பேச்சு:ஏ.பி.ஐ ஒப்படர்த்தி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

இலகு என்பது எளிதாக (easy) என்பதற்கு அதிகம் பயன்படும். இலேசு, நொய், நொய்ம்மை என்பது பளு, எடை குறைவானதைக் குறிக்கப் பயன்படும். --செல்வா 13:29, 14 மே 2008 (UTC)

இதுவும் ஓர் ஒப்படர்த்திதானே? பின் ஏன் ஈர்ப்பு என்னும் சொல் உள்ளது. Gravity என்பது Specific gravity என்பதின்

ஒரு பகுதிதானே? அல்லவா?--செல்வா 14:26, 14 மே 2008 (UTC)

செல்வா, இலகு, இலேசு குறித்துக்கொண்டேன். திருத்தி விட்டேன். எனது உரைகளில் எங்கு திருத்தம் செய்யவேண்டும் என்றாலும் தயங்காமல் செய்யுங்கள். ஒப்படர்த்தியுடனான தொடர்பு பற்றியும் ஒரு குறிப்பைச் சேர்த்திருக்கிறேன். ஏபிஐ ஒப்படர்த்தி என்றே கூறலாமா என்று தெரியவில்லை. Gravityக்கு நேராக ஈர்ப்பு என்று பயன்படுத்தியிருக்கிறேன். Specific Gravity, API Gravity இரண்டிற்கும் எதிர் உறவு.
நீர் ஒப்படர்த்தி கட்டுரையில் ஒப்பெடை என்றும் சொல்லலாம் என்று குறிப்பு இருக்கிறது. ஆங்கில விக்கிப்பீடியாவில் பார்த்த போது, அவை இரண்டும் வேறு வேறானவை என்று தோன்றுகிறது. specific weight = ஒப்பெடை ? --இரா. செல்வராசு 00:30, 15 மே 2008 (UTC)
சிறு வேறுபாடு உள்ளது (துல்லியம் பற்றியது). பார்க்கவும்: பேச்சு:நீர் ஒப்படர்த்தி --செல்வா 02:30, 15 மே 2008 (UTC)
ஈர்ப்பு என்பதற்கு மாறாக வேறு பொருத்தமான சொல் தேவைப்படுகின்றது. ஒப்படர்த்தி என்றே கூறலாம் என்றுதான் நினைக்கிறேன். தலைகீழாக உறவுபடுத்தினாலும் அதுவும் ஒருவகை ஒப்புமைதானே?--செல்வா 02:36, 15 மே 2008 (UTC)
செல்வா, ஏபிஐ ஒப்படர்த்தி என்பது ஏற்புடையதென்றால் அப்படியே மாற்றி விடலாம். ஈர்ப்பு மிகவும் பொருத்தமில்லை தான். --இரா. செல்வராசு 03:44, 15 மே 2008 (UTC)
தலைப்பு மாற்றத்திற்கு நன்றி, செல்வா. --இரா. செல்வராசு 03:25, 16 மே 2008 (UTC)

மகிழ்ச்சி. பொதுவான ஒப்புதல் இருந்தாலோ அல்லது கட்டாயம் சரியானது என்று நீங்கள் நினைத்தாலோ நீங்களாகவே "நகர்த்துக" என்னும் சுட்டியைச் சொடுக்கித் தலைப்பை மாற்றலாம்.--செல்வா 03:31, 16 மே 2008 (UTC)