பேச்சு:கன்டோன்மென்ட் (இந்தியா)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

இந்தியாவின் கன்டோன்மென்ட் (cantonment) பற்றிய இக்கட்டுரையின் தலைப்புத் தமிழாக்கம் பொருத்தம் அற்றது. நகரியம் என்னும் சொல் urbanism என்னும் சொல்லுக்கான தமிழாக்கமாக அமைவதே பொருத்தம் என்பதால், தற்போதைக்கு இதன் தலைப்பை கன்டோன்மென்ட் (இந்தியா) என மாற்றியுள்ளேன். ---மயூரநாதன் (பேச்சு) 11:07, 22 நவம்பர் 2013 (UTC)

விக்சனரியில் பாளையம் என்றிருக்கிறது. அது பொருத்தமாக இருக்குமா?--Kanags \உரையாடுக 12:53, 22 நவம்பர் 2013 (UTC)
நானும் விக்சனரியில் பார்த்தேன். பாளையம், பாசறை போன்ற பொருள்கள் உள்ளன. cantonment என்பதன் நேரடியான பொருள் பாளையம், பாசறை, இராணுவ முகாம் என்பவைதான். ஆனால், இந்தக் கட்டுரை குறிக்கும் பொருளில் இது இவ்வாறான முகாம்களை அடிப்படையாகக் கொண்ட குடியிருப்புப் பகுதிகளை அல்லது நகரங்களையே குறிக்கின்றன என எண்ணுகிறேன். "பாசறை நகரம்" என்று சொல்லலாமா? இங்கே cantonment என்பதற்குச் சிறப்புப் பொருள் உண்டு. அத்தோடு தமிழ் நாட்டில் பாளையம் என்பதற்கு வேறு சிறப்புப் பொருளும் உண்டு. cantonment என்பதற்கு அதிகாரபூர்வத் தமிழ் மொழிபெயர்ப்பு உண்டா எனப் பார்க்கவேண்டும். பொதுவாக "கன்டோன்மென்ட்" என்றே பயன்படுத்துவதாகத் தெரிகிறது. ---மயூரநாதன் (பேச்சு) 13:11, 22 நவம்பர் 2013 (UTC)