உள்ளடக்கத்துக்குச் செல்

பெரும் கூட்டிணைவு அடிப்பந்தாட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பெரும் கூட்டிணைவு அடிப்பந்தாட்டம் (Major League Baseball) (MLB) என்பது வட அமெரிக்காவில் விளையாடப்படும் மிக உயரிய நிலை தொழில்முறை அடிப்பந்தாட்டமாகும். கூட்டிணைவு அடிப்பந்தாட்டம் என்பது தேசிய கூட்டிணைவு மற்றும் அமெரிக்க கூட்டிணைவுகளை இயக்கும் இணைந்த நிர்வாக அமைப்பைக் குறிப்பிடுவதாகும். 1876ஆம் ஆண்டில் துவங்கிய தேசிய கூட்டிணைவு அடிப்பந்தாட்டம் மற்றதுடன் 1901ஆம் ஆண்டு முதல் ஒருங்கிணைந்து இயக்கத் தொடங்கியது. 2000 ஆம் ஆண்டு இந்த இரண்டு அடிப்பந்தாட்ட கூட்டிணைவுகளும் சட்டப்படி தனித்தனியே பிரிந்தன. இவற்றின் கடமைகளும் உரிமைகளும் அடிப்பந்தாட்ட ஆணையரிடம் விடப்பட்டன.[1] இதில் தற்போது 29 அணிகள் அமெரிக்காவிலிருந்தும் ஓரணி கனடாவிலிருந்தும் பங்கேற்கின்றன.பன்னாட்டு அடிப்பந்தாட்ட கூட்டமைப்புடன் ஒருங்கிணைந்து கிளாசிக் உலக அடிப்பந்தாட்டம் போட்டியை மேலாண்மை செய்கிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Year In Review : 2000 National League". www.baseball-almanac.com. பார்க்கப்பட்ட நாள் 2008-09-05.

மேலும் படிக்க[தொகு]

வெளியிணைப்புகள்[தொகு]

பெரும் கூட்டிணைவு அடிப்பந்தாட்டம் பற்றிய மேலதிக தகவல்களைப் பார்க்க தொடர்புடையத் திட்டங்கள்:

விக்சனரி விக்சனரி
நூல்கள் விக்கிநூல்
மேற்கோள் விக்கிமேற்கோள்
மூலங்கள் விக்கிமூலம்
விக்கிபொது
செய்திகள் விக்கிசெய்தி