பேச்சு:கீற்று முடைதல்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கீற்று முடைதல் எனும் இக்கட்டுரை முதற்பக்கத்தில் காட்சிப்படுத்திய கட்டுரைகளில் ஒன்று.
Wikipedia
Wikipedia

நல்ல கட்டுரை. சில கருத்துகளைப் பகிர்ந்துகொள்கிறேன். தென்னை மரத்தில் "இலை"யை ஓலை என்பர். ஓலை என்பது நீளமான இலை என்னும் குறிப்பைத் தரும் சிறப்புச்சொல். மட்டை என்பது ஓலைகள் இணைந்து இருக்கும் "கூட்டிலை"த் தண்டையும் ஓலைகளையும் சேர்த்துக் குறிக்கும் சொல். தென்னம் பாளை, பன்னாடை, குருத்து, குறும்பை போன்ற பல சொற்களின் விளக்கங்களும் எங்கேனும் பயனுறும்படி பதிவாக வேண்டும். மட்டைப் பின்னல் என்பதைவிட ஓலைப்பின்னல் என்பது பொருந்தும் (அரை மட்டையாகவோ, முழு மட்டையாகவோ இருந்த பொழுதும்). இதனைப் பொதுவாக கீற்று என்பர். கீற்றுக்கொட்டகை என்பது இப்படி ஓலைகளால் பின்னப்பட்ட மட்டைகளால் வேயப்பட்ட கூரை மற்றும் தடுப்புகள் உள்ள கொட்டகை என்று பொருள். பேச்சு வழக்கில் கீத்துக்கொட்டகை என்றும் சொல்வர். ஓலை என்பது போலவே கீற்று என்னும் சொல்லும் நீளமான இலையைச் சிறப்பாகச் சுட்டும் சொல். தென்னங்கீற்று என்றால் தென்னை மரத்தின் ஓலை. ஓலையின் நடுவே கெட்டியாக நீளமாக உள்ள நரம்புக்கு ஈர், ஈர்க்கு என்று பெயர். இதனைக் கொண்டு செய்யும் விளக்குமாறு ஈர்க்குமாறு (பேச்சு வழக்கில் ஈக்குமாறு) என்றும் சொல்வதுண்டு. --செல்வா 13:46, 4 ஏப்ரல் 2010 (UTC)

நன்றி . நானும் இக்கட்டுரையை தொகுக்கும் பொழுது சில நேரங்களில் ஓலை என்ற சொல் என்னை முட்டிக்கொண்டுதான் இருந்தது . நான் திருத்தம் செய்வது அவசியம் . நான் சிறுவயதில் இருந்த பொழுது இத்தொழில் செய்வோர்கள் மட்டையை எடுத்து வா? , மட்டையை பின்னிவிட்டாயா ? , என்று அவர்கள் பேசியது நினைவில் இருந்ததால் அவ்வாறே தொடங்கிவிட்டேன் . -- இராஜ்குமார் 14:18, 4 ஏப்ரல் 2010 (UTC)
ஆம் மட்டையை எடுத்துவா, மட்டையைப் பின்னிவிட்டாயா என்பன நானும் கேட்டிருக்கின்றேன், அவை முற்றிலும் சரியான பொருள் தருவதே. ஏனெனில் மட்டை என்பது "கூட்டிலை"யின் மொத்தத்தையும் குறிக்கும். எனவே எடுத்துவருவது மட்டைதான் (ஓலை அல்ல), மட்டையைப் பின்னைவிட்டாயா என்றால் மட்டையில் உள்ள ஓலைகளைப் பின்னிவிட்டாயா என்று பொருள். ஓலைமட்டை, கீற்றுமட்டை (கீத்துமட்டை) என்றும் சொல்லக் கேட்டிருக்கின்றேன். --செல்வா 15:12, 4 ஏப்ரல் 2010 (UTC)
மட்டை என்ற சொல்லை ஓலைகளைத் தாங்கி நிற்கும் தண்டையும் மொத்த கூட்டிலையையையும் குறிக்கப் பயன்படுத்துவார்கள். இந்தப் பின்னலை மதுரை மாவட்டத்தில் கிடுகு பின்னுதல் என்பார்கள். நானும் சில வேளைகளில் பின்னியுள்ளேன். -- சுந்தர் \பேச்சு 14:51, 4 ஏப்ரல் 2010 (UTC)

தலைப்பு[தொகு]

இக்கட்டுரைக்கு எந்த தலைப்பு பொருத்தமானது .

தென்ன மட்டை பின்னல் , தென்னங் கீற்று பின்னல் , தென்ன ஓலைப் பின்னல்

-- இராஜ்குமார் 14:32, 4 ஏப்ரல் 2010 (UTC)

தென்ங்கீற்றுப் பின்னல் சரியானது. ஆனால் இதனை முடைதல் (மிடைதல்)) என்றும் கூறுவார்கள் அல்லவா? பின்னிவிட்டாயா (பின்னிட்டியா) என்றும் கூறினாலும், இதனைப் பின்னல் என்று சொல்லிக் கேட்டதாக நினைவில்லை. அப்படிக் கூறுவதும் வழக்கமாக இருக்கலாம். முடைதல் (மிடைதல்) = பின்னல். தென்னக்கீற்று என்பது ஓலையாயினும், பின்னிய மட்டையையும் குறிக்கும் சொல். கீற்று என்னும் சொல் கிழித்தல், வகிர்ந்தல் என்னும் அடிப்படையில் இருந்து எழுந்த சொல். கீன்றல் என்றாலும் கிழித்தல். கீற்று என்னும் சொல் வைரம், இரத்தினம், மரகதம் முதலான விலைமிக்க நகைக்கற்களில் உள்ளே சிறு கோடு போலத் தெரியும் குற்றத்தையும் குறிக்கும். அகராதிகள் வைரக்குற்றங்கள் பன்னிரண்டில் ஒன்று என்று குறிக்கும். இந்த பன்னிரண்டு எவை எனத் தெரியாது, ஆனால், இரத்தினம் அல்லது மாணிக்கத்தின் குற்றங்களில் ஒன்றான புகை போன்று கீற்று என்பதும் ஒரு குற்றம். அடிப்படையில் படிகக் குற்றம். ஆங்கிலத்தில் பொருள் அறிவியலில் crystal defects என்போமே அதேதான் படிகக் குற்றம். அணுக்களில் சீரான அடுக்கு மாற்றத்தால் ஏற்படும் படிகக்குற்றங்கள்.--செல்வா 15:12, 4 ஏப்ரல் 2010 (UTC)

பன ஓலையில் கூடை முடைதல் என்று சொல்வதை நானும் கேட்டிருக்கிறேன் . கூடை முடைதல் , கீற்று பின்னுதல் , குடிசை கட்டுதல் , விசிறி செய்குதல் , இவ்வாறு பயன்படுத்தலாமா ? -- இராஜ்குமார் 15:26, 4 ஏப்ரல் 2010 (UTC)
கிடுகு பின்னுதல்/முடைதல் என்ற மாற்றுவழியையும் ஆக்கி வைக்க வேண்டும். சென்னைப் பல்கலைக்கழகப் பேரகரமுதலியும் கிடுகை முடைந்த ஓலைக்கீற்று என்கிறது. -- சுந்தர் \பேச்சு 15:40, 4 ஏப்ரல் 2010 (UTC)

தென்னங்கீற்று முடை தொழில் என்று இதற்கு பெயரிடலாமா ? -- இராஜ்குமார் 16:34, 4 ஏப்ரல் 2010 (UTC)

சுந்தர் . கிடுகு என்ற சொல் அனைவருக்கும் தெரியாத சொல் என்று தோன்றுகிறது . அவை செய்யுள் வழக்கு சொற்கள் என்று நான் நினைக்கிறேன் . நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் --இராஜ்குமார் 16:46, 4 ஏப்ரல் 2010 (UTC)

அன்பின் ராஜ்குமார்,

நல்ல கட்டுரை. நம் முன்னோர்கள் எல்லாவற்றையும் அறிந்தும், அதனை முறையாக ஆவண படுத்தவில்லை அல்லது ஒரு குறிப்பிட்ட குழுவினரக்கே தெரியும் என்பதால், நாம் பின்தங்கி போய்விட்டோம் என நினைக்கிறேன். நம் மக்களின் தொழிலை முறையாக எழுத் தொடங்கி உள்ளீர்கள். வாழ்த்துகள். என்னால் முடிந்த அளவு, நானும் இது போன்ற கட்டுரை எழுத முயல்கிறேன்.

நன்றி

-- மகிழ்நன் 18:56, 4 ஏப்ரல் 2010 (UTC)

நன்றி . மகிழ்நன் . தாங்கள் எழுதவிருக்கும் கட்டுரைக்கும் வாழ்த்துக்கள் . நான் எழுதிய கட்டுரைகள் அவ்வளவு ஆழமாக ( நுட்பமாக) இல்லை . தாங்கள் எழுதும் பொழுது நுட்பமான முறையில் எழுத வேண்டும். -- இராஜ்குமார் 07:38, 5 ஏப்ரல் 2010 (UTC)

கிடுகு பின்னுதல் என்பது செய்யுள் வழக்கு அல்ல. கீற்று முடைதல் பொருத்தமான தலைப்புகளுள் ஒன்றாக உள்ளது. கிடுகை கிடுகு பின்னுதல் என்னும் சொற்களைக் கட்டுரையினுள் சொல்லுதல் நல்லதாக இருக்கும்.--செல்வா 19:42, 4 ஏப்ரல் 2010 (UTC)

ஆம் செல்வாவின் கருத்துடன் ஒத்துப் போகிறேன். மதுரை மாவட்டத்தில் வைகைக் கரையில் தென்னந்தோப்புகள் மிகுதி. இங்கு இத்தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள் கிடுகு என்ற சொல்லைப் பெருவாரியாகப் பயன்படுத்துகின்றனர். கீற்று முடைதலை முதன்மைப்படுத்தி விட்டு, கட்டுரைக்குள் கிடுகையும் குறிப்பிடலாம். -- சுந்தர் \பேச்சு 04:38, 5 ஏப்ரல் 2010 (UTC)

ஆம் . நான் இரண்டாம் வரியிலேயே அச்சொல்லை பயன்படுத்தி உள்ளேன் . பார்க்க . -- இராஜ்குமார் 05:22, 5 ஏப்ரல் 2010 (UTC)

புதுக்கோட்டையில் உள்ள என் ஊரிலும் கிடுகு முடைவது, கிடுகுக் கொட்டகை போன்றவை அனைவரும் அறிந்த பேச்சு வழக்குச் சொற்களே--ரவி 05:52, 5 ஏப்ரல் 2010 (UTC)

பார்த்தேன். இராஜ்குமார். சேர்த்ததற்கு நன்றி. -- சுந்தர் \பேச்சு 06:32, 5 ஏப்ரல் 2010 (UTC)

தென்னிலங்கையில் இதனை ஓலை பின்னுதல் என்பார்கள். கீற்று என்பது ஓர் ஓலையின் அரைவாசி. பின்னிய ஓலைகளை இரண்டிரண்டு கீற்றுக்களாக எடுத்து கூரை வேய்வது, வேலியடைப்பது, படலைகளை அமைப்பது போன்ற வேலைகளைச் செய்வது வழக்கம். கிடுகு எனப்படுவது ஓலையைப் பயன்படுத்தி, பாத்திரம் போன்ற வடிவமைப்பில் பின்னியெடுப்பது. தென்னிலங்கையிலுள்ள பல இடங்களில் முக்கிய நிகழ்வுகளின் போது கிடுகுகளில் சோறு எடுத்துச் செல்வார்கள்.--பாஹிம் (பேச்சு) 15:51, 19 ஆகத்து 2014 (UTC)[பதிலளி]

தகவலுக்கு நன்றி, பாகிம். தலைப்பைச்சேர்த்துள்ளேன். ஏதேனும் விடுபட்டிருக்கும் தகவல்களை நேரடியாகச் சேர்த்துவிடுங்கள். -- சுந்தர் \பேச்சு 08:52, 20 ஆகத்து 2014 (UTC)[பதிலளி]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:கீற்று_முடைதல்&oldid=1709864" இலிருந்து மீள்விக்கப்பட்டது