பேச்சு:எருமை (அரசன்)

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நார் அரி நறவின் எருமையூரன் எனக் கூறப்படுவதால் இவன் நறவு என்னும் ஊரைச் சேர்ந்தவன் எனலாம்.[1]

பயனர்:Sengai Podhuvan

//எருமை இருந்தோட்டி போல் ஒருவன் என் கையைப் பிடித்துத் தன் தலைமேல் வைத்துச் சத்தியம் செய்தான். [3] இந்த உவமை இவன் தொட்டபெட்டா நீலமலை அரசன் என்பதைத் தெளிவாக்குகிறது.//

இது எப்படி இவன் நீலமலை அரசன் என்பதை தெளிவாக்குகிறது? எதிர் நிற்பவன் கையைப் பிடித்து தன் தலையில் சத்தியம் செய்யும் வழக்கு நீலமலை தொட்டபெட்டா பழங்குடிகளிடம் எதேனும் உண்டா?--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 21:11, 25 செப்டம்பர் 2014 (UTC)


பயனர்:Sengai Podhuvan

//எருமை இருந்தோட்டி போல் ஒருவன் என் கையைப் பிடித்துத் தன் தலைமேல் வைத்துச் சத்தியம் செய்தான். [3] இந்த உவமை இவன் தொட்டபெட்டா நீலமலை அரசன் என்பதைத் தெளிவாக்குகிறது.//

வணக்கம் செங்கை பொதுவன். நான் பயனர்:Jaivanth தோட்டி மலை என்பது நீலமலைதான் என்று எப்படி சொல்கிறீர். நீலமலை குடநாட்டின் ஒரு பகுதியே. ஆனால் எருமையூரன் குடநாட்டின் நீலமலையை சேர்ந்தவன் என்று துல்லியமாக எதனை ஆதாரமாக கொண்டு சொல்கிறீர்??? குடநாடு என்பது காவிரிக்கு மேற்கிலும் தெற்கிலும் உள்ள கொங்கதேசத்தின் சரிபாதி - இதுவே குடநாடு. மழகொங்கம் தவிர்த்த குடகொங்கத்தில் நீலமலை என்பது 20 இல் ஒரு பாகம். குடநாடு மொத்தமும் ஆண்டவர், நீலமலையிலா தன் தலைநகரை நிறுவி, ஆட்சியை நடத்தியிருக்கமுடியும்? மேலும் தொட்டபெட்டா என்பது படுக-கன்னட சொல். தொட்ட என்றால் பெரிய, பேட்டா - மலைத்தொடரை குறிக்கும் சொல். பிலிகிரிரங்கன் பேட்டா, ஒரு உதாரணம். தொட்டபெட்டா சமீபத்திய சொல்லே. இதனை சங்ககால ஊரோடு இலக்கியம், கல்வெட்டுகள் போன்ற தரமான ஆதாரம் தொடர்புபடுத்துவது சரியாக இருக்காது என்பது என் கருத்து. மேலும் கொங்க வெள்ளாளரில் முக்கியமான பிரிவான வடகரை வெள்ளாளரில் எருமை குலம் என்றே ஒரு பிரிவு உண்டு. கல்வெட்டுகளில் "வெள்ளாளரில் எருமைகளில்" என்ற சொற்றொடர் ஆதாரங்கள் உண்டு. இவர்கள் நீலமலைக்கு அருகில் உள்ள பண்ணாரி, சத்தியமங்கலம், அன்னூர், கோபி பகுதிகளில் மிகுதியாகவே பாராம்பரியமாகவே வாழ்ந்து வருபவர்கள். கொங்க வெள்ளாளரின் பெரும்பான்மையினரான தென்திசை / செந்தலை வெள்ளாளரிலும் "மேதி" என்கிற குலம் உண்டு. இவர்களும் எருமை குலத்தாரே. பின்னாளில் நாகரிகம் கருதி 12ஆம் நூற்றாண்டு வாக்கில் மேதி என்று கல்வெட்டுகளில் குறிக்கப்பட்டாலும், இவர்களுக்கும் எருமை குலம் என்று போற்றும் கல்வெட்டுகள் உண்டு. இவர்கள் பெருந்துறை வட்டாரத்தில் மிகுதி. இவர்கள் காணி கொண்ட ஊர் பெயரில் ஒன்று எருமைபட்டியாகும். காரணமின்றி பெயர்கள் அமையாது என்ற போதிலும், மிக வலுவான ஆதாரங்கள் கொண்டுதான் இவர்களை சங்ககால எருமையூரன் கூட்டம் என்று சொல்ல முடியும். இப்பொழுது எனக்கு தெரிந்தவற்றை கூறியுள்ளேன். பெரும்பாலும் இந்த வடகரை வெள்ளாள எருமை குலமே குடநாட்டை ஆண்ட எருமையூரனாக இருக்க வாய்ப்புகள் அதிகம். தோட்டி மலை தொட்டபெட்டா என்பதற்கு ஆதாரம் என்ன என்று கூறுங்கள். ஒருவேளை அதற்கு தக்க ஆதாரங்கள் இல்லையெனில், எருமையூரன் எருமை குலமாக இருக்கலாம் என்று பரிந்துரைக்க வேண்டுகிறேன். தோட்டிமலை எது என்று கண்டுபிடிக்க நானும் முயற்சி செய்கின்றேன். நன்றி --Jaivanth (பேச்சு) 17:25, 26 செப்டம்பர் 2014 (UTC)

குறிப்பு[தொகு]

  • கட்டுரையில், பாடலில் உள்ள செய்திகள் தொகுப்பாக்கப்பட்டுள்ளன.
  • துறையூர் நாமக்கல் வழியிலுள்ள எருமைப்பட்டிக்கும் இக்கால மேதி, எருமை குலம் ஆகியவற்றுக்கும் தொடர்பு காட்டுகிறீர்கள். நீங்கள் சொல்வது போல் சான்று இருப்பின் நன்று.
  • குடநாடு பற்றிய உங்கள் கருத்து எண்ணிப்பார்க்க வேண்டிய ஒன்று. முந்தைய வரலாற்று ஆசிரியர்களின் குறிப்பையும் எண்ணிப் பார்க்கவேண்டிய நிலை உள்ளது.
  • தெளிவான சான்றுகளைத் தேடுவோம். --Sengai Podhuvan (பேச்சு) 04:28, 6 அக்டோபர் 2014 (UTC)--Sengai Podhuvan (பேச்சு) 04:28, 6 அக்டோபர் 2014 (UTC)[பதிலளி]
  1. நக்கீரர் - அகம் 36,
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:எருமை_(அரசன்)&oldid=1733095" இலிருந்து மீள்விக்கப்பட்டது