பேச்சு:அஜ்மேர் சந்திப்பு தொடருந்து நிலையம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

அஜ்மேர் என்பது ஆங்கில மொழியின் உச்சரிப்பு.தமிழ்நாட்டில் அஜ்மீர் என்றே அழைக்கப்படுகிறது.எனவே அஜ்மீர் சந்திப்பு தொடருந்து நிலையம் என்று மாற்றினால் நன்றாக இருக்கும்.--ஜுபைர் அக்மல் (பேச்சு) 14:13, 16 சூன் 2016 (UTC)

அஜ்மேர் என்ற பெயர் இந்தியிலும் அவ்வாறே அழைக்கப்படுகிறது. மீரட் கூட மேரட் என்றே அழைக்கப்படும். திண்டுக்கல்லை டிண்டிகல் என்றோ, தூத்துக்குடியை டூட்டிக்கோரின் என்றோ நாம் அழைப்பதில்லை அல்லவா! மூல மொழிப் பெயர்களுக்கு முக்கியத்துவம் தர வேண்டும் என்பது விக்கியில் நாம் கடைபிடித்துவரும் கொள்கை. முடிந்தவரை, மூல மொழிக்கு நெருக்கமான பெயரையே பயன்படுத்துவது நல்லது. வேண்டுமானால், கட்டுரையில் அஜ்மீர் என்ற சொல்லை குறிப்பிடலாம். அஜ்மீர் சந்திப்பு தொடருந்து நிலையம் என்றொரு வழிமாற்றையும் உருவாக்கலாம். :) -தமிழ்க்குரிசில் (பேச்சு) 07:21, 25 சூன் 2016 (UTC)