பேச்சு:களப்பிரர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
  • இவர்கள் பாளி மொழியை பேசியது/ஆதரித்ததாகவும் சில இடங்களில் கூறப்படுகின்றது. --Natkeeran 17:32, 29 செப்டெம்பர் 2006 (UTC)

பயனர்:Njaanamஇன் குறிப்புகள்[தொகு]

பாளி மொழி அல்ல. அது பாலி மொழியாகும்.

//எனினும், தமிழ் மொழியும் இலக்கியுமும் வளர்ந்தது.// "இலக்கியமும்" - என்று இருத்தல் வேண்டும்.

//இவர்களது ஆட்சி காலமும், இவர்களது கால தமிழ்ப்படைப்புக்களும் பின்னர் வந்த சைவ அல்லது இந்து சமயத்தவர்களால் இருட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.//

இக்கருத்துடன் வேறுபடுகிறேன். "கொண்டு செலுத்த ஆட்கள் இல்லாமையால் இவர்களது கால தமிழ்ப்படைப்புக்களும் காணக் கிடைக்கவில்லை".--−முன்நிற்கும் கருத்து Njaanam (பேச்சுபங்களிப்புகள்) என்ற பயனர் ஒப்பமிடாமல் பதிந்தது.


திரு வள்ளிநாயகம் எழுதிய " மானுடத்தில் கோலோச்சியவர்கள் பவுத்தர்கள் " என்னும் நூலில் களப்பிரர்கள் பறையர் சாதியெய் சார்ந்தவர்கள் என சில ஆய்வுகளுடன் எழுதியுள்ளார். களப்பிரர்கள் தோற்க்கடிக்கப்பட்டவுடன், அங்கு வாழ்ந்த மக்கள் வைதீக மதத்துக்கு மாறுமாறு கட்டயபடுத்தப்பட்டனர் என்றும், அவ்வாறு மாறாதவர்கள் தீண்டப்படாதவர்களாக மாற்றப்பட்டனர் என விளம்ப்பியுள்ளார்.

திரு மயிலை வேங்கடசாமி எழுதிய மற்றொரு நூலில் களப்பிரர்கள் முத்தரையர் என்பதற்க்கான சான்றுகளை காட்டியுள்ளார்.

ஏன் இவ்விரு கருத்துகளையும் இக்கட்டுரையில் சேர்க்க கூடாது?

-- மகிழ்நன் 19:20, 18 அக்டோபர் 2009 (UTC)

மகிழ்நன், உங்களிடம் சான்றுக் குறிப்புக்களும் இருப்பதால், இவ்வாறான கருத்துக்களும் உள்ளன என்று குறிப்பிட்டு அதற்கான சான்றுகளையும் கொடுக்கலாம். நீங்களே இத்தகவலைச் சேர்த்துவிடலாம். மயூரநாதன் 19:48, 18 அக்டோபர் 2009 (UTC)

பின்வரும் கூற்றுக்கள் முரண்படுகின்றன[தொகு]

அண்மைக்கால ஆய்வுக் கருத்துக்களின் படி இவர்கள் கன்னட நாட்டைச் சேர்ந்தவர்கள் என்ற கருத்து ஏற்றுக் கொள்ளத்தக்கதாக உள்ளது[மேற்கோள் தேவை].ஆனால் தமிழ் குடிகளில் ஒருவரான கள்ளர்களில் களப்பாளன், களப்பிரர் என்ற பட்டம் தரித்த குடும்பங்கள் இன்றும் உள்ளன . ஆகா களப்பிரரும் தமிழர் என்பது ஏற்றுக்கொள்ள தக்கதாக உள்ளது. இவர்களின் தமிழ் மொழிக்கு ஆற்றிய சேவை இதை உறுதி செய்கிறது. களப்பிரருடைய ஆட்சி தமிழக அரசியலில் ஒரு பெரும் மாறுதலை ஏற்படுத்தியதோடல்லாமல் சமயம், சமுதாயம் கலாசாரத் துறைகளில் சில புரட்சிகரமான மாறுதல்களைத் தோற்றுவித்தது.

ஊகிக்கவே முடியும்[தொகு]

மேலே மகிழ்நன் கூறிய முத்தரையர்-களப்பிரர் தொடர்பும், தமிழர் தான் களப்பிரர் என்ற கருதுகோளும், இதை போல் பல கருதுகோள்கள் கொண்ட புத்தகங்களும் மயிலை.வேங்கடசாமி அவர்கள் மூலமும் மணிவாசகர் பதிப்பகம் மூலமும் வெளியிடப்பட்டுள்ளன. அவர் ஒருவரே பல கருதுகோள் புத்தகங்களை வைப்பதால் எதையும் உறுதியாக கூற இயலாது.

மொழி

ஆனால் மொழி, மதம்பற்றிய ஆராய்ச்சியில் அனைத்து ஆய்வாளர்களும் களப்பிரர் புத்த, சமண சமண மதத்தை ஆதரித்ததாகவும் பாலி, பிராகிருதம் ஆகிய மொழிகளை ஆதரித்ததாகவும் நான் படித்த புத்தகங்களில் ஒரே கருத்தை கொண்டிருக்கின்றனர்.--தென்காசி சுப்பிரமணியன் 04:07, 14 செப்டெம்பர் 2011 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:களப்பிரர்&oldid=873773" இருந்து மீள்விக்கப்பட்டது