பேச்சு:இடாய்ச்சு மக்களாட்சிக் குடியரசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

இந்நாட்டின் பெயர் Deutsche Demokratische Republik என்று உள்ளது. இதன் தலைப்பை இடாய்ச்சு மக்களாட்சிக் குடியரசு எனப் பெயரிட்டால் பொருத்தமாக இருக்கும் என நினைக்கின்றேன்.--செல்வா (பேச்சு) 14:11, 27 அக்டோபர் 2013 (UTC)

மூன்று ஆண்டுகளுக்கு முன் வேண்டுகோள் விடுத்தேன். இக்கட்டுரையை முறையாக இடாய்ச்சு மக்களாட்சிக் குடியரசு என மாற்றலாமா? இடாய்ச்சுலாந்தைப் பலநாட்டினரும் பலவாறு அழைக்கின்றனர். இடாய்ச்சு மொழிக்கு நெருக்கமான இடேனியர் (Danish), தங்கள் இடேனிய மொழியில் (Dansk) Tyskland என்கின்றனர். எசுப்பானியர் Alemania என்கின்றனர். பிரான்சியர் Allemagne என்கின்றனர். போலந்தியர் Niemcy என்கின்றார்கள் (சுலாவிய மொழிக்குடும்பத்தைச் சேர்ந்த பல மொழிகளிலும் இப்படித்தான் பெயர். இதன் பெயர் பேசத்தெரியாதவர்கள் என்பதாம்!!) போர்த்துகேய மொழியில் Alemanha. இத்திய மொழியில் (Yiddish) Ashkenaz. புருண்டியின் கிருண்டி மொழியில் Ubudage. நாம் நம் தமிழில் அவர்கள் தங்களை அழைத்துக்கொளும் சொல்லாகிய Deutsche என்பதற்கு நெருக்கமாக இடாய்ச்சு எனலாமே. எனவே இடாய்ச்சு மக்களாட்சிக் குடியரசு எனப்பெயரிட வேண்டுகின்றேன்.--செல்வா (பேச்சு) 15:02, 7 அக்டோபர் 2016 (UTC)
Yes check.svgY ஆயிற்று--Kanags \உரையாடுக 01:08, 8 அக்டோபர் 2016 (UTC)