பெப்சிஸ்-குளவி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
நீலநிற உடலும் செந்நிற இறகுகளுடன் கூடிய பெப்சிஜ் குளவி

பெப்சிஸ் குளவிகள் தனிமை விரும்பிகள்.அழகானவை.நீல நிற உடலும்,செந்நிற இறகுகளும் உடையவை.வரிந்த நிலையில் இறகுகள் நான்கு அங்குல இடத்தை அடைக்கும்.மலரிலுள்ள தேனை உண்டு வாழ்பவை.எதிரியை தாக்குவதற்கு தயாராகும் போது அருவருப்பான நாற்றத்தை உண்டாக்கும். இதன் கொடுக்குகள் விசம்,மற்ற குளவிகளைவிட அதிகம்.பருவமடைந்து முதிர்ந்த குழவிகள் சில மாதங்களே உயிர் வாழும்.

பெப்சிஸ் குளவி மலரிலிருந்து தேன் எடுத்தல்

சிறப்பியல்புகள்[தொகு]

  • பெண் குளவி சில முட்டைகளை மட்டுமே இடும்.இரண்டு மூன்று நாட்களுக்கு ஒரு முட்டை வீதம் முட்டையிடும்.
  • ஒவ்வொறு இன குளவியும் ஒவ்வொரு குறிப்பிட்ட வகை சிலந்தியை மட்டுமே உணவாக உட்கொள்ளும்.
  • பெப்சிஸ் வகை குளவிகள் டாரண்டூலா வகை சிலந்தியை மட்டுமே உணவாக உட்க்கொள்கிறது.
  • செயலற்ற.நிலையில் சிலந்தியை தனது முட்டைக்கு உணவாக்குகிறது.
  • தனது முட்டையை செயலற்ற சிலந்தியின் வயிற்றின் மீது வைத்து

சிலந்தி வேட்டை[தொகு]

சிலந்தி வேட்டை

குளவிகள்ன தனக்கு உகந்த வகையான சிலந்தியைத் மட்டுமே உணவிற்காக தேர்ந்தெடுத்துக் கொள்கிறது பெப்சிஸ் இன குளவிகள் டாரன்டூலா சிலந்தியை மட்டுமே உணவாக ஏற்றுக்கொள்ளும்.வேறு இன சிலந்தியைத் தாக்குவதே இல்லை.தனது உணரவலைகளின் மூலம் டாரன்டூலா சிலந்தியைத் தொட்டுப்பார்க்கும்.சிலந்தி தனது கால்களைத் தூக்கிப் பார்த்து பொறுமையாகக் காத்திருக்கும்.குளவி தனக்கு தகுதியான இரையா என்பதைச் சோதிக்க,குளவியின் மேற் மற்றும் கீழ்ப் புறத்தில் சோதனை செய்து கண்டறியும்.இனத்தைக் கண்டறிந்த பின்பு சிலந்திக்கு அருகில் ஒரு குழியைத்,தனது கால்களின் உதவியோடு தோண்ட ஆரம்பிக்கும்.சுமார் 8_-10அங்குல ஆழமும் சிலந்தி உள்ளே செல்லும் அளவிற்கான அகலமும் உடைய குழியைத் தோண்டும்.அவ்வபோது சிலந்தி குழிக்கு அருகில் உள்ளதா என சோதித்துக் கொள்ளும்.தனக்கான இனத்தைச் சார்ந்த இரையா என்பதை உறுதிப்படுத்திக்கொண்டு குளவிமீது தன் தாக்குதலைத் வேகமாகத் தொடங்கும்.

சிலந்தியின் கால்கள் இணையும் மென்மையான பகுதியில் தனது கொடுக்கை நுழைத்து விஷத்தைச் செலுத்தும்..மீண்டும் மீண்டும் தாக்குதலை நடத்தும்.ஆனால் சிலந்தி எந்தவித பாதுகாப்பு நடத்தையும் மேற்கொள்ளாது இருப்பது வியப்பைத் தருகிறது.சிலந்தியின் கால்களைப் பிடித்து இழுத்துக் குழியினுள் தள்ள முயற்சிக்கும் போது தான் தற்காப்பு முயற்சியை மேற்க்கொள்ளும்.இரண்டும் புரண்டு கொண்டு நகரும் போது தனது விஷத்தால் சிலந்தியை செயலற்றுபோகச் செய்யும்.கால்கள் அசையாமல்,முதுகுப்புறமாக சாய்ந்து கிடக்கும்.இதயத்துடிப்பு ஓய்ந்து விடும்.

எதிரியை வீழ்த்திய பின்பு குளவி தன் உடலை தரையின் மீது உராயச் செய்து,கால்களை தேய்த்துச் சுத்தம் செய்துக் கொள்ளும்.சிலந்தியின் வயிற்றிலிருந்து வடியும் இரத்தத்தை உறிஞ்சிக் கொள்ளும்.தன் தாடையால் சிலந்தியின் காலைப்பற்றிக் கொண்டு குழியில் தள்ளும்.

சிலந்தியின் வயிற்றில் பிசுபிசுப்பான திரவத்தைச் சுரந்து அதன்மீது முட்டைகளை இடும்.பின்பு குழியை தன் கால்களின் உதவியோடு மூடி விட்டு சென்று விடும்.முட்டையிலிருந்து வெளியே வரும் சேய் குளவி,தனக்கு உணவான சிலந்தியை விட மிகச் சிறியது.ஆனாலும் மயக்கத்தில் உள்ள சிலந்தியை மட்டுமே உண்டு வாழ்கிறது.முதிர்ந்த பின்பு இடத்தை விட்டு நகர்ந்து விடுகிறது.கடின ஓடு மட்டுமே எஞ்சியுள்ளது.

விந்தையான செயல்கள்[தொகு]

  • தனக்கு வேண்டிய உணவை எவ்வாறு தேர்ந்தெடுக்கிறது என்பது விந்தை
  • சிலந்தியை சோதனை செய்துத்தேர்ந்தெடுப்பது விந்தை
  • சிலந்தியின் உடலில் விஷத்தைக் கொட்டி அதனை உயிரிழக்க செய்யாமல் மயக்க நிலையில் வைத்திருப்பது விந்தை.[1]

[2]

  1. https://commons.m.wikimedia.org/wiki/File:Tarantula_hawk.JPG#mw-jump-to-license
  2. உயிரியலில் சில உண்மைகள்:இராம.இலக்குமி நாராயணன்,சேகர் பதிப்பகம்.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பெப்சிஸ்-குளவி&oldid=2379429" இருந்து மீள்விக்கப்பட்டது