பேச்சு:இயல் எண்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

இயல்பெண் சரியா அல்லது இயல் எண் சரியா என்று தெரியவில்லை. positive, negative, numbers என்பதற்கு நேர்ம எண், எதிர்ம எண் என்று சொல்வது சரி என்று எண்ணி எழுதி இருக்கிறேன். மிகை எண், குறை எண் என்னும் சொற்கள் சரி என்றுஎனக்கு படவில்லை. இவை சரியென்றால் திருத்திக் கொள்ளலாம்.--C.R.Selvakumar 03:26, 17 ஜூன் 2006 (UTC)செல்வா

இயல்பெண் தவறில்லையென்றாலும்கூட இயல் எண் என்பது சரியான பொருள் தருகிறது எனத் தோன்றுகிறது. தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் முந்தையதைப் பார்த்ததாக நினைவு. அவற்றின் ஆங்கிலப் பெயர்களைக் கொண்டு பார்க்கையில் நேர்ம, எதிர்ம எண் என்பது சரியாகத் தோன்றுகிறது. ஒருவிதமான நேர்-எதிர் உறவை (complementation) உணர்த்துகிறது. அதனால், கூட்டல் உறவின் கணிதத் தலைகீழ்கள் என்ற அடிப்படையில் இதுவே சரி. -- Sundar \பேச்சு 06:30, 17 ஜூன் 2006 (UTC)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:இயல்_எண்&oldid=2527264" இருந்து மீள்விக்கப்பட்டது