பெர்தா ஜிண்டிக்ஸ் தாகர்
பெர்தா ஜிண்டிக்ஸ் தாகர் | |
|---|---|
| பிறப்பு | சில்லாங், மேகாலயா, இந்தியா |
| பணி | கல்வியாளார் |
| விருதுகள் | பத்மசிறீ குழந்தைகள் நலனுக்கான தேசிய விருது |
| வலைத்தளம் | |
| Official web site | |
பெர்தா ஜின்டிக்ஸ் தாகர் (Bertha Gyndykes Dkhar) ஒரு பார்வையற்ற இந்திய கல்வியாளர் ஆவார். காசி மொழியில் பிரெயில் எழுத்து முறையை கண்டுபிடித்தவர் என்று அறியப்படுகிறார்.[1][2] 2010 ஆம் ஆண்டில், இந்திய அரசு இவருக்கு இந்தியாவின் நான்காவது உயரிய குடிமகன் விருதான பத்மசிறீ விருதை வழங்கியது.[3]
சுயசரிதை
[தொகு]இவர், மேகாலயாவின் சில்லாங்கில் [4] பார்வைக் குறைபாடுள்ள குழந்தையாகப் பிறந்தார். மேலும் கல்லூரியில் படிக்கும் போது பார்வையை முழுமையாக இழந்தார். இதனால் தனது படிப்பைக் கைவிட வேண்டியிருந்தது. வாழ வழியில்லாமல், சந்தையில் பழங்களை விற்று பிழைப்பு நடத்தினார்.[2] இயலாமையைக் கடப்பதற்கான முயற்சிகளைத் தொடர்ந்து, பிரெயில் குறியீட்டில் ஆராய்ச்சி செய்து மேகாலயாவின் உள்ளூர் மொழியான காசியில் குறியீட்டை வடிவமைத்தார்.[1]
பார்வையற்ற குழந்தைகளுக்காக பெத்தானி சங்கத்தால் நடத்தப்படும் ஜோதி ஸ்ரோட் பள்ளியின் தலைமையாசிரியராக உள்ளார்.[5] 2010 ஆம் ஆண்டு இந்தியாவின் நான்காவது உயரிய இந்திய குடிமகன் விருதான பத்மசிறீ விருது பெற்றார்.[3] 2000 ஆம் ஆண்டில் இந்திய அரசிடமிருந்து குழந்தைகள் நலனுக்கான தேசிய விருதையும் பெற்றார்.[6]
இதனையும் பார்க்கவும்
[தொகு]சான்றுகள்
[தொகு]- 1 2 "Tehelka". News report. Tehelka. 13 August 2011. Archived from the original on 29 November 2014. Retrieved 15 November 2014.
- 1 2 "Woman for Society". Web Profile. Woman for Society. 2014. Archived from the original on 29 November 2014. Retrieved 15 November 2014.
- 1 2 "Padma Shri" (PDF). Padma Shri. 2014. Archived from the original (PDF) on 15 October 2015. Retrieved 11 November 2014.
- ↑ "Highbeam". Highbeam. 13 August 2011. Archived from the original on 29 March 2015. Retrieved 15 November 2014.
- ↑ "Jyoti Sroat". Jyoti Sroat. 2014. Archived from the original on 29 November 2014. Retrieved 15 November 2014.
- ↑ "Title unknown". தி இந்து. 10 August 2000. Archived from the original on 29 November 2014. Retrieved 15 November 2014.
வெளி இணைப்புகள்
[தொகு]- "Padma Shri Investiture Ceremony". News photo. Economic Times. 2014. Retrieved 15 November 2014.