பேச்சு:உள் நாட்டுப் பாதுகாப்புப் பராமரிப்புச் சட்டம், 1973
இந்த மிசா என்றத் தலைப்புத் தேவையென்றால் அப்படியே இருக்கலாம், இல்லையென்றால் நீக்கலாம், இந்த சட்டம் இப்படித்தான் பெரும் பான்மையோருக்குத் தெரியும்.--செல்வம் தமிழ் 17:13, 21 ஏப்ரல் 2009 (UTC)
- உள்நாட்டுப் பாதுகாப்புப் பேணல் சட்டம், 1973 என்பதை முதன்மைத் தலைப்பாகக் கொள்ளலாம். மிசா கட்டுரையிலிருந்து மாற்றுவழியும் இக்கட்டுரையின் முதல் பத்தியில் தடித்த எழுத்தில் மிசா என்று உரையிலும் தந்தால் போதுமானது. -- சுந்தர் \பேச்சு 17:36, 21 ஏப்ரல் 2009 (UTC)
பாதுகாப்பு பேணல் போன்ற சட்ட சொல்லுக்கு நம் இஷட்த்துக்கு பெயர் மாற்றினால் இன்னொருமுறை இதேக் கட்டுரையை அதன் மூலச் சட்ட வாக்கியத் தலைப்பில் எழுத வேண்டிவரும். சட்டத்தில் என்ன குறிப்பிட்டிருக்கின்றதோ அதே மாதிரித் தலைப்பை இடவும் சட்டபுத்தகத்தை மேற்கோள் காட்டலாம்.இந்தத் தலைப்பை இணையத்தில் உள்ள கீற்று என்ற தமிழ் இணையத்தளம் பார்த்து வைத்தேன். மிசா என்றத் தனித் தலைப்பு வைப்பதிலு ஆட்சேபனை இல்லை. ஆனால் அது ஆங்கில சொல். கட்டுரையில் இடையில்தான் நாம் கொடுக்கின்றோமே--செல்வம் தமிழ் 15:00, 22 ஏப்ரல் 2009 (UTC)
- இது நாடாளுமன்றத்தில் நிறைவேறிய சட்டம் என்பதால், தமிழில் மூல உரையோ தலைப்போ இருக்குமா தெரியவில்லை. தமிழ் சட்ட நூல் எதுவும் என்னிடம் இல்லை. வாய்ப்பு கிடைத்தால் எவரேனும் பார்த்துச் சொல்லுங்கள். சுட்டாச்சு சுட்டாச்சு நூல் இச்சட்டம் செயல்பாட்டில் இருந்த நாட்களில் செய்தித்துறை தொடர்பில் இருந்த சுதாங்கனால் எழுதப்பட்டது. அதனால் அதை ஒரு தரமான சான்றாகக் கொள்ளலாம் என்று நினைக்கிறேன். உள்நாட்டுப் பாதுகாப்பு பராமரிப்புச் சட்டம், 1973, மிசா ஆகியவற்றிலிருந்து மாற்றுவழிகளை ஒருவாக்கலாம். நீங்கள் சொன்னதுபோல் உரைநடுவேயும் மிசா உள்ளது. உங்களுக்கு உடன்பாடென்றால் மாற்றிவிடலாம். -- சுந்தர் \பேச்சு 07:48, 23 ஏப்ரல் 2009 (UTC)
பயங்கரவாதம் என்ற சாதரணமாக பயன்படுத்துவதில்லை terrorist தீவிரவாதி என்றே பயன்படுத்துகின்றோம் ஆனால் சட்டம் எனப்படும் அதன் மீது மிரட்சி ஏற்படுவதற்காக பயங்கரவாதம் என்ற சொல்லைப் பயன்படுத்துகின்றனர். அவருக்கு தண்டணை அளிக்கும் பொழுது இந்த மிரட்சியுடன்தான் மக்கள் குற்றவாளியைப் பார்ப்பர். தணிக்கப்பட்ட சொல்லை கட்டுரையின் இடையில் கொடுக்கலாம்.--செல்வம் தமிழ் 15:07, 22 ஏப்ரல் 2009 (UTC)
தவறு தவறு என்று என்று எல்லவாற்றையும் தவறாக கூறும் அகராதியிருப்பவர்கள் இந்த தளம் சென்றுப் பார்க்கவும்.[தமிழ் இணையத்தளம் தமிழ் அகராதிபற்றிய வரலாறு- கருத்தாய்வு]--செல்வம் தமிழ் 18:52, 16 மே 2009 (UTC)
- செல்வம் தமிழ் அருள்கூர்ந்து "இந்தத் தளத்தில் இப்படிக் கூறுகிறார்கள். இதனைப் பார்க்க வேண்டுகிறேன். இப்படி எழுதுவது நல்லதாக இருக்கும் என்று நினைக்கிறேன்" என்பது போல் கூறுங்கள். அது வளர்முக உரையாடலுக்கு உகந்தது. தவறு தவறு என்று என்று எல்லவாற்றையும் தவறாக கூறும் அகராதியிருப்பவர்கள் என்னும் வகையான சொல்லாடல்கள் இங்கு விக்கியில் நல்லதல்ல. தவிர்க்க வேண்டும் என அன்புடன் வேண்டிக்கொள்கிறேன். இது உங்களுக்காக இட்ட வேண்டுகோள் மட்டும அல்ல, விக்கிப் பயனர்கள் அனைவரும் கருத்தில் கொள்வது நல்லது. கருத்து வேறுபாடுகள் இருப்பது தவறே இல்லை. ஆனால் தேவையானவற்றை மட்டும், அதுவும் கூடிய மட்டிலும் கருத்தை மட்டுமே மையமாக வைத்து கூறுவதும், கூடிய மட்டிலும் இணக்க, இசைவு உணர்வு இருக்குமாறு உரையாடுவது நல்லது. நன்றி.--செல்வா 02:44, 17 மே 2009 (UTC)
உள்நாட்டு பாதுகாப்புப் பராமரிப்புச் சட்டத்தின் (மிசா) கீழ் கைது செய்யப்பட்டவர்கள் உயிரோடு இருக்கிறார்களா என்று தெரியாத நிலையில், கைது செய்யப்பட்டவர்களின் சார்பாக ஆட்கொணர்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இது மாதிரி மேற்கோள்கள் இணையத்தில் நிறைய உள்ளன. பழைய பத்திரிகைகளில் இதற்கு மேற்கோள்கள் உள்ளன. அவை இணையத்தில் இல்லை நூலகத்தில் தான் இருக்கும் இணையத்தில் நிறையக் கட்டுரைகள் உள்ளன.
இது ஒடுக்கப்படுவதற்காக, அடக்குவதற்காக அவசரகாலத்தில் கொண்டுவரப்பட்டச் சட்டம். இந்தப் பெயரில் தான் காவல் நிலையங்களில் எழுதினர். ஆனால் பேணுவது என்றால் ஒரு குழந்தையை பேணி வளர்க்கலாம் என்றபொழுது இந்த சொல் வரலாம் இங்கு எப்படி பொருந்தும். தீயவர்களிடமிருந்து நாட்டைப் பாதுகாப்பது, பராமரிப்பது என்றுதான் வரும். கிட்டங்கியை சரியாக பேணுவது என்றால் சரியாக வருமா? இடத்திற்குத் தகுந்த சொல்தான் வரவேண்டும். அது அந்த நிகழ்வுக்குப் பொருந்தும் அகராதியிலும் வரவில்லை. maintanence என்பதற்கு பராமரிப்பது என்றுதான் வரும் இதை உயர்திணையாக ஆக்கமுடியாது. மென்மையான சட்டமோ மனித உரிமை பாதுகாப்பு சட்டமோ அல்ல.
இட்லர் இனவழிப்பு செய்தார் என்றால் அது கட்டுரைக்கு பொருந்தாது. இன்ப்படுகொலை அல்லது இன்க்கொலை என்றால்தான் அந்த கட்டுரைக்கு உணர்ச்சி வரும்.
கொலையும், அழிப்பும் ஒன்றல்ல.
இது ஒரு மேற்கொள் [1] அன்றே இது ப்ற்றி பயனரிடம் விளக்கிவிட்டேன். அப்பொழுதே கேட்டிருந்தால் அந்த மேற்கோளையும் காட்டியிருப்பேன். ச்ட்ட விடயங்களில் நான் தன்னிச்சையாக செயல்படுவதில்லை.--செல்வம் தமிழ் 22:05, 16 மே 2009 (UTC)
தலைப்பு
[தொகு]தமிழிலக்கணப்படி இது உண்ணாட்டுப் ... அல்லது உள் நாட்டுப் ... என்றிருக்க வேண்டும். ளகர மெய்யுடன் நகரவெழுத்து சேரும் போது ணகரமாக மாறுவது விதி.--பாஹிம் (பேச்சு) 05:38, 23 சூன் 2013 (UTC)