பரமட்டா
பரமட்டா நியூ சவுத் வேல்ஸ் | |
சர்ச் வீதி, பரமட்டா | |
மக்கள் தொகை: | 25798 |
அமைப்பு: | 1788 |
அஞ்சல் குறியீடு: | 2150 |
ஆள்கூறுகள்: | 33°48′54″S 151°00′4″E / 33.81500°S 151.00111°E |
உள்ளூராட்சிகள்: | சிட்டி ஆப் பரமட்டா |
பிரதேசங்கள்: | பரந்த மேற்கு சிட்னி |
கவுண்டி: | கம்பலான்ட் |
கோவிற்பற்று: | புனித ஜான் திருச்சபை |
மாநில மாவட்டம்: | |
நடுவண் தொகுதி: | பரமட்டா[4] |
பரமட்டா (Parramatta) என்பது ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் சிட்னி மாநகரத்திற்கு அண்மையாக உள்ள ஒரு புறநகர் ஆகும். இது சிட்னி மத்திய வணிக மாவட்டத்திற்கு சுமார் 24 கிலோமீட்டர்கள் (15 mi) மேற்கே பரமட்டா ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. இது பரந்த பரமட்டா பிராந்தியத்தினதும் பரந்த மேற்கு சிட்னி பிராந்தியத்தினதும் வணிக மையமாக கருதப்படுகிறது. [5]
வரலாறு
[தொகு]பழங்குடியினர்
[தொகு]கதிரியக்கக்கரிமக் காலக்கணிப்பு மூலமான ஆய்வுகளில் இருந்து சுமார் 30,000 ஆண்டுகளுக்கு முன்பு இருந்தே பரமட்டாவில் மனிதர்களின் செயற்பாடுகள் நிகழ்ந்ததாகக் அறியக்கிடைக்கிறது. ஐரோப்பிய குடியேற்றத்திற்கு முன்னர் இப்பகுதியில் வாழ்ந்த தாருக் மக்கள் இப்பகுதியை நதி மற்றும் காடுகளிலிருந்து கிடைக்கும் உணவுகளால் நிறைந்ததாகக் கருதினர். அவர்கள் அந்த பகுதியை பரமடா அல்லது புர்ராமட்டா என்று அழைத்தனர்.
ஐரோப்பியர்
[தொகு]பரமட்டா 1788ம் ஆண்டில் நிறுவப்பட்டது. அதே வருடத்தில் நிறுவப்பட்ட சிட்னியை விட 10 மாதங்கள் மட்டுமே இளமையாக இருப்பதால், பரமட்டா ஆஸ்திரேலியாவின் இரண்டாவது பழமையான நகரம் ஆகும்.
1797ல் இடப்பெற்ற பரமட்டா போர், பழங்குடி மக்களின் எதிர்ப்புப் போர்களில் முக்கியமான ஹோக்ஸ்பெரி மற்றும் நேப்பியன் போர்களின் ஒரு முக்கியமான போராக கருத்ப்படுகிறது. பழக்குடி மக்களின் எதிர்ப்புக்கு தலைமை தாங்கிய பமுல்வே பிட்ஜிகல் வீரகளுடன் அரசாங்க பண்ணையை தாக்கினார். இந்த தாக்குதலில் குறைந்தது 100 வீரர்கள் பக்குபற்றியிருக்காலம் என்று மதிப்பிடப்படுகிறது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Parramatta". New South Wales Electoral Commission. 24 March 2007. பார்க்கப்பட்ட நாள் 2 October 2008.
- ↑ "Baulkham Hills". New South Wales Electoral Commission. 24 March 2007. பார்க்கப்பட்ட நாள் 2 October 2008.
- ↑ "Granville". New South Wales Electoral Commission. 24 March 2007. பார்க்கப்பட்ட நாள் 2 October 2008.
- ↑ "Parramatta". Australian Electoral Commission. 19 October 2007. Archived from the original on 26 February 2009. பார்க்கப்பட்ட நாள் 2 October 2008.
- ↑ "What's Next for Sydney's Second CBD". பார்க்கப்பட்ட நாள் 1 February 2018.