பேச்சு:குடும்பிமலை புலிகளின் முகாம் வீழ்ச்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

தொப்பிகல? தொப்பிகலை மற்றும் குடும்பிமலை என தமிழ் பதம் இருக்கும்போது சிங்கள பதம் தேவையில்லை என்பது என் கருத்து முடிவில் மணலாறு வெளிஓயா ஆகிய கதைதான் நடக்கும்.கவனத்துடன்--கலாநிதி 16:43, 18 ஜூலை 2007 (UTC)

நன்றி கலாநிதி. தொப்பிக்கலை என்று தான் தமிழில் அழைக்கப்படுகிறது என நினைக்கிறேன் சரியா? குடும்பிமலை, தொப்பிக்கலை இரண்டும் ஒரே ஊரா அல்லது வேறு வேறா?--Kanags 08:57, 19 ஜூலை 2007 (UTC)

சிங்களத்தில் கல என்றால் கல் என்று தமிழில் வரும். தமிழிலும் சிங்களத்திலும் தொப்பி என்றால் தொப்பிதான். குடும்பிமலையும் தொப்பிகலவும் நானறிந்தவரையில் இரண்டும் ஒன்றுதான். மலையை அவதானித்துப் பார்த்தால் குடும்பி போன்று தோற்றமளிப்பதால் குடும்பி மலை என்று வந்திருக்கவேண்டும். இது திருகோணமலையில் இருந்து மட்டக்களப்பிற்கு ஹபரண ஊடாக செல்லும் வழியில் புனாவை என்கின்ற எல்லைப்பிரதேசத்தில் இருந்து இம்மலையைப் பார்க்கலாம். --Umapathy 09:52, 19 ஜூலை 2007 (UTC)

குடும்பிமலை, தொப்பிக்கலை இரண்டும் ஒன்றே ஆங்கிலத்தில் போரன் கப் எனவும் அழைக்கப்படுகின்றது.தொப்பிக்கல எனும் பிரதேசம் பற்றிய பல வரலாற்று புழுகுமூட்டைகள் (அது முற்றுமுழுதான சிங்களவரது பாரம்பரிய இடமென்றும்) அரச ஊடகங்களில் உயர்த்திப் பிடிக்கப்படுகின்றது.இந் நிலையில் குடும்பிமலை எனும் தமிழ் பதம் மறக்கடிக்கப்படக்கூடாது என்றே இக்கட்டுரை தலைப்பு மாற்றைத்தை வலியுறுத்தினேன்.--கலாநிதி 17:05, 19 ஜூலை 2007 (UTC)