பேச்சு:ஒரு கடவுட் கொள்கை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
Wikipedia-logo-v2-bw.svg ஒரு கடவுட் கொள்கை என்னும் கட்டுரை தமிழ் விக்கிப்பீடியாவின் மேம்பாடு கருதி உருவாக்கப்பட்ட தொடர்பங்களிப்பாளர் போட்டி மூலம் விரிவாக்கப்பட்டது ஆகும்.

கத்தோலிக்கர்கள் மரியாளையும் ஏனைய சிலரையும் வணங்குகிறார்கள், வழிபடுவதில்லை என்றால், வணங்குவதற்கும் வழிபடுவதற்கும் என்ன வேறுபாடு? ஒரு கடவுளுக்கு மேலாக எந்த வகையில் வேறெவரை வணங்கினாலும், அது பல கடவுள் வணக்கமாகவே கொள்ளப்படுகிறது.--பாஹிம் 13:52, 23 அக்டோபர் 2011 (UTC)

veneration வேறு worship வேறு. இரண்டும் ஒன்றல்ல. கத்தோலிக்கம் மரியாளை இறையாகக் கருதுவதில்லை ஒரிறைக்கொள்கையுள்ள அனைத்து சமயங்களிலும் “வணங்குதல்” உண்டு. --சோடாபாட்டில்உரையாடுக 14:53, 23 அக்டோபர் 2011 (UTC)

அல்லாஹ்வை மாத்திரமே வணங்க வேண்டும் என்று இஸ்லாம் கூறுகிறது. அல்லாஹ்வையன்றி வேறெவரையும் யாராவது வணங்கினால், அவர் எக்காரணத்தினாலும் முஸ்லிமாக இருக்க முடியாது.--பாஹிம் 15:00, 23 அக்டோபர் 2011 (UTC)

நீங்கள் தமிழ் சொற்களான வணக்கத்தையும் வழிபாட்டையும் வேறுபடுத்தாமல் பார்க்கிறீர்கள். தமிழில் “வணக்கம்” என்ற சொல் “வழிபாடு” என்ற பொருளிலும் “மரியாதை” என்ற பொருளிலும் பயன்படுவதால் இச்சிக்கல் எழுகிறது. இக்கட்டுரையில் பயன்படுத்தப்படும் “வணக்கம்” (veneration) ”பெருமரியாதை” என்ற பொருளில் மட்டுமே. இஸ்லாமியத் தமிழ் சூழலில் “வணக்கம்” என்ற சொல்லுக்கு “worship" என்று பொருள் வரலாம். ஆனால் பிற சமயச்சூழல்களிலும் சமயமற்றப் பொதுச் சூழல்களிலும் அப்படியன்று. எ.கா. ”ஆசிரியரை வணங்கு” என்று பரவலாகச் சொல்வது அவரை "worship" /வழிபடு என்னும் பொருளில் இல்லை. மரியாதை (venerate/respect) செய் என்னும் பொருளில். இடம் பொறுத்து இரு சொற்களையும் பார்க்க வேண்டும் "muslims venerate the prophet" என்பதை “இசுலாமியர்கள் நபியை வணங்குகிறார்கள்” என்று சொன்னால் எப்படித் தவறாகுமோ அதோ போன்றது தான் “கத்தோலிக்கர்கள் மரியாளை வணங்குகிறார்கள்” என்பதற்கு "catholics worship mary" என்று பொருள் கொள்ளல்--சோடாபாட்டில்உரையாடுக 16:01, 23 அக்டோபர் 2011 (UTC)