பேச்சு:கலிங்கச் சிற்பங்கள், செங்கமேடு

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

25 ஆகஸ்டு 2019[தொகு]

25 ஆகஸ்டு 2019 அன்று கங்கைகொண்ட சோழபுரம் பகுதிகளில் களப்பணி மேற்கொண்டபோது இச்சிற்பங்களை நேரில் காணமுடிந்தது. அதன் அடிப்படையில் புதிய பதிவு தொடங்கப்பட்டது. தொடர்ந்து புகைப்படங்கள் பதியப்படும். மேற்கொண்டு விவரங்கள் பெறப்பட்டு, பதிவில் சேர்க்கப்படும். --பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 11:12, 2 செப்டம்பர் 2019 (UTC)

குறுக்கு ரோடு[தொகு]

பேச்சு வழக்கில் Cross Road என்று ஆங்கிலத்தில் கூறுவதையே குறுக்கு ரோடு என்று கூறுகின்றார்கள். குறுக்கு சாலை என்று கூறுவதில்லை. ஆதலால் புரிதலுக்காக வழக்கில் உள்ள சொல்லான குறுக்கு ரோடு என்பது பயன்படுத்தப்பட்டுள்ளது. --பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 16:10, 2 செப்டம்பர் 2019 (UTC)

அப்பகுதி நண்பர்களிடம் பேசியபோது அவர்களும் குறுக்கு ரோடு என்ற பயன்பாட்டையே கூறுகின்றார்கள். ஆகவே பதிவு, குறுக்கு ரோடு என்ற நிலைக்குக் கொண்டுசெல்லப்பட்டது. திருச்சியில் Salai Road சாலை ரோடு என்ற ஒரு பகுதி உள்ளது. அதனை சாலை ரோடு என்றுதான் கூறிவருகிறார்கள். இவ்விடத்தில் மொழியைப் பார்ப்பதைவிட உள்ளூர் மக்களின் பயன்பாடும், புரிதலும் மனதில் கொள்ளப்படவேண்டிய நிலையுள்ளது என்பதை தகவலுக்காகத் தெரிவித்துக்கொள்கிறேன். --பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 07:14, 17 செப்டம்பர் 2019 (UTC)