பேச்சு:எசுப்பானியா

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பெயரை உள்ளூர் ஒலிப்புக்கேற்ப எசுப்பானியா என்ற மாற்ற பரிந்துரைக்கிறேன். இது கிரந்தம் தவிர்ப்பதற்காக அல்ல. ஐரோப்பாவுக்குள்ளே espaania என்று பரவலாக அழைக்கும் வழக்கம் இருக்கிறது. தமிழில் எழுதவும் ஒலிக்கவுமும் கூட வசதியாக இருக்கும். தொடர்புடைய சொற்களிலும் எசுப்பானிய, எசுப்பானியர் என்று அழைக்கலாம் --ரவி 04:27, 5 ஆகஸ்ட் 2008 (UTC)

எசுப்பானியா என்றால், தமிழ் நாட்டில் யாருக்கும் புரியாது. இந்தியாவில் ஸ்பெயின் என்றுதான் அழைக்கின்றனர். தமிழ் கூகிளில் இந்திய பக்கங்களை பார்த்தால் ஸ்பெயின் என்பதற்கு 6500 பதில்கள் வருகின்றன. ஸ்ரீலங்க கூகிளில் ஸ்பெயின் 300 பதில்களை கொடுக்கிறது. எசுப்பானியா என்று போட்டால் ஒரு பதிலும் இல்லை.--92.39.200.17 10:51, 11 ஜூன் 2009 (UTC)

இதை spain பற்றிய உரையாடலாக மேற்கொள்ள இயலாது. ஊர்கள், பெயர்களின் உள்ளூர் ஒலிப்பைப் பின்பற்றுவதா, ஆங்கில வழக்கைப் பின்பற்றுவதா என்பதே கேள்வி. எனது ஆதரவு உள்ளூர் ஒலிப்பைப் பின்பற்றுவதற்கே. கிரேக்கம், எகிப்து போன்ற பெயர்கள் எல்லாம் ஆங்கில ஒலிப்பு சாராமல், தமிழர்களின் இப்பகுதிகளைப் பற்றிய அறிவு, பழக்கம், பிற மொழி அறிமுகத்தால் வந்தது. தமிழர்கள் தற்போது உலகின் பல பகுதிகளில் வாழ்ந்து நேரடியாக அந்தந்த ஊர்த் தகவல்களை அந்தந்த மொழிகளில் பெற வல்லவர்களாக இருக்கிறார்கள். உண்மையான, மூல மொழிப் பெயர்களை அறிமுகப்படுத்துவதே சிறந்தது--ரவி 12:05, 11 ஜூன் 2009 (UTC)

இது ஸ்பெயின் நாட்டின் பற்றிய உரையாடல் அல்ல. மக்களுக்கு தெரிந்த வார்த்தையைதான் உபயோகப் படுத்த வேண்டும். எசுப்பானியா என்றால் தமிழ் நாட்டிலோ, இலங்கையிலோ யாருக்கும் தெரியாது. ஸ்பெயின் என்றால் தெரியும். --92.39.200.17 12:14, 11 ஜூன் 2009 (UTC)

I agree, and I would suggest changing other Spanish-language names on tamil wikipedia to their native pronunciations as well, for example சிலி --> சீலே.. Werklorum 04:49, 5 ஆகஸ்ட் 2008 (UTC)

சரியான தமிழ் வடிவம் எஸ்பாஞா என்பதே. கிரந்தம் வேண்டாமெனின், எசுப்பாஞா என்றிருந்தாக வேண்டும்.--பாஹிம் (பேச்சு) 06:40, 4 அக்டோபர் 2017 (UTC)[பதிலளி]

தலைப்பை மாற்றுக[தொகு]

இத்தலைப்பு விக்கிப்பீடியா பெயரிடல் மரபின் பண்புகளுக்கு முரணாக உள்ளது. ஸ்பெயின் என்ற சொல் அனைவரும் அடையாளம் கண்டுகொள்ளும் சொல்லாகவும் அதுகுறித்தக் கட்டுரைகளைத் தொகுக்கும்போது பயனர்கள் அதிகம் பயன்படுத்தும் சொல்லாகவும் உள்ளது. ஜப்பான், ஜெர்மனி போன்ற நாடுகளுக்கு உள்ளூர் மொழிகளில் வெவ்வேறு பெயர்கள் உள்ளன. ஆனால் அவற்றை நாம் பயன்படுத்துவதில்லை. எனவே தலைப்பை ஸ்பெயின் என்று மாற்றுவதே சரி. GangadharGan26 (பேச்சு) 07:46, 25 செப்டம்பர் 2019 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:எசுப்பானியா&oldid=2806890" இலிருந்து மீள்விக்கப்பட்டது