பெல்ஜியப் பளிங்கு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பெல்ஜியப் பளிங்கு (Belgian Marble) என்பது பெல்ஜியத்தில் உள்ள வல்லோனியாவில் எடுக்கப்பட்ட சுண்ணக்கல்லுக்குக் கொடுக்கப்பட்ட பெயர் ஆகும். இது நமூர், டினன்ட், டூர்னை, பேசுகில்சு, தீயக்‌சு, மாசி/கோல்சின் ஆகிய பெல்ஜிய நகரங்களைச் சுற்றி எடுக்கப்படுகிறது.[1]

விளக்கம்[தொகு]

இந்தப்பாறை ஒரு உண்மையான பளிங்கு (ஒரு உருமாறிய பாறை) அல்ல, ஆனால் ஒரு வகை சுண்ணாம்புப் பாறை (ஒரு கரைசார்ந்த வண்டல் பாறை) ஆகும். இப்பளிங்கு திடமான அடர் சாம்பல் அல்லது கறுப்பு மற்றும் சிவப்பு, சாம்பல், மற்றும் / அல்லது இளஞ்சிவப்பு நிறங்களில் கிடைக்கிறது.[2] வழுவழுப்பாக்கியபின், பல நிறங்கள் கொண்ட அடுக்குகள் இயற்கையான அலங்கார வடிவங்களை வெளிப்படுத்துகின்றன.

வரலாறு[தொகு]

பண்டைய உரோமைக் காலத்தில், யூனியசு பாசசின் பசிலிக்கா போன்ற கட்டடங்களில், பெல்ஜியப் பளிங்கு பயன்படுத்தப்பட்டுள்ளது.[1] மறுமலர்ச்சிக்குப் பின்னர், பாலாசோ பிட்டி, வெர்சாய் அரண்மனை உள்ளிட்ட முக்கியமான ஐரோப்பிய சமய, மதச்சார்பற்ற கட்டிடங்களில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.[1]

மேலும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பெல்ஜியப்_பளிங்கு&oldid=3646589" இலிருந்து மீள்விக்கப்பட்டது