பேச்சு:உருமுச்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

பாராட்டு, நன்றி[தொகு]

இகட்டுரை எழுதியதற்கு நன்றி, மணியன்! இங்கு நடந்த கலவரங்களை அறிந்தபொழுது ஒரு கட்டுரை துவங்க வேண்டும் என்று எண்ணினேன், நீங்கள் அழகுற எழுதியமைக்கு நன்றி. சீன மொழிச் சொற்களில் உரோமன் q என்னும் எழுத்து வரும் இடங்களில் சி (-ச்சி- அல்லது -ட்சி- ) என்றே எழுதலாம். இவ்வொலியை அவர்கள் குழப்பம் தரும் வகையில் q என்னும் உரோமன் எழுத்தால் குறிக்கின்றனர். அது கி ("க்கி") அல்ல. --செல்வா 16:57, 14 ஜூலை 2009 (UTC)

சீன தமிழ் வானொலி இணையத்தளத்தில் (tamil.cri.cn) உருமுச்சி என எழுதுகிறார்கள்.--Kanags \பேச்சு 22:10, 14 ஜூலை 2009 (UTC)
ஆம், உருமுச்சி அல்லது உலுமுச்சி என்பது சரியாக இருக்கும். கடைசி எழுத்துக்கு முன்னதாக உள்ள 木 என்னும் குறியின் ஒலிப்பு மு என்பது. அதன் பொருள் மரம் என்பது. முதல் எழுத்து வு என்பது போல ஒலிக்கும் என நினைக்கின்றேன். சீன வானொலி இணையத்தில் உருமுச்சி என்பதால், நாமும் அப்படியே குறிப்பிடலாம்.--செல்வா 01:10, 15 ஜூலை 2009 (UTC)
அனைவருக்கும் நன்றிகள். சீன மொழி அறியாமையால் எழுந்த தவறை நிமிடங்களில் கண்டு உடனே சரிசெய்த விக்கிபீடியர்களின் திறன்வீச்சை அறிய இது உதவியது. இனி சீனப்பெயர்களுக்கு சீன வானொலி தளத்துடன் சரிபார்க்கிறேன். -- 05:53, 15 ஜூலை 2009 (UTC)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:உருமுச்சி&oldid=404791" இருந்து மீள்விக்கப்பட்டது