பேச்சு:இடவியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
Exquisite-kfind.png இடவியல் எனும் இக்கட்டுரை முதற்பக்கத்தில் காட்சிப்படுத்திய கட்டுரைகளில் ஒன்று.
Wikipedia

சார்பு[தொகு]

சார்பு (கணிதம்) (செயலி (கணிதம்)) என்று function குறிக்கின்றீர்களா? இலங்கை வழக்கமும் இதுதான். இச்சொல்லின் தோற்ற விளக்கமும் பொருள் விளக்கமும் தர முடியுமா? --Natkeeran 16:54, 22 ஏப்ரல் 2007 (UTC)

விளக்கம் தரும் அளவுக்கு எனக்கு தமிழில் வன்மை இல்லை. ஆனால் 1950 களிலிருந்து என்னிடம் ஒரு கலைச்சொற்கள் அகராதி (நானே பல இடங்களிலிருந்து எடுத்து எழுதிவைத்தது) என்னிடம் இருக்கிறது. அதிலிருந்து எடுத்தேன். அந்த நாட்களில் நான் மதுரை தியாகராயர் கல்லூரியில் கணித ஆசிரியராக பணியாற்றிக்கொண்டிருந்தேன். தமிழ்த்துறையில் அதே கல்லூரியில் என்னுடன் ஆசிரியராகவும் எனக்கு மிகவும் வேண்டிய நண்பராகவும் இருந்தவர்கள்: அ.கி. பர்ந்தாமனார்; ராசமாணிக்கனார்; இலக்குவனார்; பாலுச்சாமி முதலியவர்கள். அவர்கள் மூலம் தான் என் தமிழார்வம் வள்ர்ந்தது.--Profvk 00:21, 23 ஏப்ரல் 2007 (UTC)

பதிற்குறிக்கு நன்றி. தமிழில் 1950 களில் இருந்த கலைச்சொற் ஆக்க முறைக்கும் இன்றைக்கு இருக்கும் கலைச்சொற் ஆக்க முறைக்கும் குறிப்பிடத்தக்க வேறுபாடு உண்டு. அன்று சமஸ்கிரத சொற்களை முதன்மையாக வைத்து ஆக்கினார்கள். அந்த சொற்கள் பல இன்றும் இலங்கையில் வழக்கமாக இருக்கின்றன. தமிழகத்தில் தமிழ் வேர்ச்சொற்களை முதன்மையாக வைத்து கலைச்சொற்களை ஆக்கும் வழக்கம் தற்போது இருக்கின்றது. சார்பு தமிழிகத்திலும் வழக்கதில் இருக்கின்றதா என தெரியவில்லை. இத்தகவல்களை நீங்கள் அறிந்திருப்பீர்கள் என்றே நினைக்கின்றேன். --Natkeeran 02:24, 23 ஏப்ரல் 2007 (UTC)

function என்னும் சொல் எளிய நோக்கில் ஒன்று அல்லது பல மாறிகளைச் சார்ந்து மாறுபடும் ஒன்றாகும். எனவே இதனைச் சார்புக் கணிதம் என்பர். ஒன்று அல்லது பல மாறிகளால் செயல்பட்டு மாறுவதால் செயலி என்றும் சொல்லலாம். வெறும் மாறியாக இல்லாமல் வேறுவகையான உருப்படிகளாகவும் இருக்கலாம். நற்கீரன் உங்களுக்கு என்ன விளக்கம் தேவை என்று விளங்கவில்லை. அச்சொல் எப்பொழுதில் இருந்து இருக்கின்றது என்று எனக்கும் தெரியாது. ஆனால் ஏன் அப்பெயர் பெற்றது என்று பலவாறு விளக்கலாம். இரண்டும் நல்ல தமிழ்ச்சொற்கள்தாம்.--செல்வா 02:37, 23 ஏப்ரல் 2007 (UTC)

அறிமுகம்[தொகு]

Profvk, உங்களுக்கு மீண்டும் என் பாராட்டுக்கள். வளர்முகமாக செய்யப்படும் திறனாய்வுகளை நீங்கள் வரவேற்பீர்கள் என்று நான் நம்புகிறேன். இத்துறையைப் பற்றி அறியாதவர் படிக்கும் பொழுது, முதல் பத்தியிலே ஓரளவிற்குக் கருத்து தெளிவாகி மேலும் படிக்க ஆர்வம் துளிர்க்க வேண்டும் என விரும்புகிறேன். அறிந்ததைக் காட்டி அறியாத புதுச்செய்திகளுக்கு அறிமுகம் தரவேண்டுமல்லவா? ஆகவே இடவியலில் எப்படி வட்டம், சதுரம், நீள்வட்டம் எல்லாம் ஒன்றே. ஏன் அது ஒன்றாக கருதப்படுகின்றது. வடிவவியலுக்கும் இடவியலுக்கும் என்ன வேறுபாடு (சுருக்கமாக) ,அதன் அடிப்படை என்ன என்று சற்று விளக்கிவிட்டு பிறகு உயர்நிலை விளக்கங்கள் தரலாம. இப்பொழுது இருக்கும் முதல் பத்தி:

"இது கணிதத்தின் ஒரு பெரிய உட்துறை. அடிப்படைக் கணித அமைப்புகளுக்குக் குந்தகமில்லாமல் வடிவவியல் முறையிலோ அல்லது இயற்கணித முறையிலோ செய்யப்படும் உரு மாற்றங்களைப் பற்றிய இந்தத்துறைக்கு இடவியல் என்று பெயர். ஆங்கிலத்தில் Topology என்றும், பிரென்ச், ஜெர்மானிய மொழிகளில் Topologie என்றும் கூறப் படுகிறது."

இந்த அறிமுகம் கணிதத்தில் கற்றுத்தேர்ந்தவர்களுக்கு விளங்கும், ஆனால் முதன் முறையாக படிக்கும் ஒருவர், இரண்டாம் சொற்றொடரை விளங்கிக்கொள்வது கடினம். கட்டுரையின் அடுத்த பத்தியில் தோற்றம், வரலாறு தொடங்குகின்றது. எனவே முதல் பத்தியில், இத்துறையின் அடிப்படைகளை ஒருசிறிது விளக்கி அறிமுகப்படுத்த வேண்டுகிறேன். மேலும் ஒரு கருத்து: முத்திரட்சி (முப்பரிமாண) வடிவங்களைவிட, கோடுகள், பரப்புகள் முதலிய எளிய கருத்துக்களைப் பற்றிய இடவியல் கருத்துக்களை முதலில் விளக்கிப் பின்னர் முத்திரட்சி வடிவங்களின் திரிபுகள் பற்றியும் மாறா அல்லது இணை வடிவங்களைப் பற்றியும் கூறினால் பொருத்தமாக இருக்கும் என நினைக்கிறேன். --செல்வா 19:43, 22 ஏப்ரல் 2007 (UTC)

செல்வா, நீங்கள் சொல்வது முற்றிலும் எனக்கும் சம்மதம். என்னுடைய பிரச்சினை படம் போடுவதில் இருக்கிறது. Latex இல் படம் போட கற்றுக்கொள்ள முயற்சிக்கிறேன். அதன் பிறகு நீங்கள் சொல்லியபடி தான் செய்யவேணும். அதுவே என் ஆசையும். --Profvk 21:25, 22 ஏப்ரல் 2007 (UTC)

Profvk, word போன்ற எளிய மென்பொருட்களைக் கொண்டே பல படங்கள் வரையலாம். துல்லியமாக சமன்பாடுகள் கொண்டு உருவாக்கவேண்டும் எனில் Maple, Matlab, mathematica போன்ற பயன்முக மென்பொருட்கள் தேவைப்படலாம். உங்களுக்கு உதவி தேவை என்றால் ஒத்தாசைப் பக்கம் என்னும் இடத்திலும் இட்டுக் கேட்கலாம். படங்கள் வரையவும் உதவி கிடைக்குமா என அறியேன். எளிமையானதாக இருப்பின் இங்குள்ள சிலர் உதவமுடியும் என நினைக்கிறேன். --செல்வா 21:48, 22 ஏப்ரல் 2007 (UTC)
Autocad, Photoshop போன்ற மென்பொருட்களில் போடக்கூடிய படங்கள் எனில் என்னாலும் ஓரளவுக்குக் கை கொடுக்க முடியும். Mayooranathan 02:48, 23 ஏப்ரல் 2007 (UTC)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:இடவியல்&oldid=808838" இருந்து மீள்விக்கப்பட்டது