உள்ளடக்கத்துக்குச் செல்

பேகர்காட்டின் பள்ளி வாசல் நகரம்

ஆள்கூறுகள்: 22°39′39.5″N 89°45′30.8″E / 22.660972°N 89.758556°E / 22.660972; 89.758556
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பேகர்காட் நகரின் பள்ளிவாசல்கள்
யுனெசுக்கோ உலகப் பாரம்பரியக் களம்
மேலிருந்து கடிகார திசையிலிருந்து: அறுபது தூண் பள்ளிவாசல், ஒன்பது தூண பள்ளிவாசல், சுனா கோளா பள்ளிவாசல், ரோன்விஜய்பூர் பள்ளிவாசல், பீபி பெக்னி பள்ளிவாசல் மற்றும் சிங்கார் பள்ளிவாசல்
அமைவிடம்வங்காளதேசம்
கட்டளை விதிபண்பாட்டுக் களம்: (iv)
உசாத்துணை321
பதிவு1985 (9-ஆம் அமர்வு)
ஆள்கூறுகள்22°39′39.5″N 89°45′30.8″E / 22.660972°N 89.758556°E / 22.660972; 89.758556
பேகர்காட்டின் பள்ளி வாசல் நகரம் is located in வங்காளதேசம்
பேகர்காட்டின் பள்ளி வாசல் நகரம்
Location of பேகர்காட்டின் பள்ளி வாசல் நகரம் in வங்காளதேசம்.

பேகர்காட் நகரின் பள்ளிவாசல்கள் (Mosque City of Bagerhat) (வரலாற்று ரீதியாக கலீபதாபாத் என்றும் அழைக்கப்படுகிறது) வங்காளதேசத்தின் பேகர்காட் மாவட்டத்திலுள்ள ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனத்தின் உலக பாரம்பரிய தளமாகும். இதில் 360 பள்ளிவாசல்கள், பொதுக் கட்டிடங்கள், கல்லறைகள், பாலங்கள், சாலைகள், தண்ணீர் தொட்டிகள் மற்றும் சுட்ட செங்கலால் கட்டப்பட்ட பிற பொது கட்டிடங்கள் உள்ளன. 15 ஆம் நூற்றாண்டில் வங்காள சுல்தானகத்தின் ஆட்சியின்போது பள்ளிவாசல்கள் கட்டப்பட்டன, இதில் அறுபது தூண் பள்ளிவாசல் மிகப்பெரியது. மற்றவைகளில் சிங்கார் பள்ளிவாசல், ஒன்பது தூண் பாள்ளிவாசல், கான் ஜகானின் கல்லறை, பீபி பெக்னி பள்ளிவாசல் மற்றும் ரோன்விஜய்பூர் பள்ளிவாசல் ஆகியவை அடங்கும். வங்காள சுல்தான் மக்மூத் சா என்பவரால் சுந்தரவனக் காடுகளின் ஆளுநராக நியமிக்கப்பட்ட உலுக் கான் ஜஹான் என்பவரால் கட்டப்பட்டது. இது "இந்திய துணைக் கண்டம் முழுவதிலும் ஈர்க்கக்கூடிய முஸ்லிம் நினைவுச்சின்னங்களில் ஒன்றாகும்" என்று விவரிக்கப்பட்டுள்ளது.

வரலாறு

[தொகு]

இந்த இடம் வங்காள சுல்தானகத்தின் தங்க சாலை நகரமாக இருந்தது. வங்காளதேசத்தில் சுல்தானிய கால பள்ளிவாசல்களின் மிகப்பெரிய கட்டுமானங்களில் இதுவும் ஒன்று. இது, இந்தோ-இசுலாமிய கட்டிடக்கலையின் உள்ளூர் வங்காள சுல்தானக மாறுபாட்டின் பாணியில் கட்டப்பட்ட 50 க்கும் மேற்பட்ட கட்டமைப்புகளைக் கொண்ட ஓர் வரலாற்று நகரம் ஆகும். இது சில நேரங்களில் 'கான் ஜகான் பாணி' என்றும் அழைக்கப்படுகிறது. பல நூற்றாண்டுகளாக இருந்த புதர்களை அகற்றிய பின்னர் இவை வெளியுலகிற்குத் தெரிய வந்தது. "மனித வரலாற்றில் ஒரு குறிப்பிடத்தக்க கட்டத்தை விளக்கும் ஒரு கட்டடக்கலை குழுமத்தின் சிறந்த எடுத்துக்காட்டு" என்பதற்காக இந்த தளம் யுனெஸ்கோவால் 1983 இல் அளவுகோல்களின் கீழ் (iv) அங்கீகரிக்கப்பட்டது. [1] இதில் 60 தூண்கள் மற்றும் 77 குவிமாடங்கள் கொண்ட அறுபது தூண்,[2] நன்கு அற்றியப்பட்ட பள்ளிவாசலாகும்.[3][4][5][6] இந்தப் பள்ளிவாசல்கள் சுடுமண் கலைப்படைப்பு மற்றும் அரேபிய பாணி ஆகியவற்றைக் கொண்டுள்ளன.

நிலவியல்

[தொகு]

பள்ளிவாசல் நகரம் தெற்கு வங்காளத்தில் கங்கை ஆற்றின் பரந்த முகத்துவாரத்திற்கு அருகில் அமைந்துள்ளது. இது வங்காள விரிகுடாவின் கடற்கரையிலிருந்து 60 கிலோமீட்டர் (37 மை) தொலைவில் அமைந்துள்ளது. இது சுந்தரவன சதுப்புநில காடுகளின் ஒரு பகுதியாக இருந்தது. இன்று அனைத்து நினைவுச்சின்னங்களும் பனை மரங்களால் சூழப்பட்ட விளைநிலங்களாக இருக்கும் பழுதடையாத சூழலில் அமைக்கப்பட்டுள்ளன.[7]

புகைப்படங்கள்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Historic Mosque City of Bagerhat". UNESCO. Archived from the original on 3 July 2010. Retrieved 15 May 2011.
  2. Reza, Mohammad Habib; Hossain, Md Shajjad (2017). Documentation of Islamic Heritage of Bangladesh (in English). Dhaka: Brac University. Archived from the original on 5 June 2022. Retrieved 31 January 2021.{{cite book}}: CS1 maint: unrecognized language (link)
  3. "Evaluation Report: Historic Mosque City of Bagerhat" (pdf). UNESCO. Archived (PDF) from the original on 2 November 2012. Retrieved 15 May 2011.
  4. "Buildings and Recommendations" (PDF). Practical Survey of Individual Historic for Their Repair: a) Bagerhat and its environs. UNESCO. 1980. pp. 16–22. Archived (PDF) from the original on 11 June 2017. Retrieved 15 May 2011.
  5. Mikey Leung; Belinda Meggitt (1 November 2009). Bangladesh. Bradt Travel Guides. pp. 261–. ISBN 978-1-84162-293-4. Retrieved 15 May 2011.
  6. "Historic Mosque City of Bagerhat". Official plaque of the World Heritage Patrimone Mondal. Archived from the original on 15 November 2016. Retrieved 15 May 2011.
  7. "Buildings and Recommendations" (PDF). Practical Survey of Individual Historic for Their Repair: a) Bagerhat and its environs. UNESCO. 1980. pp. 16–22. Archived (PDF) from the original on 11 June 2017. Retrieved 15 May 2011.

வெளி இணைப்புகள்

[தொகு]