பேச்சு:ஈரோனின் நீருற்று
Appearance
Booradleyp1 இக் கட்டுரையைப் பற்றி தங்களின் ஆலோசனைகளை வழங்க வேண்டுகிறேன்.--மணிவண்ணன் (பேச்சு) 17:30, 18 சூலை 2017 (UTC)
@TNSE MANI VNR: கட்டுரை நன்றாக உள்ளது. பாராட்டுகள்.
- "Heron" என்ற பெயரின் தமிழ் ஒலியாக்கம்: ஈரோன், ஈரோ அல்லது ஹெரோன் (காண்க:ஈரோனின் வாய்பாடு). இதனால் தலைப்பையும் உள்ளடக்கத்திலும் மாற்றியுள்ளேன்.
- துவக்கத்தில் வகைப்படுத்தும்போது குறிப்பிடப்பட்டுள்ளதால், எல்லா இடங்களிலும் கொள்கலன் (அ/ஆ/இ) என்பது குறிப்பிட வேண்டாம் என நினைக்கிறேன்.
- மற்றபடி கட்டுரையை வாசிக்கும்போது, புரிதல் மேலும் எளிதாக இருக்கும் என்று எனக்குத் தோன்றிய இடங்களில் வாக்கிய அமைப்பை மாற்றியிருக்கிறேன்.
- ஒரு வாக்கியம் முடிந்து முற்றுப்புள்ளி வைத்த பின்னர் ஒரு இடைவெளி விட்டு அடுத்த வாக்கியத்தைத் தொடங்குவது அவசியம்.
தொடர்ந்து இயற்பியல் கட்டுரைகளை உருவாக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். நன்றி.--Booradleyp1 (பேச்சு) 03:40, 20 சூலை 2017 (UTC)
Booradleyp1 தங்கள் ஊக்குவிப்புக்கு நன்றி...கெரன் என்ற ஒலிப்பை youtubeல் கேட்டதால் அவ்வாறு எழுதினேன்.தங்களின் ஆலோசனைகளைத் தொடர்ந்து வழங்கக் கேட்டுக்கொள்கிறேன்.இதனுடன் கெல்வின் நீர்மச் சொட்டி என்ற கட்டுரையும் உள்ளது, அதற்கும் தங்கள் ஆலோசனைகளை வழங்க வேண்டுகிறேன்.--மணிவண்ணன் (பேச்சு) 05:13, 20 சூலை 2017 (UTC)