பெ. மாதையன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பெ. மாதையன் ஒரு தமிழக எழுத்தாளர். சென்னைப் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்ற இவர் தஞ்சை, தமிழ்ப்பல்கலைக்கழக அகராதித்துறை மற்றும் சேலம், பெரியார் பல்கலைக்கழகத் தமிழ்த்துறை ஆகியவற்றில் பேராசிரியராகவும், அகராதித் தயாரிப்புகளில் பதிப்பாசிரியராகவும் பணியாற்றியுள்ளார். இவர் எழுதிய “அகத்திணைக் கோட்பாடும் சங்க அகக் கவிதை மரபும்” எனும் நூல் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் 2009 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் திறனாய்வு வகைப்பாட்டில் பரிசு பெற்றிருக்கிறது.

நூல்கள்[தொகு]

 • அகராதியியல்[1]
 • சங்க இலக்கியச்சொல்லடைவு - வெளியீடு : தமிழ்ப்பல்கலைக்கழகம் , தஞ்சாவூர்.
 • சங்கக் கவிதையியல்
 • தமிழ்ச்செவ்வியல் இலக்கியங்கள் காலமும் கருத்தும்
 • வரலாற்று நோக்கில் சங்க இலக்கியத் தொன்மங்களும் பழமரபுக்கவிதைகளும்
 • சங்க இலக்கியத்தில் வேளாண் சமூகம்
 • தமிழ்ச் செவ்வியல் படைப்புகள் (கவிதையியல் சமூகவியல் நோக்கு)
 • உரையியல்
 • சங்க இனக்குழுச்சமூகமும் அரசு உருவாக்கமும்
 • சங்க இலக்கியத்தில் குடும்பம்
 • தமிழில் நோக்கு நூல்கள்
 • பெண்டிர் காதல் கற்பு
 • தொல்காப்பியம் (பாவலர் பாலசுந்தரம் உரை )- பதிப்பாசிரியர் பெரியார் பல்கலைக்கழக வெளியீடு.

ஆதாரம்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பெ._மாதையன்&oldid=3928692" இலிருந்து மீள்விக்கப்பட்டது