பேச்சு:இலங்கைத் தமிழ் பேச்சு வழக்குகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

இலங்கைத் தமிழ் பேச்சு வழக்குகளின் வகைகள் பற்றி வேறுபட்ட கருத்துகள் காணப்படுகின்றன. இதுபற்றிய தெளிவனை பெறுவது இக்கட்டுரையின் உப தலைப்புக்களை எழுத உதவும்.

பிரிப்பு 1 - 3 வகைகள் (பார்க்க en:Sri Lankan Tamil dialects)
பிரிப்பு 2 - 5 வகைகள் (பார்க்க UCLA)

பின்வருமாறு பிரிப்பது பொருத்தமாக இருக்குமா?

 • யாழ்ப்பாணத் தமிழ்
 • வன்னித் தமிழ்
 • திருகோணமலைத் தமிழ்
 • நீர்கொழும்புத் தமிழ்
 • கொழும்புத் தமிழ்
 • மலைநாட்டுத் தமிழ்
 • மட்டக்களப்புத் தமிழ்

--Anton (பேச்சு) 17:33, 26 சூன் 2012 (UTC)

வணக்கம் அன்ரன். நீங்கள் குறிப்பிட்ட வகைகளோடு இலங்கைத் தமிழ் முஸ்லிம்கள் (தெற்கு, தென்மேற்கு தமிழ்) தமிழையும் சேர்க்கலாம் என்று நினைக்கிறேன். ஏப்பிரல் ஞானம் இதழில் "முஸ்லிம்களின் தமிழ் மொழிப் பேச்சு வழக்கைப் பற்றிய கண்ணோட்டம்" என்ற ஒரு கட்டுரை வந்துள்ளது. அதில் தெற்கு, மேற்கு, தென்மேற்குப் பகுதியில் வாழும் முஸ்லிம்களின் பேச்சு வழக்கில் பல தனித்துவமான அம்சங்கள் இருப்பதைச் சுட்டுகிறார். சில எடுத்துக் காட்டு வசனங்கள் கீழே:
 • "எனக்கு சரியான நஞ்சி நோவு, சூடாக போபி தண்ணி குடிச்சா நல்லம்.."
 • "அச்சு கொல்ல வந்தா அச்சு கொலிய; கொல்லிக் கொண்டு வந்தா கொல்லிக் கொளிய; எல்லோரையும் கொல்லிப் போட்டு மலாக்கா போற.."
 • "அந்த ஆத்துல தன்னி பொரயாகி குளிச்சேலே"
 • "நீங்க...வாறோ...நீங்க...போறா"

இவை பற்றி ஆங்கானே வாசித்த ஞாபம் உள்ளது. மேலதிக குறிப்புக்களைச் சேர்க்கிறேன். --Natkeeran (பேச்சு) 23:59, 26 சூன் 2012 (UTC)

இலங்கை வட்டார வழக்குகள் பற்றி சுவையான பதிவுகள்

பேச்சு வழக்கு வகைகள்[தொகு]

 • யாழ்ப்பாணத் தமிழ்
 • வன்னித் தமிழ்
 • திருகோணமலைத் தமிழ்
 • மட்டக்களப்புத் தமிழ்
இவை பற்றிய வகை பிரித்தல் சிக்கல் அற்றது என நினைக்கிறேன்.


 • நீர்கொழும்புத் தமிழ்
 • மலைநாட்டுத் தமிழ்
 • முஸ்லிம்களின் தமிழ்
கொழும்புத் தமிழ் என்பது மேலுள்ள தமிழ் வழக்குகளின் கலவையாகவே இன்று காணப்படுகின்றது. ஆகவே நீக்கிவிடலாமா?

--Anton (பேச்சு) 04:04, 27 சூன் 2012 (UTC) இல்லை அன்ரன் கொழுப்புத் தமிழின் தற்கால வழங்கியல், அதன் பின்புலம் மற்றும் காரணங்கள் எனக் கட்டுரையை விரித்து அமைக்கலாம். மற்றும் தமிழ்நாட்டிலிருந்து இங்கு நீண்டகாலமாக வதியும் வர்த்தகர்களின் தமிழ்நடை தமிழ்நாட்டுவழக்கில் ஒத்தமைவதையும் காட்டலாம்.--சஞ்சீவி சிவகுமார் (பேச்சு) 06:57, 27 சூன் 2012 (UTC)

பழமொழிகள்[தொகு]

 • தனக்கெடா சிங்களம் பிறடிக்கு சேதம்
 • தங்க ஊசி என்றாலும் வயித்தில குத்தினா காயம் வரும்
 • கூழ் ஆனாலும் குளித்துக் குடி
 • கஞ்சி கடப்படி
 • புட்டி பட்டணம்
 • கூழ் குளத்தடி
 • பேச்சு பல்லக்கு, தம்பி கால்நடை