பேச்சு:ஆபிரகாமிய சமயங்கள்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.


பேச்சு:ஆபிரகாமியம் பக்கத்திலிருந்து நகர்த்தப்பட்ட உரையாடல்[தொகு]

ஆபிரகாமிய மதங்கள் அனைத்துக்கும் மூல மதம் ஆபிரகாமியம் என்பது ஒரு சாரரின் கருத்தே. பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்டதல்ல. அதற்கேற்றார் போல இக்கட்டுரையினை மாற்றியுள்ளேன். (மாற்று கருத்துகள் நிலவும் போது, ஒரு சாரர் சொல்வது “தான்” உண்மை என்று நிறுவுமாறு எழுதுவது விக்கியின் மரபல்ல.--சோடாபாட்டில்உரையாடுக 06:32, 7 சனவரி 2011 (UTC)[பதிலளி]

ஆபிரகாமிய மதங்களில் இருந்தே ஏனைய மத்திய கிழக்காசிய நாடுகளில் தோன்றிய மதங்களும் உருவாகின என்பதை மதவாத மனநோயாளர்கள் ஏற்றுக்கொள்வதில்லை. ஆனால் ஆபிரகாமிய மதம் போதித்த அதே கொள்கைகள், யூதாயிசத்திலும், கிறுத்துவத்திலும், இஸ்லாத்திலும் இருப்பதே இதற்கான அடிப்படை ஆதாரமாகும்.

கிறுத்துவர்களில் சிலரும், மதம் தொடர்பான ஆய்வுகளை மேற்கொண்டோரும், கிறுத்துவத்தின் பழைய ஆகமம் நூலின் கருத்து ஆபிரகாமிய மதக் கருத்தின் உருவாக்கமே என்று கூறியப்போதும், கிறுத்துவம் தோன்றி 500 ஆண்டுகளுக்கு பின்னர் தோன்றிய எமது இஸ்லாம் மார்க்கமோ அதே கொள்கைகளையும் வரலாற்றையும் கூறிக்கொண்டு வானத்தில் இருந்து குரான் வந்ததாகக் கூறும் அறியாமையும் பல இடங்களில் நான் பார்த்தே வருகிறேன். இருப்பினும் கற்பனையும், கொள்கையும் சார்ந்து சிலரின் மதவாதக் கோட்பாடுகளுக்கு நான் எதிர்கருத்திட்டு வாதிடுவதில் அர்த்தமில்லை. ஆனால் உண்மையின் பின்னனியும் ஆராயும் பொருட்டு, ஒரு வரலாற்று குறிப்பாகவே நான் இவற்றை பதிந்து வைக்கிறேன். --மொஹமட் ஹனீஃப் 06:44, 7 சனவரி 2011 (UTC)[பதிலளி]

மொஹமட், விக்கி ஒரு ஆய்வுத் தளமல்ல; இது ஒரு மூன்றாம் நிலை தரவு தளம் (tertiary source of information). வலைப்பதிவு போலவோ, பிற தளங்களைப் போலவோ நமது கருத்துகளையும், “உண்மை என நாம் உணர்ந்ததையும்” இங்கு பதிய முடியாது. ஒரு விஷயத்தில் பற்பல கருத்து வேறுபாடுகள் இருப்பின் அனைத்தையும் சேர்த்தே பதிய வேண்டும். சர்ச்சைக்குரிய விஷயங்களை பல தரப்பு கண்ணோட்டங்களையும் இட்டு, இவ்வளவு கண்ணோட்டங்கள் உள்ளன, இவற்றை அனைவரும் ஒத்துக்கொள்வதில்லை என்பதைப் பதிவதே விக்கியின் மரபு. ஆங்கில விக்கியின் en:Abrahamic religions கட்டுரையில் இதனைக் கையாண்டுள்ள விதத்தினைப் பாருங்கள். இது விக்கி எப்படி இவ்விஷயங்களை அணுகுகிறது என்பதற்கு ஒரு நல்ல எடுத்துக்காட்டு.--சோடாபாட்டில்உரையாடுக 06:54, 7 சனவரி 2011 (UTC)[பதிலளி]