பேச்சு:கல்கி (இதழ்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

தலைப்பை கல்கி (சஞ்சிகை) என அமைத்தால் நன்றாக இருக்குமே. ஈழத்துச் சஞ்சிகைகள் பலவற்றுக்கும் அவ்வாறு சஞ்சிகை என்பதௌ அடைப்புக் குறிக்குள் கொடுத்தே பெயரிட்டோம். இதழ்க என்பது சஞ்சிகை/பத்திரிகை என்பவற்றுக்குப் பொதுவாக உபயோகிப்பதால் சஞ்சிகை என்பது பொருத்தமாயிருக்குமே. --கோபி 17:32, 13 ஜூலை 2006 (UTC)

சஞ்சிகைக்கும் பத்திரிக்கைக்கும் என்ன வேறுபாடு? சஞ்சிகை தமிழ் சொல்லா? தமிழ்நாட்டில் சஞ்சிகை என்பது அவ்வளவு புழக்கத்தில் உள்ள சொல் இல்லை--ரவி 08:30, 14 ஜூலை 2006 (UTC)

கல்கி தமிழ் தவிர வேறு மொழிகளிலும் வருகிறதா? தமிழ் என்பது இங்கு தேவை தானா?--Kanags 09:07, 14 ஜூலை 2006 (UTC)

கல்கி தமிழில் மட்டும் தான் வருகிறது. இதழ் என்று குறிப்பிட்டாலே போதுமானது. மாற்றி விடுவோம்--ரவி 09:59, 14 ஜூலை 2006 (UTC)

சஞ்சிகை என்பது வடமொழி. சஞ்சாரம் என்பதின் அடிப்படையில் எழுந்த சொல். பொருத்தமான சொல்லும் இல்லை, ஆனால் இலங்கையில் ஆளப்படுகின்றது. ஆனால் இலங்கையிலும் சிற்றிதழ் (சிறு எண்ணிக்கையிலே இலக்கியம் சார்ந்த செய்திகளையும், படைப்புகளையும் ஏந்தி வரும் இதழ்) என்னும் சொல்லாட்சி உண்டு (இலங்கை எழுட்தாளர்கள் பயன்படுத்தி கேடுள்ளேன்). Periodical என்பதற்கு தமிழில் குறித்த காலங்களில் மலரும் மலர்களின் அடிப்படையில் பெயரிடுவது பழக்கம். ஆண்டு மலர் என்பது ஆண்டுக்கு ஒருமுறை மலரும் எழுத்துத்தொகுதி. மலரின் ஒவ்வொரு அங்கமாக இதழ் என்பது பயன்ப்டுத்தபடுகின்றது. இதழ் என்பது நல்ல சொல். இதில் நாளிதழ், கிழமை (வார) இதழ், மாத இதழ் அல்லது திங்கள் இதழ் (மாதிகை), காலாண்டு இதழ், ஆண்டு இதழ் என்று பயன்படுத்தப்படுகின்றது. இதழ் என்னும் சொல் சுருக்கமானதும் கூட. உரிரெழுத்தில் தொடங்குவதால், பிறசொற்களுடன் இணைவது எளிமையாகவும் அழகாகவும் இருக்கும் (எ.கா. சிற்றிதழ்). சஞ்சாரம் என்பது இடம் பற்றிய சொல், காலம் பற்றிய சொல் இல்லை என்றுதான் நினைக்கிறேன். பத்திரிகை அல்லது பத்திரிக்கை என்பது தாள், இலை என்பதின் அடிப்படையான வடமொழிச் சொல். இதழ் என்றே எல்லோரும் பயன்படுத்தலாம் என்பது என் பரிந்துரை.--C.R.Selvakumar 11:56, 14 ஜூலை 2006 (UTC)செல்வா

சஞ்சிகை என்பது இலங்கையில் பரவலாகப் பயன்படுகிறது. அவ்வாறே இதழ் என்பதும் பயன்படுகிறது. சஞ்சிகை என்பது வடசொல் என்பதால் இதழ் என்று பயன்படுத்துவதே நல்லது. --கோபி 16:00, 14 ஜூலை 2006 (UTC)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:கல்கி_(இதழ்)&oldid=47292" இருந்து மீள்விக்கப்பட்டது