உள்ளடக்கத்துக்குச் செல்

பேச்சு:இயென்சு சுடோல்ட்டென்பர்க்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இயென்சு சுடோல்ட்டென்பர்க் என்னும் கட்டுரை வாழ்க்கை வரலாறு தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் வாழ்க்கை வரலாறு என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.

Untitled

[தொகு]

இவர் பெயரை இயென்சு சுடோல்ட்டென்பர்க் என்று எழுதலாம் என்று நினைக்கிறேன். அல்லது யென்சு சுடோல்ட்டென்பர்க் எனலாம். J (ஜ) ஒலி இல்லாத இடாய்ட்சு மொழியாரும் எசுப்பானிய மொழியாரும் Fiji என்னும் நாட்டின் பெயரை Fidschi (Fidschi) என்றும் Fiyi (பார்க்க: Fiyi) என்றும் அழைக்கின்றனர். நாமும் நம் மொழிப்படி எழுதுவதால் என்ன தவறு? கூடியமட்டிலும் கிரந்தத்தை விலக்கி எழுதுவது ஒலிப்பதற்கும் (பொதுவாகத் தமிழர்களுக்கு) எளிது. Jens Stoltenberg என்பதைச் சொல்லிப்பாருங்கள், இடையே வரும் இரட்டை s ஒலிப்பு தமிழர்களுக்குக் கடினம், மேலும் அதில் சிறிது உயிரொலி கலந்து இருக்கும். நாம் இயென்சு என்றோ யென்சு என்றோ திரிப்பதால் தவறில்லை. மொழி இயல்பின்படி எழுதுவதும் வழங்குவதும் எம்மொழியிலும் நிகழ்வதுதானே. --செல்வா 12:47, 17 செப்டெம்பர் 2009 (UTC)[பதிலளி]

இயென்சு சுடோல்ட்டென்பர்க் என்றே மாற்றிவிடுகிறேன். கிரந்தம் தவிர்த்து எழுதவே விரும்பியிருந்தேன். இருந்தாலும் ஒரு எழுத்து எப்படியோ என் கண்ணுக்குப் படாமல் தப்பி விட்டது:). நன்றி செல்வா.--Kanags \பேச்சு 12:54, 17 செப்டெம்பர் 2009 (UTC)[பதிலளி]
மிக்க நன்றி சிறீதரன் கனகு. --செல்வா 13:01, 17 செப்டெம்பர் 2009 (UTC)[பதிலளி]