையால் லினக்ஸ் என்ற பகுப்பு பொருத்தமானதாக இருக்காது என்பது எமது தாழ்மையானக் கருத்து.
Amachu 01:53, 22 மார்ச் 2007 (UTC)
குனோம் எதிர் குநோம் எது சரி?.--Umapathy 03:31, 22 மார்ச் 2007 (UTC)
ஆங்கிலத்தில் வரக்கூடிய உச்சரிப்பில் G கிட்டத்தட்ட ஓசையற்றதாய் இருப்பதால் அதன் அடுத்த எழுத்து "ன" வாக இருப்பதை விட "ந" இருப்பது நலம் எனக்கருதியே குநோம் எனப் பெயரிட்டோம். இங்கும் நாம் "கு" என்பதை மெய்யெழுத்தில் துவங்கவேண்டாம் என "க்" க்கு பதிலாக பயன்படுத்தினோம்.
Amachu 07:31, 22 மார்ச் 2007 (UTC)
- குனோம் என்று இருப்பதே மேல். தமிழ் இலக்கணத்தில் குற்றியலுகரம் என்று ஒன்றுண்டு. பருப்பு என்றால் அதில் உள்ள கடைசி பு சற்று சுருக்கிய உகரமாய் ஒலிக்க வேண்டும். அதுபோல ஒரு புதிய முதலொலி குற்றியலுகரம் இக்காலத்திற்கு தேவை போல் தெரிகின்றது! முதல் ஒலி குற்றியலுகரம் அல்ல, அது வல்லின ககரமும் அல்ல என்பதை உணர்கிறேன். புதிய விதியாக
"பிறமொழிச் சொல்லில்
முதல் உகரம் கெட்டும்
வல்லொலி மெலிந்தும்
வருதல் வம்புறு மரபே
என்று ஒன்று ஆக்கிகொள்ளலாம் :) சிறிது திரிபாக ஒலிப்பதால் தவறில்லை. ஒவ்வொரு நாட்டாரும் ஒவ்வொரு விதமாகத்தான் ஒலிக்கின்றார்கள். குனோம் என்று எழுதி அப்படியே ஒலிப்பதாலும் ஏதும் தவறில்லை. --செல்வா 12:49, 22 மார்ச் 2007 (UTC)
குற்றியலுகர விதியை இவ்வாறு மாற்றிக்கொள்ளலாமென்றால், ஏன் மெய்யெழுத்து முன்னால் வரக்கூடியவாறு விதியை மாற்ற முடியாது? இந்த மாற்றம் பயனுள்ளதாக அமையுமில்லையா? பிறமொழி உச்சரிப்புக்களை பிழையின்றி உள்வாங்குவதற்கு உதவும். ஃபயர் பாக்ஸ் என்று பயன்படுத்துகிறோமே? ஃ முதலில் வருமா தமிழில்? --மு.மயூரன் 15:17, 22 மார்ச் 2007 (UTC)
- மயூரன், பிறமொழிச் சொற்களை அதிகம் திரிபில்லாமல் ஒலிக்க ஒரு எளிய முறையை நான் பரிந்துரைத்தேன் (இங்கு த.வி -யிலும்) - அதனை இங்கே பார்க்கலாம். இதனைப் பின்பற்றுவதால், தமிழ் மொழியின் ஒலிப்பாங்கு (எழுத்தொலிகளை முறைப்படி ஒலிக்கும் தமிழ்முறை) காப்பாற்றப்படும். பாபு என்று தமிழில் எழுதினால் தமிழ் முறைப்படி paabu என்றுதான் ஒலிக்க வேண்டும். தமிழின் ஒலிப்பாங்கு திரியாமல் இருக்க வேண்டுமென்றால் இத்தகு காப்புகள் செய்யப்படவேண்டும். ஆனால் பெரும்பாலோர் இதனை உணராமல் இருக்கின்றனர். குதி (kudhi) என்பதை தவறாக gudhi என்று ஒலிக்கின்றனர். பளு (paLu ) என்பதை baLU என்று தவறாக ஒலிகின்றனர். நான் பரிந்துரைத்த முறையப் பின் பற்றினால், ஜ்,ஜ,ஜி,ஜு.ஜூ, ஷ்,ஷ,ஷி,ஷு போன்ற சுமார் 100+ எழுத்துக்களை தவிர்க்கலாம். --செல்வா 16:09, 22 மார்ச் 2007
(UTC)
இப்போதைக்கு ஆழமாக இலக்கணத்துகுள்ளே வர வேண்டாம் என நினைக்கின்றோம். மேற்கூறிய படி தோன்றியதால் அவ்வாறு பயன்படுத்தினோம். குனோம் என்பது பக்கத்தினை எழுதத் துவங்கும் போது சிந்தைக்கே வரவில்லை.
GNU என்பதில் G ன் இருப்பை அறிந்து சொல்லியிருக்கிறோம். அதனாலோ என்னவோ GNU என்பதற்கு குனு என இதுவரை எழுதி வருகின்றோம். இதை விட GNOME லுள்ள G ல் நாம் பயன்படுத்திய மட்டில் ஓசை சற்று குறைவே! இதுவும் காரணமாக இருக்கலாம்.
Amachu 16:33, 22 மார்ச் 2007 (UTC)