பென்சமிடின்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பென்சமிடின்
Skeletal formula
Ball-and-stick model
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
பென்சீன்கார்பாக்சிமிடமைடு
இனங்காட்டிகள்
618-39-3 Y
ChEBI CHEBI:41033 Y
ChEMBL ChEMBL20936 Y
ChemSpider 2242 Y
InChI
  • InChI=1S/C7H8N2/c8-7(9)6-4-2-1-3-5-6/h1-5H,(H3,8,9) Y
    Key: PXXJHWLDUBFPOL-UHFFFAOYSA-N Y
  • InChI=1/C7H8N2/c8-7(9)6-4-2-1-3-5-6/h1-5H,(H3,8,9)
    Key: PXXJHWLDUBFPOL-UHFFFAOYAU
IUPHAR/BPS
7566
யேமல் -3D படிமங்கள் Image
KEGG C01784 Y
பப்கெம் 2332
SMILES
  • [NH]=C(N)c1ccccc1
UNII KUE3ZY3J1F Y
பண்புகள்
C7H8N2
வாய்ப்பாட்டு எடை 120.16 g·mol−1
தோற்றம் வெண்மையான திண்மம்
அடர்த்தி 1.22 கி/செ.மீ3
உருகுநிலை 78–80 °C (172–176 °F; 351–353 K)
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
 Y verify (இதுY/N?)
Infobox references

பென்சமிடின் (Benzamidine) என்பது C6H5C(NH)NH2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். அரைல் அமிடின் சேர்மத்திற்கு ஓர் எளிய எடுத்துக்காட்டாக பென்சமிடின் கருதப்படுகிறது. வெண்மை நிறம் கொண்டு தண்ணீரில் சிறிதளவு கரையும் தன்மையை கொண்டுள்ளது. வழக்கமாக இதை நீரில் கரையக்கூடிய வெண்மை நிற ஐதரோகுளோரைடு உப்பாகவே கையாள்கிறார்கள். [1]

பென்சமிடினின் கட்டமைப்பில் ஒரு குட்டையான C=NH பிணைப்பும் ஒரு நீண்ட C-NH2 பிணைப்பும் முறையே 129 மற்றும் 135 பைக்கோமீட்டர்கள் நீளத்தில் காணப்படுகின்றன. [2]

பயன்பாடுகள்[தொகு]

பென்சமிடின் சேர்மமானது டிரிப்சின், டிரிப்சின் போன்ற நொதிகள் மற்றும் செரின் புரதங்களின் மீளக்கூடிய போட்டி தடுப்பானாகும். ஒரு புரதத்தை புரோட்டீசுகள் சிதைப்பதைத் தடுக்க புரதப் படிகவியலில் இது பெரும்பாலும் ஒரு ஈந்தணைவியாகப் பயன்படுத்தப்படுகிறது. [3] கீழே உள்ள முக்கோண டையமீன் குழு இதற்கு மிகவும் வெளிப்படையான குச்சி மனிதன் வடிவத்தை அளிக்கிறது, இந்த வேறுபாடு அடர்த்தி வரைபடங்களில் காண்பிக்கப்படுகிறது. பென்சமிடின் பகுதிக்கூறு தாபிகாட்ரான் போன்ற சில மருந்துகளிலும் காணப்படுகிறது.

பென்சமிடினுடன் α-ஆலோகீட்டோன்களுடன் சேர்த்து குறுக்க வினையில் ஈடுபடுத்தினால் இமிடசோல் கிடைக்கும்[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 Bryan Li, Charles K-F Chiu, Richard F. Hank, Jerry Murry, Joshua Roth, Harry Tobiassen (2005). "Preparation of 2,4-Disubstituted Imidazoles: 4-(4-Methoxyphenyl)-2-Phenyl-1H-Imidazole". Organic Syntheses 81: 105. doi:10.15227/orgsyn.081.0105. 
  2. Barker, J.; Phillips, P. R.; Wallbridge, M. G. H.; Powell, H. R. (1996). "Benzamidine". Acta Crystallographica Section C Crystal Structure Communications 52 (10): 2617–2619. doi:10.1107/S0108270196006282. 
  3. Tanizawa, Kazutaka; Ishii, Shin-ichi; Hamaguchi, Kazo; Kanaoka, Yuichi (1971-05-01). "Proteolytic EnzymesVI. Aromatic Amidines as Competitive Inhibitors of Trypsin". The Journal of Biochemistry 69 (5): 893–899. doi:10.1093/oxfordjournals.jbchem.a129540. பன்னாட்டுத் தர தொடர் எண்:0021-924X. பப்மெட்:5577153. https://academic.oup.com/jb/article/69/5/893/2184754/Proteolytic-EnzymesVI-Aromatic-Amidines-as. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=பென்சமிடின்&oldid=3004599" இலிருந்து மீள்விக்கப்பட்டது