பேச்சு:நீர் ஒப்படர்த்தி
Jump to navigation
Jump to search
சுந்தர், நல்ல கருத்துகள் சேர்ப்பு.--செல்வா 05:59, 3 ஜனவரி 2008 (UTC)
specific gravity எதிர் relative density[தொகு]
Specific gravity (SG) is a special case of relative density என்று ஆங்கில விக்கி பக்கத்தில் உள்ளதே? relative density = ஒப்படர்த்தி என்று சொல்வது தானே சரி? specific gravityக்கு வேறு சொல் இல்லையா?--ரவி 16:16, 3 ஜனவரி 2008 (UTC)
- ரவி, Specific Gravity என்னும் சொல்லுக்கு ஒப்பெடை என்பது தமிழ் அறிவியல் அகராதி (அ. கி. மூர்த்தி) தரும் சொல். நீர் ஒப்பெடை என்றுகூட கூறலாம். ஆனால், Relative density, Specific Gravity ஆகிய இரண்டும் ஒன்றே. ஈர்ப்பு விசை மாறும்பொழுது (எ.கா நிலா, செவ்வாய்க்கோள்), எடைகள் மாறலாம் ஆனால் ஒப்பெடையோ ஒப்படர்த்தியோ மாறாது என்று நினைக்கிறேன், ஏனெனில் நீரின் எடை மாறுவது போலவே எடுத்துக்கொண்ட பொருளின் எடையும் மாறும் என்பதால். ஒப்பெடைக்கான ஆங்கிலச்சொல்லில் ஒப்பிட்டுப் பார்க்கும் பொருள் ஒரு வரையறை செய்த நிலையில் உள்ள நீராக இருத்தல் வேண்டும் (எனவே நீர் ஒப்பெடை), ஆனால், ஒப்படர்த்தி என்பது ஒப்பிட்டுப் பார்க்கும் பொருள் எதுவாகவேண்டுமானாலும் இருக்கலாம். இவ்வேறுபாடுகளை கட்டுரையிலும் சேர்க்கலாம். இரு வேறு கட்டுரைகளும் எழுதலாம். --செல்வா 16:43, 3 ஜனவரி 2008 (UTC). இக்க்ட்டுரையை ஒப்பெடை அல்லது நீர் ஒப்பெடை என்று மாற்ற வேண்டும். ஒப்படர்த்தி என்று பிரிதொரு கட்டுரை எழுத வேண்டும். கட்டுரையை மாற்றி விடுகிறேன்.--செல்வா 16:48, 3 ஜனவரி 2008 (UTC)