பேச்சு:ஐரிய மக்கள்
ஐரிய மக்கள் எனலாமா? ஐரிஷ் என்பது ஆங்கிலச் சொல்லை அப்படியே எழுதுவது தான். பிற மொழி விக்கிகளிலும் அந்தந்த மொழிகளுக்கு ஏற்ப எழுதியிருப்பதைக் காணலாம்--ரவி 19:08, 8 மே 2008 (UTC)
அயர்லாந்தினர் எனலாம். ஐரியர் எனலாம். 'டாய்ட்சு மொழியில் Iren (ஈரென்) "Iren sind Bewohner der Insel Irland" என்கிறார்கள். இன்செல் (Insel) என்றால் 'டாய்ட்சு மொழியில் தீவு. எனவே "ஈர் என்பவர் ஈர்லாந்து என்னும் தீவில் வாழும் மக்கள்" அவர்கள் கூறுகிறார்கள். நாம் ஏன் அயர்லாந்தினர் என்ரோ ஐரியர் என்றோ கூறலாகாது? அயர்லாந்து மொழி அயர்லாந்தியம். அயர்லாந்தில் வாழும் மக்கள் அயர்லாந்தியர். ஐரிஷ் மக்கள் என்பதற்கு வழிமாற்று தரலாம்.--செல்வா 20:11, 8 மே 2008 (UTC)
அயரம் -அயரர் -அயர்நாடு என்ற சொற்களை ஆளலாம். தமிழ் - தமிழர் - தமிழ்நாடு, சீனம் - சீனர் - சீனா என்பது போல். ஒரு மொழியால் ஒரு இனம் அறியப்படுகிறது. பிறகு அதன் பெயர் அவர்கள் இருக்கும் இடம் / நாட்டுக்கு வருகிறது. அயர்லாந்தியர் என்று நாடு சார்ந்து பேராக்காமல் அயரர் என்று மொழி சார்ந்து ஆக்குவது நாடுகள் கடந்த அவ்வினக்குழுவையும் குறிக்க உதவும்.
லாந்து என்ற சொல்லைக் கூடத் தவிர்த்து நாடு என்று தமிழாக்கலாம். land என்ற சொல் ஐரோப்பிய மொழிகளில் நாடு எனும் பொருள் தருகையில் நாமும் பொருள் உடைய நாடு என்னும் சொல்லைப் பயன்படுத்துவதில் தவறில்லை.
தமிழ் பேசுவோர் இருக்கும் இடம் என்பதால் தமிழ்நாடு. தமிழ்நாட்டில் இருப்பவர்கள் தமிழர். (தமிழ்நாட்டில் இருப்பவர்கள் தமிழ்நாட்டினர் இல்லை. தமிழ்நாட்டில் பேசப்படும் மொழி தமிழ்நாட்டியம் இல்லை. அது போல் அயர்லாந்தியம், அயர்லாந்தினர் போன்ற சொற்களைத் தவிர்க்கலாம்) இந்த வகைச் சொல்லாக்கத்தில் பொதுக் கருத்து இருந்தால் இதை ஒரு விக்கிப்பீடியா வழிகாட்டல் ஆக்கலாம். --ரவி 20:31, 8 மே 2008 (UTC)
சீன மொழியில் அயர்லாந்து (அயர்நாடு) :
>
மரபுப் பட எழுத்தில் (島)[ எளிமை படஎழுத்தில்(岛)] தாஆவ் (dǎo) என்றால் தீவு.
爱 (ஐ) என்றால் அன்பு அல்லது ஆசை என்று பொருள்
尔 (அர்) என்றால் "நீ", "அப்படியாக" என்று பொருள்
兰 (லான்) என்றால் "ஆர்க்கி'ட்" என்னும் பூ என்று பொருள்
ஆக பொருளற்ற ஆனால் ஐயர்லாந்து என்னும் சொல்லுக்கு ஒத்த ஒலிப்புதரும் மூன்று பட எழுத்துகளுடன் தீவு என்னும் பொருள் படும் பொருத்தமான தாஆவ் என்னும் படவெழுத்தையும் சேர்த்து, 爱尔兰岛 = ஐஅர்லாந்தாஆவ் என்று குறிக்கிறார்கள். புரிந்துகொள்லும்பொழுது ஐஅர்லான் தீவு என்று பொருள் கொள்வார்கள். நாமும் அயர்நாடு எனலாம். அயர்லாந்து என்பது இங்கிலாந்து, பின்லாந்து, நெதர்லாந்து என்று பல ஐரோப்பிய நாடுகளின் பெயர்களோடு ஒத்த வகையில் பின்னொட்டாக லாந்து என்னும் பெயர் இருப்பதால் அதனை அப்படியேயும் வைத்துக்கொள்ளலாம். அயர்லாந்தை அயர்நாடு என்றால் பின்னர் நெதர்நாடு, பின்னாடு, ஸ்காட்நாடு, இங்கில்நாடு என்றெல்லாமும் மாற்ற வேண்டியிருக்கும். தேவையா என்று எண்ணிப்பார்க்கவேண்டும். ஐரிஷ் போன்ற ஆங்கில வழக்கில் இஷ் சேர்த்து எழுதவேண்டியதில்லை. --செல்வா 21:23, 8 மே 2008 (UTC)
லாந்து என்ற பெயருடைய பிற நாட்டுப் பெயர்களையும் மாற்ற வேண்டிய சிக்கல் வரும் என்பது குறித்து யோசித்தேன். ஆனால், குறைந்த பட்சம் கட்டுரை தொடக்கங்களில் அடைப்புகுறிகளிலாவது இப்பெயர்களைத் தரலாம். சிறீலங்கா என்ற அதிகாரப்பூர்வப் பெயருடன் இலங்கை என்ற தமிழ்ப்பெயரையும் பயன்படுத்துவது போல் நாளடைவில் நாடுகளுக்கான தமிழ்ப் பெயர்கள் புழக்கத்துக்கு வர இது உதவலாம். பழங்காலத்தில் தமிழர் வணிகத் தொடர்பு கொண்டிருந்த நாடுகள் சிலவற்றுக்கு இது போல் தமிழ்ப் பெயர்கள் இட்டிருந்தார்கள் என நினைக்கிறேன். தற்போது உலகம் முழுக்க தமிழருக்குத் தொடர்பிருப்பதால் பொருத்தமான இடங்களில் தமிழ்ப் பெயர் இடலாம் என்று தோன்றுகிறது. எடுத்துக்காட்டுக்கு Greenlandஐ நாம் கிறீன்லாந்து என்றே எழுதுகிறோம். இந்தப் பெயரால் நமக்கு ஒன்றும் விளங்குதில்லை. ஆனால், டாயிட்ச், நெதர்லாந்து மொழிகளில் பச்சை நாடு என்ற பொருள்பட அவர்கள் மொழியில் மாற்றித் தான் எழுதுகிறார்கள். இந்த மொழியினருக்கு அந்நாட்டின் பொருள் புரியும்போது நாம் மட்டும் ஏன் பொருள் புரியாமல் அப்படியே எழுத வேண்டும்? பைநாடு, பச்சைநாடு போன்ற பெயர்களாலும் அழைத்தால் தவறா? நெதர்நாடு என்பதற்குப் பதில் தாழ்நாடு என்றும் அழைக்கலாமே? பிரெஞ்சு மொழியில் நெதர்லாந்து நாட்டின் பெயரைப் பார்த்தால் அதற்கும் நெதர்லாந்து என்ற பெயருக்கும் ஒரு தொடர்பும் இல்லை. அருகருகே உள்ள நாடுகள் இப்படி பொருள் விளங்குவது போல தங்கள் மொழியில் தானே பெயர் சூட்டியுள்ளன?--ரவி 08:22, 9 மே 2008 (UTC)
- Thailand-->தாய்லாந்து-->தாய்நாடு ?!?!? :-))121.247.218.121 17:03, 9 மே 2008 (UTC)(நான் அவன் இல்லை)
சென்னையில் இருந்து வந்த அடையாளம் காட்டாத நண்பரே, தாய்லாந்து குறித்த ஆங்கில விக்கி கட்டுரையில் இடப்பக்கம் உள்ள பிற மொழித் தொடுப்புகளில் எத்தனை மொழிகளில் land என்பதற்குப் பதில் அம்மொழிச் சொல்லை ஆள்கிறார்கள் என்று பார்க்கவும். Thai என்ற சொல்லின் ஒலிப்புக்கு ஒத்து தாய் என்று தமிழ்ச் சொல் இருப்பது ஒரு தற்செயல் நிகழ்வு. இது போல் எல்லா மொழிகளிலும் தற்செயல் நிகழ்வுகள் இருக்கும். தாய்லாந்தை தாய் நாடு என்று எழுதினால் குழப்பும் என்று சொல்பவர் Thai languageஐத் தாய் மொழி என்று எழுதினாலும் குழம்பும் என்பீரோ? அதற்குப் பதில் தாய் லாங்குவேஜ் என்று எழுதலாமோ? தமிழ், தமிழர் நலம் கருதி ஏதாவது சிந்தித்தால், இது போன்ற விதிவிலக்குகளைக் காட்டி பொது வழக்கு, விதிகளைக் கேலிக்குள்ளாக்கும் உங்களைப் போல் பலரைப் பார்த்தாகி விட்டதால் "நீங்கள் எந்த ஒருவர்" என்று நினைத்துப் பார்க்கப்போவதில்லை. :) --ரவி 17:28, 9 மே 2008 (UTC)
- ஐரிய மக்கள் என மாற்றலாம். அயர்லாந்தில் வாழும் மக்களை அயர்லாந்தியர் எனலாம். அவர்கள் எல்லோரும் "ஐரியர்"கள் அல்ல. ஐரியர்கள் என்போர் ஐரிய மொழி பேசுபவர்கள். தமிழர்களைப் போல உலகெங்கும் வாழ்கிறார்கள்.
- ஸ்ரீலங்கா என்பது அதிகாரபூர்வப் பெயராக இருந்தாலும், தமிழில் அதிகாரபூர்வமாக அங்கு இலங்கை என்றே எழுதுகின்றனர். ஸ்ரீலங்கா அஞ்சல்தலைகளில் இலங்கை என்று எழுதியிருப்பதைக் கண்டிருப்பீர்கள். (விடுதலைப் புலிகள் ஸ்ரீலங்கா என்றே எழுதுவார்கள். "நீங்கள் வேறு நாடய்யா, நாங்கள் வேறு நாடு" என்று அவர்களின் இறைமையை மதிக்கிறார்கள்).
- பொதுவாக வழங்கும் அயர்லாந்து, இங்கிலாந்து போன்றவற்றை மாற்ற வேண்டுமா? ரவி குறிப்பிட்டது போல அடைப்புக்குறிக்குள் தமிழ்ப்பெயர் தரலாம் என்பதே எனது கருத்தும்.--Kanags \பேச்சு 09:20, 9 மே 2008 (UTC)
இப்பக்கம் மிக எடுப்பாக உள்ளது
[தொகு]கனகு, இப்பக்கம் மிக எடுப்பாக உள்ளது. இது போன்ற பக்கங்களுக்கு இது ஒரு நல்ல எடுத்துக்காட்டாக இருக்கிறது. எத்தனை அழகாக, வடிவாக உள்ளது! பாராட்டுகள்!--செல்வா 13:30, 18 மே 2008 (UTC)