பேச்சு:அனுராதபுர இராச்சியம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

கட்டுரையில் அனுராதபுரம் இலங்கையின் முதலாவது இராச்சியமெனக் குறிப்பிடப்பட்டிருந்தது. அத்தகவல் பிழை என்பதால் அதனை மாற்றினேன். அனுராதபுரத்துக்கு முன்னரேயே விஜயன் தம்பபன்னி இராச்சியத்தை நிறுவயிருந்தான். விஜயனின் படைத் தலைவர்களுள் ஒருவனான அனுராதனின் பெயரால் உருவாக்கப்பட்ட இடமே அனுராதகமை அல்லது அனுராதகாமம் ஆகும். இதுவே பிற்காலத்தில் அனுராதபுரம் ஆயிற்று.--பாஹிம் (பேச்சு) 10:37, 10 பெப்ரவரி 2015 (UTC)[பதில் அளி]

பாஹிம் அவர்களே ஆங்கில விக்கியில் முதலாம் வரியைப் பார்க்க. இவ்வரியில் மாற்றம் செய்யலாமா? தம்பபன்னி என்பது ஒரு இராச்சியம் கிடையாது என்பது என் கருத்து. வரலாற்று நூல்களிலும், பாலசாலைப் புத்தகங்களிலும் அவ்வாறு ஒரு இராச்சியத்தைக் கண்டதில்லை. அத்துடன் விஜயன் என்பவன் ஒரு மன்னனும் கிடையாது. இலங்கையின் முதலாவது மன்னன் பண்டுகாபயன். அம்மன்னனாலேயே அனுராதபுர இராச்சியம் நிறுவப்பட்டது. ஆகவே அனுராதபுரம் முதலாவது இலங்கை இராச்சியமாக இருக்கும்.--ஸ்ரீஹீரன் (பேச்சு) 12:18, 10 பெப்ரவரி 2015 (UTC)[பதில் அளி]

ஆங்கில விக்கிக் கட்டுரைகள் பலவும் பலவாறு குறிப்பிடுகின்றன. தம்பபன்னி இராச்சியம் பற்றிய கட்டுரையில் விஜயனை இலங்கையின் அரசன் என்கிறது. விஜயனைப் பற்றிய தமிழ்க் கட்டுரையும் அரசனென்றே கூறுகிறது. இலங்கை மன்னர் வரலாற்றேடான ராஜாவலியவும் விஜயனை இலங்கையின் முதலாவது அரசனென்றே குறிப்பிடுகிறது. தம்பபன்னி இராச்சியத்தைப் பற்றி நீங்கள் அறியாதிருக்கலாம். நானும் இலங்கையில் தமிழ் மொழி மூலம் தான் வரலாறு கற்றேன். அப்பொழுது தம்பபன்னி இராச்சியம் பற்றிய குறிப்புக்கள் காணப்பட்டன. வேண்டுமானால் தம்பபன்னி இராச்சியத்தைப் பற்றிய ஆங்கிலக் கட்டுரையைப் பாருங்கள்.--பாஹிம் (பேச்சு) 13:44, 10 பெப்ரவரி 2015 (UTC)[பதில் அளி]

தங்கள் அறிவுரைக்கு நன்றி!.--ஸ்ரீஹீரன் (பேச்சு) 10:36, 11 பெப்ரவரி 2015 (UTC)[பதில் அளி]

இங்கே குட்டம் பொகுண என்று குறிப்பிடப்பட்டிருந்ததில் மொழி வழு ஏற்பட்டிருந்தது. சிங்களத்தில் கூட்டம் பொக்குண என்றே உள்ளது. கூட்டம் என்றால் கூட்டமாக அல்லது சேர்ந்துள்ளது. பொக்குண என்றால் தடாகம். (நெளும் பொக்குண என்றால் தாமரைத் தடாகம்.) கூட்டம் பொக்குண என்றால் கூட்டத் தடாகம், அல்லது இரட்டைத் தடாகம் என்று மொழிபெயர்ப்பதே சரி.--பாஹிம் (பேச்சு) 10:40, 10 பெப்ரவரி 2015 (UTC)[பதில் அளி]