பேச்சு:எச்சச்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

சும்மா ஒரு குறிப்புக்கு: முழுக்க கிரந்த எழுத்துகளால் ஆன ஒரு சொல் :)--இரவி 16:03, 19 சனவரி 2012 (UTC)

இதை கெச்சச்சி என எழுதினால் தவறாகுமா?--சஞ்சீவி சிவகுமார் 16:34, 19 சனவரி 2012 (UTC)

இரவி, நானும் கவனித்தேன். ஆனால் இப்படிப் பல சொற்கள் உள்ளன. இந்த இராகத்துக்கான சான்றுகோளை, அதுவும் இப்படித் தமிழ் எழுத்தில் எழுதியதற்கான சான்றுகோளை, வாசு தருவதும் நல்லதாக இருக்கும். தமிழில் எழுதும்பொழுது இப்படித் தான் எழுத வேண்டும் என்றில்லை. ஃகெச்சச்சி அல்லது ஃகெட்சச்சி என்று எழுதலாம். வேறு இடத்தில் ஹெஜ்ஜஜ்ஜி என்றே எழுதியிருந்தாலும், அபப்டித்தான் எழுதவேண்டும் என்னும் கட்டாயம் இல்லை. ஆனால் கடபயாதி முறையில் ஏதும் சிக்கல் என்று சொல்லாமல் இருந்தால் சரி :) Hajj என்னும் இசுலாமியரின் புனிதப்பயணத்தை ஆங்கில J ஒலி இல்லாத, ஆனால் மிக நெருக்கமான இனமான மொழியான இடாய்ச்சு மொழில் (செருமன் மொழியில்) Haddsch என்று எழுதுகின்றனர். நாம் ஃகட்சு என்றும் எழுதலாம் அல்லது புனிதப்பயணம், புனித யாத்திரை என்றும் எழுதலாம். ஆனால் ஹஜ் என்று கூட எழுதாமல் ஹஜ்ஜ் என்றும் எழுதுவதைப் பார்த்து இருக்கின்றேன். --செல்வா 17:06, 19 சனவரி 2012 (UTC)
செல்வா குறிப்பிட்டது போல் அப்படியே தமிழ் மொழிமாற்றம் செய்யாவிட்டாலும், சஞ்சீவி சிவகுமார் சொல்வது போல் கெச்சச்சி என்று கூட மாற்றம் செய்யலாம். ஹெஜ்ஜஜ்ஜி என்பதற்கு வழிமாற்று ஒன்று உருவாக்கி விடலாம். ஆங்கிலேயர்கள் ”தூத்துக்குடி”யை ஆங்கிலத்தில் "Tuticorin" என்று உச்சரித்தது போல் நாமும் தமிழில் உச்சரிப்புக்கு ஏற்றவாறு மாற்றம் செய்து கொள்வதில் என்ன தவறு இருக்கிறது?--தேனி.எம்.சுப்பிரமணி./உரையாடுக. 17:09, 19 சனவரி 2012 (UTC)

தமிழ் விக்கிப்பீடியாவில் கிரந்த எழுத்துகள் உள்ள எத்தனையோ சொற்கள் உள்ளன. எனவே, முழுக்க கிரந்தம் உள்ள ஒரே காரணத்துக்காக இதைத் தமிழ் எழுத்துகள் கொண்டு மாற்றத் தேவை இல்லை. அப்புறம் தாலிபான்கள் என்று சொல்லிக் கொண்டு யாராவது வந்துவிடுவார்கள் :) ஆனால், இந்த சொல் முழுக்க கிரந்தமாக இருந்தது உச்சரிக்க கடினமாகவும் விந்தையாகவும் இருந்ததால் குறிப்பிட்டு வைத்தேன். இந்த சொல்லை மூல மொழியில் எப்படி எழுதுகிறார்கள், தமிழில் ஏற்கனவே இப்படி எழுதப்பட்டுள்ளதற்கான சான்றுகள் இருந்தால் நன்றாக இருக்கும்--இரவி 17:51, 19 சனவரி 2012 (UTC)

யாரேனும் ஏதேனும் சொல்வார்கள் என்பதற்காக ஒன்றைச் செய்ய வேண்டாம், அல்லது செய்யாமலும் இருக்கவேண்டாம் என்பது என் கருத்து. தமிழ் விக்கிப்பீடியாவில், அறிவடிப்படையான, நேர்மையான உரிமைகள் அடிப்படையான கருத்துகள் ஏற்கப்பட்டுச் செயல்படுகிறோம் என்பதே உண்மையான பெருமையாக இருக்கும் என்பது என் கருத்து. நல்ல தரத்தில், நல்ல கருத்துகளை வரைதல் நம் பொறுப்பு. நாம் பின் பற்றி வந்திருக்கும் பரிந்துரையாக கூடிய மட்டிலும் கிரந்தம் தவிர்த்த நல்ல தமிழில் எழுதுதல் என்பது நடைமுறையில் இயங்கி வரும் தன்மை கொண்டுள்ளது. இப்பொழுது உரோமன் எழுத்தை முன்னே இட்டு பிறவற்றைத் தமிழ் எழுத்துகளில் எழுதும் ஊர்ப்பெயர்களும், தனியார் பெயர்களும் "பரப்பப்படுகின்றன". இதையெல்லாம் ஏற்க வேண்டிய கட்டாயம் இல்லை. கெச்சச்சி என்று எழுதுவதாலோ ஃகெச்சச்சி, ஃகெட்சச்சி என்று எழுதுவதாலோ தவறேதும் இல்லை என்பது என் கருத்து. --செல்வா 18:05, 19 சனவரி 2012 (UTC)
ஹ என்று தொடங்கும் சொற்களில் அ என்ற எழுத்துடனேயே அனேகமான கிரந்தக்களுக்குப் பிரதிட்டிருக்கிறோம். எனவே எச்சச்சி என மாற்றலாம். வாசுவின் கருத்தையும் அறியலாம்.--Kanags \உரையாடுக 20:34, 19 சனவரி 2012 (UTC)
நான் தமிழில் தேர்ச்சி பெற்றவன் என்று கூறவே இயலாது. எச்சச்சி என்று எழுதினால் சரி என்று எண்ணுகிறேன். முதலில் கிரந்த எழுத்துகளால் ஆன கட்டுரைகளை நான் நகர்த்தவில்லை, எப்பொழுதும். வாசு (பேச்சு, பங்களிப்புகள்) 03:05, 20 சனவரி 2012 (UTC)
நான் மேல் கொடுத்த வார்த்தைகளை மாற்ற விரும்புகிறேன். புத்தகங்களில் அல்ல வேறு வெளியீடுகளில் எப்படி எழுதப்பட்டிருக்கின்றனவோ அப்படியே தொகுக்க வேண்டும் என நம்புகிறேன். பெரும்பாலான புத்தகங்களில் ஹெஜ்ஜஜ்ஜி என்று இருந்தால், அப்படியே தொகுக்க வேண்டும். வாசு (பேச்சு, பங்களிப்புகள்) 06:56, 20 சனவரி 2012 (UTC)
எச்சச்சி என்ற தலைப்பு சரியாக இருப்பது போல் தோன்றுகிறது. இத்தலைப்புக்கு நகர்த்தலாம். அப்படியே ஹெஜ்ஜஜ்ஜி என்பதற்கு வழிமாற்றும் செய்து விடலாம்.--தேனி.எம்.சுப்பிரமணி./உரையாடுக. 08:55, 20 சனவரி 2012 (UTC)

நகர்த்தப்பட்டது. --மதனாகரன் (பேச்சு) 10:54, 25 ஏப்ரல் 2012 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:எச்சச்சி&oldid=1921083" இருந்து மீள்விக்கப்பட்டது