பேச்சு:அயிரை மலை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

ஐயர் மலையை அயிரை மலை என்கிறீர்கள். 'ஐயர்' என்னும் சொல் 'அய்யர்' 'அயிர்' என மருவ வாய்ப்பு உண்டு. 'ஐ' விகுதி சேர மரூஉ மொழியில் வாய்ப்பில்லை. கட்டுரையின் தலைப்பு 'ஐயர் மலை' என இருந்தால் என்ன குறை நேர்ந்துவிடும் என விளங்கவில்லை. கருதுவோம். --Sengai Podhuvan (பேச்சு) 21:26, 24 செப்டம்பர் 2013 (UTC)

அய்யா அவர்களின் மேலான கவனத்திற்கு ஐயர் மலை அல்ல, ஐவர் மலை. அதாவது பாண்டவர்களை குறித்து தமிழர்கள் கூறும் வழக்கமாகும். தமிழ்நாட்டில் உள்ள அனேக சமணர் குகைகள் உள்ள மலைக்குன்றுகள் ஐவர் மலை என்றே அழைக்கப்படுகிறது. அது போன்றே கட்டுரையில் உள்ள அயிரை மலை அப்பகுதி மக்களால் ஐவர் மலைஎன்று அழைக்கப்படுகிறது. மேலும் இம்மலையில் உள்ள கல்வெட்டுக்களில் (தமிழ் வட்டெழுத்துக்கள்) அயிரை மலை என்றே குறிக்கப்பட்டுள்ளது. இம்மலையில் உள்ள கல்வெட்டுக்கள் படம் கட்டுரையில் இடம்பெற்றுள்ளது.--யோகிசிவம் (பேச்சு) 17:19, 25 செப்டம்பர் 2013 (UTC)

கல்வெட்டுகளில் அயிரை மலை என இருக்குமாயின் இருக்கின்ற தலைப்பு சரியே. --Sengai Podhuvan (பேச்சு) 21:38, 25 செப்டம்பர் 2013 (UTC)
நன்றி!அய்யா மேலும் அயிரை மலை (சங்க காலம்) என்ற கட்டுரையும் உள்ளது. பதிற்றுப் பத்து குறிக்கும் மலை என கட்டுரையில் காணமுடிகிறது. பதிற்றுப் பத்து குறிக்கும் அயிரை மலை பாண்டிய நாட்டிலா? சேர நாட்டிலா? அய்யா அவர்கள் அய்யம் போக்குங்களேன்.--யோகிசிவம் (பேச்சு) 03:04, 27 செப்டம்பர் 2013 (UTC)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:அயிரை_மலை&oldid=1504544" இருந்து மீள்விக்கப்பட்டது