பேச்சு:கிட்டிப் புள்ளு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

கிட்டிப் புள்ளு விளையாட்டுக்கும் மட்டைப் பந்துக்கும் தொடர்பிருப்பதாக தோன்றவில்லை. ஏனெனில் இலங்கையின் பல பகுதிகளில் புள்ளைக் குளியில் வைத்து எத்தி விடும் போது எதிர்த்தரப்பு அதை கீழே விழாமல் பிடிக்க வேண்டும். பின் கிட்டியின் மூலம் குழியின் நுனியிலிருந்து ஒரு கோலளவு தூரம் அளக்கப்பட்டு அதில் கிட்டி வைக்கப் படும். புள்ளின் மூலம் கிட்டிக்கு எறிய வேண்டும். இவ்வாறு தொடரும்.... நீங்கள் கூறிய முறையை தமிழ்நாட்டுச் சினிமாப்படங்களில் கண்டிருக்கிறேன். --சஞ்சீவி சிவகுமார் 10:22, 11 அக்டோபர் 2010 (UTC)

 இதேப் போன்று தமிழ் நாட்டிலிலும் பல பகுதியில் விளையாடுவார்கள். --இராஜ்குமார் 05:59, 6 செப்டெம்பர் 2011 (UTC)
கிட்டிப்புள்ளும், மட்டைப்பந்தாட்டமும் ஒரே முறையிலான ஆட்டங்கள்தான். ஆடு பொருள்களும், அமைப்பும் சற்று மாற்றம். ஆனால் இரண்டுக்கும் தொடர்பிருக்கிறது.--தேனி.எம்.சுப்பிரமணி./உரையாடுக. 02:23, 5 திசம்பர் 2011 (UTC)
கிட்டிப்புள் என்பது மேலே சஞ்சீவி சிவகுமார் கூறியது போன்றுதான் விளையாடப்படுகிறது. நானும் சிறுவயதில் விளையாடியிருக்கிறேன். அதற்கும் மட்டைப் பந்தாட்டத்திற்கும் தொடர்பில்லை.--பாஹிம் 02:31, 5 திசம்பர் 2011 (UTC)
அனைத்து மட்டைப்பந்தாட்டங்கள் (raquet games) இடையே உள்ள பொதுக்கூறுகள் தாம் இரண்டுக்கும் உள்ளன. மற்றபடி நேரடித் தொடர்பு கிடையாது. ஒப்பாய்வில் வேண்டுமெனில் இவைப் பொதுக்கூறுகள் என சொல்லலாம். கில்லியில் உள்ள பல ஆட்ட வகைகளில் (நான் மூன்று வகையான ஆட்டங்களை ஆடியிருக்கிறேன்) ஒன்றில் மட்டும் தான் கிரிக்கெட் போன்ற விசயங்கள் மற்றவற்றில், கிட்டியும் புள்ளும் பேட் பால் போன்று இருக்கின்றனவே தவிர வேறொரு ஒற்றுமையும் கிடையாது.--சோடாபாட்டில்உரையாடுக 07:33, 5 திசம்பர் 2011 (UTC)
இந்த உரையாடல் திரைப்படத்தில் கூட இடம்பெற்றுள்ளது. நான் நினைக்கிறேன், அதைப் பார்த்துதான் பலரும் கில்லிதாண்டியும் துடுப்பாட்டமும் (Cricket) ஒன்றென்று கொண்டுள்ளனரென்று. இடம்பெற்ற படம் சென்னை 600028. ஓரிடத்தில் நடிகர் செந்தாமரை இதனைக் கூறுவார். :) --சூர்யபிரகாசு உரையாடுக... 07:53, 5 திசம்பர் 2011 (UTC)