உள்ளடக்கத்துக்குச் செல்

பெண்டில் ஹில், நியூ சவுத் வேல்ஸ்

ஆள்கூறுகள்: 33°48′27″S 150°57′19″E / 33.80750°S 150.95528°E / -33.80750; 150.95528
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பெண்டில் ஹில்
சிட்னிநியூ சவுத் வேல்ஸ்

பெண்டில் ஹில் கடை வீதி
மக்கள் தொகை: 7,247
அஞ்சல் குறியீடு: 2145
ஆள்கூறுகள்: 33°48′27″S 150°57′19″E / 33.80750°S 150.95528°E / -33.80750; 150.95528
பரப்பளவு: 1.92 கிமீ² (0.7 சது மைல்)
உள்ளூராட்சிகள்:
மாநில மாவட்டம்:
  • புரொஸ்பெக்ட்ட
  • செவன் ஹில்ஸ்
நடுவண் தொகுதி:
  • கிரீன்வே
  • பரமட்டா
Suburbs around பெண்டில் ஹில்:
தூங்காபி தூங்காபி பழைய தூங்காபி
கிர்ராவின் பெண்டில் ஹில் வென்ற்வேத்வில்
கிறேஸ்டன்ஸ் கிறேஸ்டன்ஸ் தெற்கு வென்ற்வேத்வில்

பெண்டில் ஹில் (Pendle Hill) ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் சிட்னியில் உள்ள ஒரு புறநகர்ப் பகுதியாகும். இது சிட்னி நகரிலிருந்து 30 கிலோமீட்டர் மேற்காக கம்பர்லான்ட் மற்றும் பரமட்டா உள்ளூர் அரசாங்க பகுதிகளில் அமைந்துள்ளது. இது பரந்த மேற்கு சிட்னி பிராந்தியத்தின் ஒரு பகுதியாக கருதப்படும். [1]

1909 இல் ஆஸ்திரேலியாவுக்கு வந்த ஜார்ஜ் பாண்ட் (1876-1950) என்ற அமெரிக்கர், [2] 1923 ஆம் ஆண்டில் இப்பகுதியில் ஒரு பருத்தி நூற்பு ஆலை ஒன்றை நிறுவினார். குயின்ஸ்லாந்தில் இருந்த பருத்தி பண்ணைகளில் உற்பத்தி செய்யப்பட்ட பருத்தியை ஆஸ்திரேலியாவிலேயே நெசவு செய்யும் முதல் முயற்சியாக இது அமைந்தது. இங்கிலாந்தின் பருத்தித் தொழிலின் மையமாக இருந்த லங்காஷயர் பகுதியில் இருந்த பெண்டில் மலையின் பெயரே இந்த பகுதிக்கும் சூட்டப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது.

பெண்டில் ஹில்லில் உள்ள ரயில் நிலையம் 1924 ஆம் வருடமும், அரசுப்பள்ளி 1955 ஆம் வருடமும், தபால் அலுவலகம் 1956 ஆம் வருடமும் திறக்கப்பட்டன. [3]

வணிக பகுதி

[தொகு]

பெண்டில் ஹில் ரயில் நிலையத்திற்கு அண்மையாக 50 க்கும் மேற்பட்ட கடைகளை உள்ளடக்கிய ஒரு கடை வீதி அமைந்திருக்கிறது. இங்கு பல்பொருள் அங்காடிகள், தள்ளுபடி கடைகள், மளிகைக் கடைகள், சிறப்புக் கடைகள் என பல வகையான வியாபார நிறுவனங்களும் அமைந்திருக்கின்றன. மேற்கு சிட்னி பிராந்தியத்தில் தமிழ், இலங்கை, இந்திய வியாபார நிலையங்கள் அமைந்திருக்கும் ஒரு பகுதியாக பெண்டில் ஹில் குறிப்பிடப்படும்.

போக்குவரத்து

[தொகு]

பெண்டில் ஹில் ரயில் நிலையம் சிட்னி ரயில் வலையமைப்பின் வடக்கு கடற்கரை, வடக்கு மற்றும் மேற்கு தடத்தில் அமைந்துள்ளது. இந்த ரயில் நிலையம் ஏப்ரல் 12, 1924 அன்று திறக்ப்பட்டது.

பள்ளிகள்

[தொகு]

பெண்டில் ஹில் பொதுப் பள்ளி என்ற தொடக்கப்பள்ளியும் பெண்டில் ஹில் உயர்நிலைப்பள்ளி என்ற மேல்நிலைப்பள்ளியும் இந்த பகுதியில் அமைந்துள்ளன.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2008-05-12. பார்க்கப்பட்ட நாள் 2019-11-15.
  2. Karskens, Grace. Holroyd: A Social History of Western Sydney. Kensington, New South Wales: New South Wales University Press, 1991.
  3. The Book of Sydney Suburbs, Compiled by Frances Pollon, Angus & Robertson Publishers, 1990, Published in Australia பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-207-14495-8