பெர்மாவின் தத்துவம்
Appearance
ஒளியியலில், பெர்மாவின் தத்துவம் (Fermat's principle அல்லது principle of least time) என்பது ஒளிக்கதிர் ஒன்று ஒரு புள்ளியில் இருந்து இன்னொரு புள்ளிக்கு செல்லும் போது ஒளியானது மிகக் குறைந்த நேரத்தில் செல்லும் பாதை வழியாகவே செல்லும் என்பதை விளக்கும் தத்துவம் ஆகும். இத்தத்துவம் சில வேளைகளில் ஒளிக்கதிரின் வரைவிலக்கணத்திற்கும் பயன்படுத்தப்படுகிறது.[1] இந்தத் தத்துவம் பிற அலை இயக்கங்களுக்கும் பொருந்தும்.
கண்ணாடிகளில் எதிரொளிப்பு, வெவ்வெறு ஊடகங்களில் ஒளி முறிவு, அல்லது முழு அக எதிரொளிப்பு போன்றவைகளை விளக்கவும் பெர்மாவின் தத்துவம் பயன்படுத்தப்படுகிறது. இது கணித முறைப்படி (குறைந்த அலைநீளங்களுக்கு) ஐகன்சு-பிரெனெல் தத்துவத்தின் மூலம் விளக்கப்படுகிறது.