பென்சோல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பென்சோல் (Benzol) பென்சீனையும் தொலுயீனையும் பிரதானமாகக் கொண்டிருக்கக் கூடிய ஒரு கரித்தார் உற்பத்திப் பொருளாகும். ஐக்கிய இராச்சியத்தில் பெட்ரோலியம் எரிபொருளைப் போல ஒரு இயங்குபொறி எரிபொருளாக பென்சோல் பயன்படுத்தப்படுகிறது. மேலும் இங்கு, நேசனல் பென்சோல் மிக்சர் மற்றும் இரியேசண்ட் பென்சோல் மிக்சர் என்ற வணிகப் பெயர்களில் பெட்ரோலியமும் பென்சோலும் கலக்கப்பட்ட இயங்கூர்தி எரிபொருள்கள் பயன்படுத்தப்படுகின்றன[1]. செருமன், அங்கேரியன், உக்ரைனியன், உருசியன் போன்ற பல மொழிகளில் பென்சோல் என்ற சொல்லுக்கு குழப்பமான முறையில் பென்சீன் என்று பொருள் கொள்ளப்படுகிறது. செருமன் போன்ற சில மொழிகளில் பென்சோல் என்ற சொல்லே பெட்ரோலியம் என்ற பொருள் கொண்ட பென்சின் என்ற சொல் உச்சரிக்கப்படுகிறது. [2]

மேற்கோள்கள்[தொகு]

புற இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பென்சோல்&oldid=3222446" இலிருந்து மீள்விக்கப்பட்டது