பெட்ரிக் சிமேத்தானா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பெட்ரிக் சிமேத்தானா
Bedřich Smetana Edit on Wikidata
பிறப்பு2 மார்ச்சு 1824
Litomyšl
இறப்பு12 மே 1884 (அகவை 60)
பிராகா
கல்லறைVyšehrad cemetery
பணிஇசையமைப்பாளர், pianist
சிறப்புப் பணிகள்See list of compositions by Bedřich Smetana
பாணிsymphonic poem
கையெழுத்து

பெட்ரிக் சிமேத்தானா (Bedřich Smetana - 2 மார்ச் 1824 – 12 மே 1884) மிகவும் குறிப்பிடத்தக்க ஒரு செக் இசையமைப்பாளர் ஆவார். இவரது சிம்பொனிப் பாடலான வஸ்த்தாவா (Vltava), இவரது ஆக்கங்களான எனது நாடு (Má vlast), விற்கப்பட்ட மணப்பெண் (Prodaná nevěsta) போன்றவை மிகவும் புகழ் பெற்றவை.

வரலாறு[தொகு]

சிமெத்தானாவின் தந்தை அக்காலத்தில் ஆஸ்திரியப் பேரரசின் ஒரு பகுதியாக இருந்த பொஹீமியாவில் உள்ள லித்தோமிஸ் (Litomyšl) என்னும் இடத்தில் ஒரு மதுபான உற்பத்தியாளராக இருந்தார். சிமெத்தானா மிக இளம் வயதிலேயே பியானோ, வயலின் போன்ற இசைக் கருவிகளைக் கற்கத் தொடங்கியதுடன், தனது குடும்பத்தின் பிற உறுப்பினர்களுடன் சேர்ந்து நான்கு நரம்பு இசைக் கருவிகளைக் கொண்டு நடத்தப்படும் இசை நிகழ்ச்சிகளிலும் ஈடுபட்டு வந்தார். 1840 முதல் 1843 வரை பில்சன் என்னும் இடத்தில் உள்ள உயர்நிலைப் பள்ளியொன்றில் சிமெத்தானா கல்வி பயின்றார். தொடக்கத்தில் இவரது தந்தையின் எதிர்ப்பு இருந்தாலும் இவர் பிராக்கில் இசை பயின்றார். பின்னர் பிரபுத்துவக் குடும்பம் ஒன்றில் இசை ஆசிரியராக இவருக்கு வேலை கிடைத்தது. 1848ல் பிராண்ஸ் லிஸ்ட் என்னும் ஹங்கேரிய இசையமைப்பாளரின் நிதி உதவி மூலம் தனியான இசைப் பள்ளி ஒன்றை இவர் தொடக்கினார்.

1855 செப்டெம்பரில் இவருக்கு விருப்பமான இவரது இரண்டாவது குழந்தை, நாலு வயது மகள் பெட்ரிஸ்கா இறந்தது. ஒன்பது மாதத்துக்குப் பின்னர் இன்னொரு குழந்தையும் இறந்தது. சிமெத்தானா தன்னை இசையமைப்பிலேயே ஈடுபடுத்திக் கொண்டார். அவரது ஆக்கங்கள் அவரது சோகத்தை வெளிப்படுத்துவன ஆகவும், வரிகள் அவரது குழந்தைகளின் வாழ்க்கை போலவே சுருக்கமாக நிறுத்தப்பட்டவையாகவும் இருந்தன. 1856ல் இவர் சுவீடனில் உள்ள கொத்தன்பர்க் என்னும் இடத்திற்குக் குடிபெயர்ந்தார். அங்கே இசை கற்பிப்பதிலும், இசை நடத்துவதிலும் ஈடுபட்டார். 1863ல் மீண்டும் பிராக்குக்கு வந்த அவர், சிறப்பாக, செக் இசையை வளர்க்கும் எண்ணத்துடன் புதிய இசைப் பள்ளியொன்றைத் தொடங்கினார்.

1874 ஆம் ஆண்டளவில் இவர் ஓரளவு முற்றாகவே செவிடானார். ஆனாலும் இவர் தொடர்ந்தும் இசையமைப்பில் ஈடுபட்டிருந்தார். எனது நாடு என்னும் இவரது இசை ஆக்கம் இவருக்குச் செவிட்டுத்தன்மை உருவாகத் தொடங்கிய பின்னர் எழுதப்பட்டதே. 1875 ஆம் ஆண்டுக்குப் பின் இவர் பெரும்பாலும் ஜாப்கனீஸ் என்னும் சிறு ஊரிலேயே வாழ்ந்தார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பெட்ரிக்_சிமேத்தானா&oldid=2733767" இலிருந்து மீள்விக்கப்பட்டது